Thursday, November 26

Blog

பராசக்தி திரைப்பட வெளியீட்டைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

பராசக்தி திரைப்பட வெளியீட்டைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

News
பராசக்தி திரைப்பட வெளியீட்டைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது! சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மாண்புமிகு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பினரின் விரிவான வாதங்களைக் கேட்ட பிறகு, மாண்புமிகு நீதிமன்றம் பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுக்க மறுத்துவிட்டது. படம் 10.01.2026 அன்று வெளியாகும். இயக்குநர் சுதா கொங்கரா சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டிக்கனும் ஆஜராகினர்....
ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் மலையாள சீரிஸ் “ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்”!

ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் மலையாள சீரிஸ் “ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்”!

News
ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் மலையாள சீரிஸ் "ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்" படப்பிடிப்பு துவங்கியது ! ZEE5 நிறுவனம் தனது அடுத்த அதிரடி இருமொழி (தமிழ் – மலையாளம்) ஒரிஜினல் சீரிஸான "ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்" ( “Once Upon A Time in Kayamkulam” )சீரிஸின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த சீரிஸ் புத்தாண்டை முன்னிட்டு ZEE5 தளத்தில் வெளியாக உள்ளது. Rise East Production House தயாரிப்பில், அமீன் பாரிஃப் இயக்கத்தில் உருவாகும் இந்த சீரிஸ், முழுக்க மண் மணம் கமழும் ஹைஸ்ட் காமெடி (Heist Comedy) ஜானரில் உருவாகவுள்ளது. இந்த சீரிஸ் நகைச்சுவை, பரபரப்பான திருப்பங்கள் மற்றும் இன்றைய OTT ரசிகர்களை கவரும் நவீன கதை சொல்லல் ஆகியவை இணைந்து, தனித்துவமான அனுபவத்தை வழங்கும். இந்த சீரிஸில் அன்புசெல்வன், சுபாஸ், ரமேஷ் மாதவன், வின்சு ரேச்சல், ராகேஷ் உசார், கௌதமி நாயர், சாவித்ரி, வ...
ஜனவரி 23 அன்று திரைக்கு வரும் “மாயபிம்பம்”!

ஜனவரி 23 அன்று திரைக்கு வரும் “மாயபிம்பம்”!

News
2005-ஆம் ஆண்டின் காதல் கதை “மாயபிம்பம்” – ஜனவரி 23 அன்று திரைக்கு வருகிறது ! “மாயபிம்பம்” 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம். K.J. சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம், Self Start Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜானகி, ஆகாஷ், ஹரிகிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் சிறப்பம்சமாக, நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பக் குழுவும் முழுவதுமாக புதிய முகங்களைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் ஆகியோர் தங்கள் முதல் முயற்சியாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர். 2005-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் காதல் கதை, அந்த காலத்து உணர்வுகளையும் ...
புதுமையான ரொமாண்டிக் எண்டர்டெய்னர்  ‘ஹால்’

புதுமையான ரொமாண்டிக் எண்டர்டெய்னர் ‘ஹால்’

News
'ஹால்' திரைப்படம் மூலம் தமிழில் கால் பதிக்கும் The Madras Story தயாரிப்பு & வினியோக நிறுவனம்! காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் மனதை மகிழ்விக்கும் தருணங்களை அழகாக இணைக்கும் ஒரு புதுமையான ரொமாண்டிக் எண்டர்டெய்னர்!!! திரு. அபிமன்யு அவர்களால் துவங்கப்பட The Madras Story தயாரிப்பு & விநியோக நிறுவனம் தமிழில் முதல் முறையாக ஹால் திரைப்படத்தின் மூலம் களம் இறங்கியுள்ளது. ஜூபி தாமஸ் தயாரிப்பில், ஷேன் நிகம் நாயகனாக நடிக்க உருவாகியுள்ள இந்த ஹால், படத்தின் மூலம் வீரா இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு மனதை கவரும் இசையை தந்திருக்கிறார் வி. நந்தகோபன். மென்மையான, சொல்லப்படாத காதலை, வண்ணமயமான காட்சிகள், இனிமையான இசை மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்களின் மூலம் இப்படம் வெளிப்படுத்துகிறது. கிறிஸ்மஸ் வெளியீடாக அமைந்துள்ள ஹால், குடும்பங்களுக்கும் காதல் ஜோடிகளுக்கும் இ...
ZEE 5- தளத்தில் ஒளிபரப்பாகும் ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா!

ZEE 5- தளத்தில் ஒளிபரப்பாகும் ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா!

News
தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை : ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது ! தமிழ் ரசிகர்களுக்காக ZEE5 ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை வழங்குகிறது. தளபதி விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது. H. வினோத் இயக்கத்தில், KVN புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன், அரசியல் பின்னணியுடன் கூடிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும். தளபதி விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். KVN நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம், நடிகர...
லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’ – முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் வெற்றிமாறன்!

லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’ – முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் வெற்றிமாறன்!

News
'லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’ – முதல் பார்வையை வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்! பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’ . படத்தின் முதல் பார்வை (First Look) இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது படக்குழுவினருக்கு மிக முக்கிய தருணமாக மாறியிருக்கிறது. படத்தின் நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களை நேரில் சந்தித்து, படத்தின் முதல் பார்வை போஸ்டரையும், படத்திலிருந்து சில காட்சிகளையும் அவருக்கு காண்பித்தனர். காட்சிகளை பார்த்து படக்குழுவின் உழைப்பை பாராட்டினார். மேலும், இப்படம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு படத்திற்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறனுக்கு படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். ‘லட்சுமிகாந்தன் க...
U/A சான்றிதழ் பெற்ற ‘திரெளபதி 2’ திரைப்படம்!

U/A சான்றிதழ் பெற்ற ‘திரெளபதி 2’ திரைப்படம்!

News
நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் 'திரெளபதி 2' திரைப்படம் U/A சான்றிதழ் பெற்று வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது! மோகன் ஜி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வரலாற்று ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள 'திரெளபதி 2', மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) வெற்றிகரமாக U/A சான்றிதழைப் பெற்று, திரையரங்க வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசுதன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் நடித்துள்ளனர். நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படம் 14 ஆம் ...
‘ரூட் ‘ படத்தின்  முதல் பார்வையை வெளியிட்ட ரஜினிகாந்த்!

‘ரூட் ‘ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட ரஜினிகாந்த்!

News
கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ரூட் ‘ROOT – Running Out of Time’ முதல் பார்வையை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த தருணம் படக்குழுவினருக்கு மறக்க முடியாத, பெருமைமிக்க நினைவாக அமைந்தது. ‘ROOT’ படத்தின் முதல் பார்வை மற்றும் சில முக்கிய காட்சிகளை தலைவருக்கு நேரில் காண்பிக்கப்பட்டது. காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும், இப்படம் சிறப்பான வெற்றியை பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அற...
உலக சாதனைகளை படைத்த நடிவிஜய் விஷ்வாவின் ‘விவி என்டர்டைன்மென்ட்ஸ்’!

உலக சாதனைகளை படைத்த நடிவிஜய் விஷ்வாவின் ‘விவி என்டர்டைன்மென்ட்ஸ்’!

Uncategorized
இரண்டு உலக சாதனைகளை படைத்த நடிகர் விஜய் விஷ்வாவின் 'விவி என்டர்டைன்மென்ட்ஸ்'! VV Entertainments நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது அதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு many faces one voice - stop violance against her என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் உள்ள தி அமெரிக்கன் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. VV எண்டர்டெயின்மெண்ட்ஸ், DARS எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) மற்றும் தி அமெரிக்கன் கல்லூரி இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப் பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. பெண்கள் மாணவர் நலன் டீ...
Panther Club திறப்பு விழாவில் ஷாருக் கான் கலந்துகொண்ட ஷாருக்கான்!

Panther Club திறப்பு விழாவில் ஷாருக் கான் கலந்துகொண்ட ஷாருக்கான்!

News
துபாயில் கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) க்கு சொந்தமான புதிய பாந்தர் கிளப் Panther Club ஐ, திறந்து வைத்த  கிங் கான் ஷாருக்கான் !  துபாயில் Kannan Ravi Group நிறுவனத்திற்கு சொந்தமான புதிய பிரம்மாண்ட பொழுதுபோக்கு மையமான Panther Club-ஐ, கிங் கான்  ஷாருக் கான் நேற்று திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்வு, துபாயின் நைட்லைஃப் வரலாற்றில் முக்கியமான தருணமாக மாறி, புத்தாண்டு கொண்டாட்டங்களின் உச்சமாக அமைந்தது. துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group), வணிகம், ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் (Hospitality), பொழுதுபோக்கு மற்றும் லக்ஷரி சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. தரமான சேவை, நவீன அணுகுமுறை மற்றும் சர்வதேச தரத்திலான நிர்வாக முறைகள் ஆகியவற்றின் மூலம், இந்த குழுமம் துபாயின் வளர்ந்து வரும் வணிக...
CLOSE
CLOSE