Tuesday, November 24

Blog

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

News
மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ - டிரைலர் வெளியீடு! ஆடியோவை டைரக்டர்,நடிகர் லோகேஷ் கனகராஜ் வெளியிட, டிரைலரை டைரக்டர்,நடிகர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார். இப்படத்தை காமராஜ் மனோன்மணி இயக்கியுள்ளார். மலேசியாவில் பத்துகேவ்ஸ் ஷென்கா கன்வென்சன் செண்டரில் வருகிற ஞாற்றுக்கிழமை 26ம் தேதி மாலையில் விழா நடைபெறுகிறது. விழாவில், இயக்குநர் லிங்குசாமி, இப் படத்திற்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் சரண், படத்தில் இடம் பெறும் நட்டி, விதார்த், ஆனந்தி, ரக்‌ஷிதா மற்றும் பல நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்களாக பல டத்தோக்கள் கலந்து கொள்கிறார்கள் — - johnson pro...
‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கின!

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கின!

News, Uncategorized
  பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லர் 'சிட்டுக்குறிஞ்சி' டப்பிங் பணிகள் தொடங்கின! பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும், வித்தியாசமான காதல், நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி அம்சங்கள் கலந்த தமிழ் திரைப்படமான 'சிட்டுக்குறிஞ்சி' தற்போது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள 'சிட்டுக்குறிஞ்சி', காதல், நகைச்சுவை, ஃபேன்டஸி ஆகியவற்றை புதுமையான திரைக்கதையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் திரையனுபவத்தை வழங்கும் படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் தீப்ஷிகா, நக்ஷா சரண், வி.ஜே. பப்பு, ஜி. எம். குமார், எல். வி. ஆதவன், ராம்...
ஜீ 5 தமிழ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக இருக்கும் விஜய் ஆண்டனியின் நூறு சாமி!

ஜீ 5 தமிழ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக இருக்கும் விஜய் ஆண்டனியின் நூறு சாமி!

News
விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ZEE5 தமிழ் தனது அடுத்த பெரிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக 'நூறு சாமி'யை அறிவித்துள்ளது! *'பரிமளா & கோ'வின் அபார வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆகஸ்டில் குடும்பங்கள் ரசிக்க இன்னொரு திரைப்படத்தை கொண்டு வருகிறது ZEE5 தமிழ்* சென்னை, ஜூலை 24, 2026: விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதயத்தைத் தொடும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமான 'நூறு சாமி' இந்த ஆகஸ்டில் ZEE5 தளத்தில் OTT-யில் பிரீமியராக வெளியாகவுள்ளதாக ZEE5 தமிழ் அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு ZEE5 தமிழுக்கு மிகவும் உற்சாகமான தருணத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் OTT-யில் வெளியான 'பரிமளா & கோ' குடும்ப பார்வையாளர்களின் விருப்பமான திரைப்படமாக உருவெடுத்துள்ளது. ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்த இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...
விஜய் ஆண்டனியின்  ‘அப்பா குட்டி’  செகண்ட் லுக் வெளியீடு!

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ செகண்ட் லுக் வெளியீடு!

News
விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் நெகிழ்ச்சியான செகண்ட் லுக் வெளியீடு! நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் படத்தொகுப்பாளர் *விஜய் ஆண்டனியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’* திரைப்படத்தின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த செகண்ட் லுக் போஸ்டர் புதிதாக வெளியாகி உள்ளது, விஜய் ஆண்டனி மற்றும் ஒரு சிறுமிக்கு இடையிலான நெகிழ்ச்சியான தந்தை-மகள் பாசப் பிணைப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. இயக்குநர் *மு. மாறன்* இயக்கத்தில் உருவாகியுள்ள ' *அப்பாகுட்டி* ' திரைப்படம், குடும்ப மதிப்புகள் மற்றும் விறுவிறுப்பான அதிரடி (Action) காட்சிகள் நிறைந்த ஒரு *‘ஆக்ஷன் ஃபேமிலி டிராமா’* திரைப்படமாகும். ஒரு வணிகரீதியான பொழுதுபோக்குத் திரைப்படமாக *அப்பாகுட்டி* அமைந்திருந்தாலும், இதன்...
ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்!

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்!

News
ஐ&ஐ மூவிஸ் சார்பில் வை. வைரபிரகாஷ் தயாரித்துள்ள படம் ஃபிளாக். இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் பி பொன் சங்கர். படத்தொகுப்பு வரதராஜன் , இசை ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியம்.. இப்படத்தில் கொட்டுக்காலி, இட்லி கடை போன்ற படங்களில் நடித்த தீஹான் மற்றும் தூம், க்ரிஷ், சர்தார் போன்ற படங்களில் நடித்த பாலிவுட்டை சேர்ந்த மிக்கி மக்கி ஜா & அபினவ் கோசாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் போஜ்புரியை சார்ந்த அனந்த் பெங்காளியைச் சேர்ந்த பப்புஷா மற்றும் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் ... இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் தமிழ்நாடு, கேரளா,ஆந்திரா, கர்நாடகா, மும்பை, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேஷ், மத்திய பிரதேஷ், டெல்லி, காஷ்மீர் உள்ளி...
ஜனநாயகன் _ விமர்சனம்

ஜனநாயகன் _ விமர்சனம்

Reviews
ஜனநாயகன்: விமர்சனம் திரையில் முதலமைச்சர் டைட்டில் கார்டுடன் தோன்றி, ரசிகர்களின் கரவொலியால் திரையரங்குகளை அதிரவைத்திருக்கும் ‘ஜனநாயகன்’ – விஜய்யின் திரைப்பயணத்தின் கம்பீரமான விடைபெறலா, இல்லை கமர்ஷியல் அரசியலின் உச்சக்கட்ட கொண்டாட்டமா? இதோ சுடச்சுட ஒரு முழுமையான திரை விமர்சனம்! தெலுங்குப் படமான 'பகவந்த் கேசரி'யின் மையப்புள்ளியை எடுத்துக்கொண்டு, அதைத் தளபதி விஜய்யின் மாஸ் பிம்பத்திற்கும் தமிழ்நாட்டின் அரசியல் களத்திற்கும் ஏற்றவாறு செதுக்கியுள்ளார் இயக்குநர் எச்.வினோத். கதைக்களம்: சிறையிலிருந்து விடுதலையாகும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்), நண்பனும் அதிகாரியுமான கௌதம் மேனனின் திடீர் மறைவுக்குப் பின், அவரது மகள் மமிதா பைஜூவை வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறார். அம்மாவின் கொடூர கொலையைப் பார்த்ததால் பயந்த சுபாவம் கொண்ட மமிதாவை, சமுதாயத்தில் மிக தைரியமான பெண்ணாகவும், ரா...

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கபுதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

News
*23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது! இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை வாசிக்கச்செய்து, தேர்வுச் சான்றிதழை வழங்கியவர்.. திரையுலகில் கணக்கிலடங்கா எழுத்துச் சாதனைகளைச் செய்த நம் மூத்த உறுப்பினரும், எதிரணியில் தலைவர் வேட்பாளராக தேர்தலைச் சந்தித்தவருமான மதிப்பிற்குரிய திரு.வி.சி.குகநாதன் அவர்கள். தேர்தல் அதிகாரி திரு. உமாசங்கர் பாபு அவர்களின் முன்னிலையில்.. தலைவராக திரு.சேரன், பொதுச் செயலாளராக திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக திரு.ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் பதவியேற்றார்கள். தலைவர் சேரன் அனைவரையும் வரவேற்று சங்கத்தின் நலனுக்காக இணைந்து சிறப்புடன் செயல்படுவோம் என்று உரையாற்றினார். இனி இங்கு இரண்டு அண...
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு!

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு!

News
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர். ‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘காகங்கள்’, தற்போது டப்பிங், ஒலிவடிவமைப்பு (Sound ...
‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

News
நிவின்பாலி-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ ! வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயங்களை நேரடியாகத் தொடுகின்ற படங்களை கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார்.. சமீப காலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்புத் தாரகை என்று ரசிகர்களால் பாராட்டப்படும் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையை தொடர்ந்து அளித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி...
‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

News
நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு! நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரசகுல்லா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாய்' திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், 'ஆதித்யா' கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். எஸ். கண்ணன் கலை இயக்கத்தை மேற்கொள்ள பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை கையாண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் - செவன் ஸ...
CLOSE
CLOSE