‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
தலைமுறைகள் கடந்தும் ஃபீல் குட் திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், ரசிகர்களை மகிழ்விக்க ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்.
மாபோகோஸ் கம்பெனி, பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் பிரவீன் சரவணன் பகி...










