Thursday, November 26

Blog

GKB புரொடக்ஷன்ஸ் படப்பிடிப்பை துவக்கி வைத்த மாரி செல்வராஜ்!

GKB புரொடக்ஷன்ஸ் படப்பிடிப்பை துவக்கி வைத்த மாரி செல்வராஜ்!

News
 GKB புரொடக்ஷன்ஸ் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் கிளாப் அடித்து துவங்கி வைத்தார்! கணேஷ் கே. பாபு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் GRK19 என்ற தற்காலிகப் பெயரிடப்பட்ட தலைப்பு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு 8.12.2025 தொடங்கியது. அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. புகழ்பெற்ற திரைப்படத் இயக்குனர் மாரி செல்வராஜ் முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, முழு குழுவினருக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்து, முதல் ஷாட் கிளாப் அடித்து படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அவரது வருகை மற்றும் பாராட்டு, GRK19 குழுவினருக்கு மிகுந்த ஊக்கத்தை சேர்த்தது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தங்களை வாழ்த்தியதற்கு இயக்குனர் மாரி செல்வராஜுக்கு படக்குழுவினர் மனமார்ந்த நன்றியைத் தெ...
அமெரிக்காவில் வசிக்கும் தமிழர் ஹரிஹரசுதன் நாகராஜன் இயக்கி தயாரித்த ஆங்கிலப் படம்!

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர் ஹரிஹரசுதன் நாகராஜன் இயக்கி தயாரித்த ஆங்கிலப் படம்!

News
'டெதர்' - 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் போட்டியிடும் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம்! *அமெரிக்காவில் வசிக்கும் சென்னையை சேர்ந்த தமிழர் ஹரிஹரசுதன் நாகராஜன், ‘டெதர்’ மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்துள்ளார்* ஹாலிவுட் சுயாதீன திரைப்படமான ‘டெதர்’, 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் (CIFF) உலக சினிமா போட்டிக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஹரிஹரசுதன் நாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் இரு முறை திரையிடப்படுகிறது. டிசம்பர் 14 அன்று காலை 10:00 மணிக்கு சத்யம் சினிமாஸ் சீசன்ஸ் அரங்கிலும் டிசம்பர் 18 அன்று காலை 9:45 மணிக்கு ஐநாக்ஸ் சிட்டி சென்டரில் ஸ்க்ரீன் 1லும் 'டெதர்' திரையிடப்படும். அங்கஸ் ஹூவோராஸ் எழுத்தில் ஹரிஹரசுதன் நாகராஜன் இயக்கி தயாரித்துள்ள‌ ‘டெதர்’, ...
2026 ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகும் ரொமான்டிக் லவ் ஸ்டோரி ‘டியர் ரதி’ !

2026 ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகும் ரொமான்டிக் லவ் ஸ்டோரி ‘டியர் ரதி’ !

News
காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? பாடம் சொல்லும் 'டியர் ரதி' திரைப்படம்! 'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் 'டியர் ரதி'. இந்தப் படத்தை 'இறுதிப் பக்க'த்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இயக்கியுள்ளார். படத்தின் கதை எதைப் பற்றிப் பேசுகிறது?என்பதைப் பற்றி இயக்குநர் பேசும்போது, "இன்றைய சூழலில் ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான ஒத்த அலை வரிசை மனம் கொண்ட எதிர்பாலின நட்பைத் தேடினால் அடைவது சுலபம். அந்த நட்பு காதலாவது கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமல்ல, மிகக்கடினம். அப்படிப் பிறரிடம் பேசத் தயங்கும் -குறிப்பாகப் பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபன் ஸ்பா போன்ற ஓர் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து 'டேட்டிங்'கிற்காக வெளியே அழைத்துச் செல்கிறான் .அதே நாளி...
23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்கம்!

23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்கம்!

News
சென்னை, டிசம்பர் 11: தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது. சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் செய்தி துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடிகை சிம்ரன், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழாவில் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் இருந்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- சென்னையில் நடைபெற...
சென்னையை சேர்ந்த சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக் ’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா!

சென்னையை சேர்ந்த சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக் ’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா!

News
சென்னையை சேர்ந்த சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக் ’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா! அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது. மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா. இவரது வலிமிகுந்த வெற்றி வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல கர்னாடகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தது. காஜிமாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் ஆக உருவாகும் இந்த படத்துக்கு 'தி கேரம் குயின்' என பெயரிட்டு இன்று பிரமாண்டமாக பூஜையுடன் பட...
சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்கியது!

சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்கியது!

News
கோவில்பட்டியில் தொடங்கியது சிம்புவின் அரசன் படப்பிடிப்பு! வடசென்னை உலகம் பெரிதாகிறது: வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர் – கலைப்புலி s தாணு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'அரசன்' படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது வடசென்னை என்னும் வெற்றி படத்தின் பிரபலமான உலகத்திலிருந்து உருவாகும், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'அரசன்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அனைவராலும் பாராட்டப்படும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தில், சிலம்பரசன் டிஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். டிசம்பர் முதல் வாரத்தில் கோவில்பட்டியில் தொடங்கிய அரசன் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடரும். வெற்றிமாறனின் பாணியில் அரசன் படத்தில் உள்ள முக்கியமான காட்சிகளை குழுவினர் தற்போது படமாக்...
’29 ‘படத்தின் டைட்டில் லுக் வெளியீட்டு விழா!

’29 ‘படத்தின் டைட்டில் லுக் வெளியீட்டு விழா!

News
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும்' 29 'படத்தின் டைட்டில் லுக் வெளியீட்டு விழா! நடிகர் விது கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, '29' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் '29' எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் கவனிக்க பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ரொமாண்டிக் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் எஸ் ...
டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகும்சிவராஜ்குமாரின் “45: த மூவி” !

டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகும்சிவராஜ்குமாரின் “45: த மூவி” !

News
கருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது! சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பு “45: த மூவி” — கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர்-இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குனர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்த படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையிட தயாராகியுள்ளது. ஏற்கனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றாக “45: த மூவி” — கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் டிரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக அறிம...
‘ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவு!

‘ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவு!

News
எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது ! *45 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்திய “ கிராண்ட் பாதர் “ ( GRAND FATHER) படக்குழு !!* குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம் சேர்ந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ர...
STEPHEN EMERGES AS ONE OF THE STANDOUT TAMIL PSYCHOLOGICAL THRILLER!

STEPHEN EMERGES AS ONE OF THE STANDOUT TAMIL PSYCHOLOGICAL THRILLER!

Uncategorized
STEPHEN EMERGES AS ONE OF THE STANDOUT TAMIL PSYCHOLOGICAL THRILLERS ON NETFLIX, TRENDS ON THE GLOBAL TOP 10 LIST! Mumbai: What began as an intriguing Tamil psychological drama has, in just one week, transformed into an unexpected global talking point. Netflix’s Stephen is now trending at #7 on the Global Top 10 Films (Non-English) list, across 10 countries, including India, Bangladesh, Bahrain, Sri Lanka, Maldives, the UAE, and Mauritius among others. What’s powering Stephen’s word of mouth is the intensity of the positive audience reactions, with viewers praising Gomathi’s gripping performance and late-night audiences sharing emotional takeaways from the film.This ongoing wave of compelling reviews is also drawing in crime-thriller fans, adding further momentum to the film. The authent...
CLOSE
CLOSE