Tuesday, October 6

அன்யா டுட்டோரியல்ஸ் விமர்சனம்

Loading

அன்யா டுட்டோரியல்ஸ் விமர்சனம்

ஒரு படத்தைத் துவக்குவது என்பது மகத்தான கலை. சடாரென எதையாவது காட்டி படத்தை ஆரம்பித்துவிடக்கூடாது. குறிப்பிட்ட பாத்திரத்துக்காக கேமிரா காத்திருக்க வேண்டும். அந்த பாத்திரம் வந்ததும் மளமளவென கதையை சொல்ல ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறார் நியூயார்க் டைம்ஸ் இதழின் சினிமா விமர்சகர்.

அனன்யா டுட்டோரியல்ஸ் படத்தின் ஆரம்ப காடசி எப்படி தெரியுமா.

இளம் பெண் ஒருத்தி ஓடுகிறாள் …..ஓடுகிறாள் ஓடிக்கொண்டே இருக்கிறாள் அநதப்பாதை முடிவே இல்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது.

ஆஹா தயாரிப்பில் வந்திருக்கும் புதிய ஹாரர் தொடரின் கதை என்ன

கொரோனா காலகட்டத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக நிவேதிதா தனது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்குகிறார். கோவிட் ஊரடுங்கு அறிவிக்கப்படும் நேரமும் இதுதான்.

அவர் வேலைக்காக அன்யாஸ் டுடோரியல் என்ற இன்ஸ்டா வகுப்பை தொடங்குகிறார். அவர் வீட்டில் சில அமானுஷ்ய விசயங்கள் நடக்கின்றன.

இந்த அமானுஷ்ய சம்பவங்கள் நிவேதிதா வாழ்க்கையில் எந்த வகை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை த்ரிலிங்காக சொல்வதுதான் அன்யா டுட்டோரியல்ஸ்.

நிவேதிதாவை மையப்படுத்தியே கதை விறுவிறுப்பாக செல்கிறது.மற்றும் ஒரு முக்கிய பாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா வருகிறார்.

பல்லவி கங்கிரெட்டிஇயக்கியிருக்ககும் இத்தொடரின் காட்சியமைப்பு, விஷூவல் எஃபெக்ட்ஸ், பிரமாதம்.

பின்னணி இசையில் பின்னி எடுக்கிறார் இசையமைப்பாளர்.