![]()
அருள்வான்: பாக்ஸ் ஆபீஸ் மசாலாக்களை ஓரம் கட்டும் ஒரு எமோஷனல் ரைடு!*
…………………………………………
*ஒன்லைன் : ஒரு குட்டிப் பெண்ணின் மாஸ் பயணம்!*
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழங்குடி கிராமம், காடர் மொழி பேசும் மக்கள் – இதுதான் களம்.
அங்கே படிக்கத் துடிக்கும் கிருத்திகா என்ற குட்டிப் பெண்ணின் கனவுக்கு முட்டுக்கட்டை போடுகிறது சூழல்.
பாரஸ்ட் ஆபீசர் ஜான் விஜய் போடும் வில்லத்தனமான ஸ்கெட்ச்சில், தாத்தா ஏமாந்து போய் தன் உயிரையே விடுகிறார்.
போகும்போது பேத்தியிடம், “படிப்புதான் முக்கியம்” என்ற லட்சிய விதையை விதைத்துவிட்டுப் போகிறார்.
தாத்தாவின் ஆசையை நிறைவேற்றவும், தன் ஊருக்குப் பள்ளிக்கூடம் கொண்டு வரவும், அந்தச் சிறுமி நகரத்தில் உள்ள கலெக்டரைத் தேடி ஒரு அதிரடிப் பயணம் கிளம்புகிறாள்.
அந்தப் பயணம் வெற்றியா இல்லையா என்பதுதான் இந்த ‘அருள்வான்’.
*ஸ்கிரீன் பிரசென்ஸ்: யார் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்?*
செகண்ட் ஹாஃபில் என்ட்ரி கொடுக்கும் கலெக்டர் முத்துவேல் கேரக்டரில் அருள்நிதி செம மெச்சூர்டு பெர்ஃபார்மன்ஸ்!
எந்த அலட்டலும் இல்லாமல், எதார்த்தமான பாடி லாங்குவேஜில் ஒரு நிஜமான கலெக்டரைக் கண்முன்னே நிறுத்துகிறார்.
நமக்கு இப்படி ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் கிடைக்க மாட்டாரா என ஏங்க வைக்கிறார்.
ஆனால், படத்தின் ரியல் ஹீரோ அந்தச் சிறுமி கிருத்திகாதான்!
படிப்புக்காக ஏங்கி, காடர் மொழியில் அவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரில் இருப்பவர்களின் கண்களைக் குளமாக்குகின்றன.
பழங்குடி ஜோடிகளாக வரும் ஆரவ் மற்றும் ரம்யா பாண்டியன் தங்களுக்குரிய ரோலை பக்காவாக டெலிவர் செய்திருக்கிறார்கள். ஜான் விஜய் வில்லத்தனத்தில் மிரட்ட, காளி வெங்கட், விடிவி கணேஷ், சரவணன், வினோதினி கூட்டணியின் சப்போர்ட் கதைக்கு நல்ல பலம்.
*பிஜிஎம் & கேமரா மேஜிக்*
ஜி.வி.பிரகாஷ் குமாரின் மியூசிக் படத்திற்குப் பெரிய பிளஸ் பாயிண்ட்! பாடல்கள் கதையை கெடுக்காமல் இயல்பாக அமைந்து கதையோட்டத்துடன் பயணமாகின்றன .
மலைவாழ் பழங்குடி மக்களின் வலியையும், சிறுமியின் போராட்டத்தையும் உணர்த்தும் காட்சிகளில் பின்னணி இசை பிரமாதப்படுத்துகிறது..
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் தன் கேமரா மூலம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரம்மாண்ட அழகை விசுவலாக அள்ளி வந்திருக்கிறார். அதே நேரத்தில், மக்களின் வறுமையையும், குடிசைகளின் எதார்த்தத்தையும் அப்படியே நேர்மையாகக் காட்டி அப்ளாஸ் வாங்குகிறார். படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஒளிப்பதிவுதான்.
லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் கிரிஸ்ப்பாக எடுபடுகிறது.
*இயக்குநரின் டச்: ரியலிசம்!*
தேன் படத்தில் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கணேஷ் விநாயகன் தந்திருக்கும் மற்றும் ஒரு தரமான படைப்பு அருள்வான்.
காடர் மொழி மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அதிகார வர்க்கத்தால் ஏமாற்றப்படும் வலியையும் ஆழமாகப் பதிவு செய்துள்ளார். டப்பிங் மொழியாக்கம் மற்றும் சில இடங்களில் டாக்குமெண்டரி போன்ற ஃபீல் வருவது சின்ன மைனஸ் என்றாலும், இயக்குநரின் சமூக அக்கறையும் உழைப்பும் அதை மறக்கடித்து விடுகின்றன.
*ஃபைனல் கமெண்ட்*
வழக்கமான ஃபார்முலா சினிமாக்களுக்கு நடுவில், பெண் கல்வியின் தேவையையும் சமூக நீதியையும் எமோஷனலாகப் பேசும் ஒரு தரமான படைப்பு இந்த ‘அருள்வான்’.
தியேட்டரில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம்!


