ARM விமர்சனம்

0

Loading

அஜயண்டே ரெண்டாம் மோஷனம்’ (ARM) விமர்சனம்

மூன்று தலைமுறை வரலாறு, அமானுஷ்யம், சமூக நிகழ்வுகள் என அனைத்தையும் கலந்து, சுவாரஸ்யமாக. திரையில் கொடுக்கப்பட்டிருக்கும் படம்தான்  ARM அதாவது ‘அஜயண்டே ரெண்டாம் மோஷனம்’.

கேரள மாநிலத்தின் ஒரு சின்ன கிராமம். அங்கு பாட்டி, தாய் ஆகியோருடன் வசிக்கிறார், இளைஞர், happy wheels அஜயன். எலக்ட்ரிக் வேலைதான் அவர் தொழில். அவ்வப்போது மாணவர்களுக்கு பாடமும் சொல்லித் தருகிறார்.

ஆனால் சாதி ரீதியாகவும், திருட்டுப் பரம்பரை என்றும் ஊர் மக்களால் அவமானப்படுத்தப்படுகிறார்.

அந்த ஊர் ஜமீன் குடும்பத்துப் பெண்ணான லட்சுமிக்கும் இவருக்கும் காதல்.

இந்த நிலையில் கிராமத்து கோயிலைப் படமெடுக்க வந்திருக்கும் சுதேவ், ஊர் கோவிலில் உள்ள அதிசய விளக்கை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

மூன்று கெட் அப்களில் வருகிறார், டொவினோ தாமஸ். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வேறுபாட்டினை காட்டி நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

குறிப்பாக மீசையை கை விரல்களால் நீவி மேனரிசத்தை வெளிப்படுத்துவது பிரமாதம்.

அதே போல சண்டைக் காட்சிகளிலும் தூள் பரத்தி இருக்கிறார். முரட்டுத்தனமான அந்தக் கால இளைஞன் கதாபாத்திரத்திலும், ஆதங்கத்துடன் அலையும் இந்தக்கால இளைஞன் கதாபாத்திரத்திலும் நடித்தவர் ஒரே நடிகர்தானா என்று யோசிக்க வைக்கிறார்.

மூனறு கதாநாயகிகளில் கீர்த்தி ஷெட்டி, ஜாலியான காதலியாக வந்துபோகிறார். . ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்ச நேரமே வந்தாலும் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். சுரபி லக்ஷ்மி, நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

தொய்வில்லாத திரைக்கதை படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. ஜோமோனின் ஒளிப்பதிவு சிறப்பு. குறிப்பாக அந்த அருவி காட்சி கண்களிலேயே நிற்கிறது.

அதே போல, திபு நினான் தாமஸின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

மொத்தத்தில் அனைவரும் ரசித்துப் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Share.

Comments are closed.