Thursday, November 26

Blog

Heartiley Battery_ விமர்சனம்

Heartiley Battery_ விமர்சனம்

News
Heartiley Battery_ விமர்சனம் சிறுவயதிலிருந்தே அறிவியலில் ஆர்வம் கொண்ட பாடினி குமார், லவ் மீட்டர் என்ற ஒரு வித்தியாசமான மிஷினை கண்டுபிடிக்கிறார். அதாவது ஓர் ஆணோ அல்லது பெண்ணோ இந்த மெஷினில் குறிப்பிட்ட இடத்தில் விரலை வைத்தால், அவரது காதல் பார்ட்னர் மீது அவர் எத்தனை சதவீதம் காதல் கொண்டிருக்கிறார் என்பதை இந்த மிஷின் துல்லியமாக காட்டிவிடுமாம் (!) கேலிச் சித்திர வரைபடக் கலைஞனான குரு லஷ்மன் இந்த மெஷின் தவறானது என்று வாதம் செய்கிறார். மனித மனத்தின் காதல் உணர்வுகளை ஒரு மிஷினால் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று கேட்கிறார அவர். இருவருக்கு இடையே ஏற்படும் வாக்குவாதம் ஒரு சவாலாகவே மாறுகிறது. அதாவது குரு லக்ஷ்மன், பாடினி குமார் தன்னை காதலிப்பார் என்றும், அவரை தன்னால் காதலிக்க வைக்க முடியும் என்றும் சவால் விடுகிறார். அது மட்டும் நடக்கவே நடக்காது என்று எதிர் சவால் விடுகிறார் பாடினி...
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறிய ‘மகா சேனா’!

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறிய ‘மகா சேனா’!

News
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறி உள்ளது மகா சேனா! மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில், நடிகர் விமலின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவான மகா சேனா திரைப்படம் 12.12.2025 அன்று உலகெங்கும் வெளியானது. இயற்கையையும் தெய்வத்தையும் வணங்கும் ஒரு மனித குலம், அதை அழிக்க நினைக்கும் இன்னொரு கூட்டம் என்று ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் காடு சார்ந்த ஆக்சன் திரில்லர் படமான மகாசேனா திரைப்படம், திரையிட்ட திரையரங்குகளி லெல்லாம் குடும்பங்களின் பேராதரவுடன் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 264 திரையரங்குகளில் மகா சேனா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விமல் நடித்து வெளியான ஒரு படம், இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை. மேலும் குலதெய்வ வழிபாடு, சமத்துவம், மனிதம் ஆகிய பல ...
மாண்புமிகு பறை _ விமர்சனம்

மாண்புமிகு பறை _ விமர்சனம்

Reviews
மாண்புமிகு பறை_ விமர்சனம் நண்பர்களான லியோ சிவகுமார் மற்றும் ஆர்யன் இருவரும் ஆதி பறை இசைக் குழு என்ற பெயரில் பறை இசைக் குழு ஒன்றை நடத்தி வருகின்றனர். பறை வாசிப்பதை வெறும் தொழிலாக மட்டும் செய்யாமல் ஆத்மார்ந்தமாக அதைச் செய்யும் இவர்கள், ஆர்வம் உள்ளவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றனர். எவ்வளவு பணம் கிடைத்தாலும் இறந்தவர் வீட்டிலும்,ஈமக் கிரியை நடக்கும்போதும் பறை இசை வாசிக்கச் செல்லக் கூடாது என்பதை கொள்கையாக வைத்திருக்கும் இவர்கள் மீது ஆதிக்க சக்திகள் கடும் கோபத்தில் இருக்கின்றன. பக்கத்து ஊரில் ஒரு விழாவுக்கு வாசிக்கச் செல்லும்போது, குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முற்பட்டவர்களை தட்டிக் கேட்டதால், ஆர்யன் கொல்லப்படுகிறார். ஆதிக்க ஜாதியை சேர்ந்த காயத்ரி ரெமோ காதலித்து திருமணம் செய்து கொண்ட லியோ சிவகுமாரும் ஒரு கட்டத்தில் கொலை செய்யப்படுகிறார். பறை இசைக் கல...
அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ( Million Dollar Studios )- வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்கும் அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நிமிஷா சஜயனும் நடித்துள்ளனர். அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் மிக அதிக பெரும் பொருட்செலவில் உருவ...
VELS வர்த்தக மையம் திரைப்பட நகரம் திறப்பு விழா!

VELS வர்த்தக மையம் திரைப்பட நகரம் திறப்பு விழா!

News
  VELS கல்விக் குழுமம் மற்றும் நிறுவனங்களின் சார்பாக சென்னை, செம்பரம்பாக்கத்தில் VELS வர்த்தக மற்றும் மாநாட்டு மையம், VELS திரைப்பட நகரம் மற்றும் VELS திரையரங்குகளுக்கான திறப்பு விழா, கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட, பத்ம பூஷண் டாக்டர் கமல்ஹாசன், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) அவர்களின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் கமல்ஹாசனின் வருகை இந்த நிகழ்விற்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்தது. சினிமா, கலைகள் மற்றும் அறிவு சார்ந்த தொழில்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், தன்னை "சினிமாவின் குழந்தை" என்றும், தனது அடையாளத்தையும் சாதனைகளையும் வடிவமைத்ததற்காக சினிமாவிற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர், சென்னை, பான்-இந்திய சினிமா உருவாக்கத்திற்கான பிறப்பிடமாகவும், உண்மையான மையமாகவும்...
மகா சேனா _ விமர்சனம்

மகா சேனா _ விமர்சனம்

Reviews
மகா சேனா _ விமர்சனம் குரங்கணி மலையின் அடிவாரம் பகுதியில் வசிப்பவர்களுக்கும், மலையின் அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் தீராப் பகை காலம் காலமாக இருந்து வருகிறது. குரங்கணி யாளீஸ்வரர் திருவிழாவை சிறப்பாக கொண்டாட ஊர் மக்கள் முடிவு செய்கின்றனர். ஊர்த் தலைவர் விமல் அவரது மனைவி சிருஷ்டி டாங்கே விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, யாழி சிலையை கடத்த வில்லன் கபி துஹான் சிங் முயற்சிக்கிறார். அவருக்கு துணையாக வன அதிகாரி ஜான் விஜய் சதி வேலைகளில் ஈடுபடுகிறார். கடத்தல் கும்பலின் கைக்கு யாழி சிலை சென்றதா? ஊர் திருவிழா சிறப்பாக நடந்ததா? என்பதை சொல்லும் படம்தான் மகாசேனா. நல்லதொரு கதை கருவாக அமைந்தும் அதை சுமாரான திரைக்கதையால் சாதாரண படமாக்கி விட்டார் இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன். படத்தின் கதை வசனத்தை எழுதி இருப்பவரும் இவரே. படத்தில் பாராட்டத்தக்க அம்சம் டி.ஆர். மனஸ் பாபுவின் ...
தூள்பேட் இணைய தொடர் _ விமர்சனம்

தூள்பேட் இணைய தொடர் _ விமர்சனம்

Reviews
தூள் பேட் இணைய தொடர் _ விமர்சனம் தூள் பேட் நகரில் உள்ள காவல் நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாட ஏற்பாடுகள் நடக்கின்றன. அங்கு பெண் காவலராக பணியாற்றும் பாடினி குமாருக்கு, பின்னர் நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே அவரது மனக்கண்ணில் தெரிகிறது. இந்த சூழலில் தூள்பேட் காவல் நிலையத்தில் உதவி ஆணையராக புதிதாக பொறுப்பேற்க அஸ்வின் குமார் வருகிறார். இந்த நிலையில் மூன்று தலைகள் துண்டிக்கப்பட்டு கொலைகள் நடப்பதாக பாடினி குமார் மணக்கண்ணில் தோன்றுகிறது. ஊரில் பெரிய ரவுடியான ரத்தினத்தின் தலையை சகோதரர்கள் இருவர் வெட்டி எடுத்து வந்து காவல் நிலையத்தில் சரண் அடைகின்றனர். மற்றொரு தலை குப்பை மேட்டில் கிடைக்கிறது. மூன்றாவது தலை சரக்கு ஏற்றிச்செல்லும் மீன் பாடி வண்டி விபத்துக்குள்ளாகும் போது அதிலிருந்து விழுகிறது. துண்டிக்கப்பட்ட இந்த மூன்று தலைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? புதிதாக பொறுப...
’மெஜந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

’மெஜந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

News
நடிகர் சாந்தனு பாக்யராஜின் ’மெஜந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது! பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜெ பி லீலாராம், ராஜு க, சரவணன் பா, மற்றும் ரேகா லீலாராம், ஆகியோர் இணைந்து, இயக்குநர் பரத் மோகனின் ’மெஜந்தா’ படத்தின் வசீகரமான முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எளிய பூஜையுடன் ‘மெஜந்தா’ படக்குழு படப்பிடிப்பை தொடங்கியது. தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அடர்த்தியான மெஜந்தா வண்ணம் படத்தின் மையக்கருவான ‘மனதின் வண்ணங்களில் இருந்து பிறந்த காதல்’ என்பதை பிரதிபலிக்கிறது. ஒ௫ அரிதான காதல் கதையாக ‘மெஜந்தா’ உருவாகியுள்ளது. நுணுக்கமான கதைசொல்லலுக்கு பெயர...
தனுஷ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் டிரெய்லர்!

தனுஷ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் டிரெய்லர்!

News
நடிகர் விக்ரம் பிரபு &  LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படத்தின் டிரெய்லர் கோவை GRD கல்லூரி  மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் சமூகவலைத்தளத்தில் இன்று வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். . கோவை GRD கல்லூரியில் இப்படத்தின் டிரெய்லர் பிரத்தியோகமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் படக்குழுவினர் கலந்துகொள்ள,ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இப்படத்தின் ட...
Sun NXT-இல் டிசம்பர் 19 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘உன் பார்வையில்’ !

Sun NXT-இல் டிசம்பர் 19 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘உன் பார்வையில்’ !

News
பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ படத்தை – Sun NXT-இல், டிசம்பர் 19 முதல் கண்டுகளியுங்கள் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ – Sun NXT-இல் டிசம்பர் 19 முதல் நேரடியாக ஸ்ட்ரீமிங் ஆகிறது ! தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு அதிரடியான திரில்லரை சேர்த்துள்ளது. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT-இல் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம். இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. தன்னுடைய ...
CLOSE
CLOSE