டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் ‘கரிகாடன்’!
டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் 'கரிகாடன்'!
கன்னடத் திரையுலகில் இருந்து புதிய இளைஞர்கள் படைப்பாளிகளாக வந்து இப்போது கவனிக்க வைக்கிறார்கள்.அப்படி அவர்களால் உருவாக்கப்பட்ட 'கேஜிஎஃப்', 'காந்தாரா ' படங்கள் பெரிய வெற்றி பெற்றுக் கவனம் ஈர்த்தன. அந்தப் படங்கள் பெற்ற வரவேற்பைப் போலவே கன்னடக் கலைஞர்கள் கூட்டணியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் 'கரிகாடன்' படத்தின் டீசரும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.படத்தின் டீசர் பார்வையாளர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கவனிக்க வைக்கிறது.
மாறுபட்ட வகைமையில் ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக
‘கரிகாடன் ‘
உருவாகியுள்ளது.
இப்படத்தில்
காடா நடராஜ்,நிரிக...










