Thursday, November 26

Blog

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’!

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’!

News
‘வரும் வெற்றி’ இசை ஆல்பம் மூலம் இயக்குநராக மாறிய நடிகர் ஷாம்! தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, ‘வரும் வெற்றி’ என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம். SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார். கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம். பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. *தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்* இயக்கம் ; ஷாம் ஒளிப்பதிவு ; K.A.சக்த...
பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்ட்ட ‘நாகபந்தம்’ படத்தின் கிளைமேக்ஸ்!

பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்ட்ட ‘நாகபந்தம்’ படத்தின் கிளைமேக்ஸ்!

News
நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம்! அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’  படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான  முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது. இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டி,  மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பான்-இந்தியா ரிலீசுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருட்செலவிலான ஆக்சன் பிளாக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அபிஷேக் நாமாவின் கனவுப் படைப்பாகிய ‘நாகபந்தம்’ படத...
திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சாரவணன் ஐயா (86) இன்று அதிகாலை காலமானார்!

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சாரவணன் ஐயா (86) இன்று அதிகாலை காலமானார்!

News
தமிழ் திரையுலகின் மிகப் பெரிய தூண்களில் ஒருவராக திகழ்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சாரவணன் ஐயா (86) இன்று அதிகாலை வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் . இந்திய திரையுலகில் ஒரு யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இழப்பாக அவரது மறைவு கருதப்படுகிறது. நேற்று தான் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்த ஏ.வி.எம். சாரவணன் ஐயா, பல தலைமுறைகளுக்கு திரை உலகை வடிவமைத்த எண்ணற்ற வெற்றிப் படங்களை ஏ.வி.எம். நிறுவனத்தின் கீழ் உருவாக்கிய முக்கிய சக்தியாக இருந்தார். தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அளவிட முடியாதவை. அவரது உடல் இன்று மாலை 3.30 மணி வரை, ஏ.வி.எம். ஸ்டுடியோஸ், மூன்றாம் தளத்தில் பொதுமக்கள், உறவினர்கள், தொழில்துறை நண்பர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. ஒரு பார்வையாளன், ஒரு வழிகாட்டி, ஒரு முன்னோடி ஆகிய ஏ வி.எம். சரவணன் ஐயாவின் இழப்பு முழுத் திரை...
“99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” என்று வித்தியாசமானப் பெயரில் உருவாகும் தமிழ் படம்!

“99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” என்று வித்தியாசமானப் பெயரில் உருவாகும் தமிழ் படம்!

News
  99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " படத்திற்காக புத்த மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு ! மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படத்திற்கு " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " என்று வித்தியாசமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார். இந்தப் படத்த...
அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு !

அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு !

News
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு ! தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.., நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது.., ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் அனுபவம் தான். என் டி ஆர் உடன் நடிக்க வேண்டும் என நிறைய ஆசைப்பட்டேன், ஆனால் இறைவன் காத்திரு கடவுள் உடன் நடிக்கலாம் என சொன்னார். அது இப்போது நடந்துள்ளது. இப்படத்தில் ஒரு துறவியாக நடித்துள்ளேன். எனக்கு இயக்குநர் போயபாடி சீனு ஒரு அற்புதமான ரோல் தந்துள்ளார். தமிழில் ஏ பி நாகராஜ் போல படம் எட...
எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘அங்கம்மாள்’ திரைப்படம்

எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘அங்கம்மாள்’ திரைப்படம்

News
“நாங்கள் வாழ்ந்ததாக உணர்ந்த ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம்” - இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்! நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் ’அங்கம்மாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று படம் வெளியாகிறது. இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் ஒரு நேர்மையான, கிராமப்புறக் கதையை பெரிய திரைக்குக் கொண்டுவருகிறார். தமிழ்நாட்டு கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தில் ரவிக்கை உடுத்தாத பழக்கம் கொண்டவர் அங்கம்மாள். அவரது மகன் திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவி தாயின் ரவிக்கை அணியாத பழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று கவலைப்படும்போது குடும்பத்தில் எப்படி மோதல் வெடிக்கிறது என்பதை இந்தக் கதை பேசுகிறது. கேட்பதற்கு சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் அடையாளம், கண்ணியம், பெண்மை ம...
இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!

இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!

News
இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்! செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம்.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். புதுமுக நடிகர் - நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர். 2005ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டு, படத்தின் ஒரு‌ பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார். 🔗https://youtu.be/1DR3_njj8Q4?si=6L0kPW...
ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’!

ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’!

News
ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’! வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ளார். வரும் ஜனவரியில் தமிழகமெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தினை கோவையைச் சேர்ந்த ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் எனும் புதிய நிறுவனம் வெளியிடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும் தேயிலைத் தோட்டங்களிலும் இப்படத்தினை படமாக்கி உள்ளனர். இதுவரை வெளிவந்துள்ள பெரும்பாலான படங்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத...
அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவான ‘ஓ…சுகுமாரி’!

அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவான ‘ஓ…சுகுமாரி’!

News
திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன்,மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ...!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது ! சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, இளம் நடிகர் திரு வீர், மற்றும் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெறர சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகிய இருவரும் இணைந்து ஒரு அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் ( Bharat Dharshan) இயக்குகிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி (Maheswara Reddy Mooli) தயாரிக்கிறார். புரொடக்ஷன் நம்பர் 2 “ வாக இப்படம் உருவாகிறது. சிவம் பஜே ( Shivam Bhaje ) வெற்ற...
ரியோ – வர்திகா ஜோடி இணையும் ‘ராம் in லீலா’!

ரியோ – வர்திகா ஜோடி இணையும் ‘ராம் in லீலா’!

News
டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ' ராம் in லீலா' வில் இணையும் ரியோ - வர்திகா ஜோடி! டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு' 'ராம் in லீலா' என பெயரிடப்பட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவிற்கு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் தயாராகும் 'ராம் in லீலா ' எனும் திரைப்படத்தில் ரியோ , வர்திகா, நயனா எல்சா, மா. கா. பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், சண்டை பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன் ஆக...
CLOSE
CLOSE