Sunday, November 29

Blog

‘கூலி’ பட கவுண்ட் டவுன் பிரிவியூவுடன் Sun NXTல் தொடங்கும்

‘கூலி’ பட கவுண்ட் டவுன் பிரிவியூவுடன் Sun NXTல் தொடங்கும்

News
‘கூலி படக் கவுண்டவுன் கூலி அன்லீஷ்ட் பிரிவியூவுடன், Sun NXT - இல் தொடங்குகிறது! இந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, கூலி படத்தின் பிரீவியூவைப் பார்க்கத் தயாராகுங்கள் - கூலியின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டத்தை, நட்சத்திரங்களுடனான விழாவைக் கண்டுகளிக்கத் தயாராகுங்கள். ஆரவாரமான ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த விழா, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதை விடவும், மிகப்பெரியக் கொண்டாட்டம். கூலி படத்தின் கவுண்டவுன் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது. இந்த விழா உலகெங்கிலும் உள்ள தென்னிந்திய திரைப்பட ஆர்வலர்கள் கண்டுக்களிக்கும் வகையில் Sun NXT, இல் ஒளிபரப்பாகிறது. ரெட் கார்பெட் துவங்கிய தருணத்திலிருந்தே, உற்சாகம் துவங்கி விட்டது. ரசிகர்களின் காதைப் பிளக்கும் ஆரவாரத்துடன் நட்சத்திரங்கள் விழா அரங்கிற்குள் நுழைந்தனர். இசை அரங்கம் முழுக்க அதிரும் பலத்துடன்...
‘தி பாரடைஸ்’ படத்தில் நானியின்  ஃபர்ஸ்ட் லுக்!

‘தி பாரடைஸ்’ படத்தில் நானியின்  ஃபர்ஸ்ட் லுக்!

News
  “தி பாரடைஸ்” படத்திலிருந்து நேச்சுரல் ஸ்டார் நானியின் ஜடால் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது! 'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி கதாப்பாத்திரத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும்  வரவேற்பைப் பெற்று வருகிறது. நானி வித்தியாசமான  தோற்றத்தில், இதுவரை தோன்றாத மாறுபட்ட ஒரு வேடத்தில் நடிக்கிறார். அடர்த்தியான மீசை மற்றும் தாடியுடன், இரண்டு ஜடை முடிகள் தொங்க அவரின் தோற்றம் மிரட்டலாக உள்ளது. இந்தக் கதாபாத்திரத்தின் பெயர் 'ஜடால்' - தனித்துவமான தோற்றம் கொண்ட ஒரு தனித்துவமான பெயராக அமைந்துள்ளது. இந்த தோற்றத்தை அறிமுகப்படுத்தி, தயாரிப்பாளர்கள் 'மாறுபட்ட சிகையலங்காரமாகத் துவங்கி ஒரு புரட்சிகரமான லுக்காக முடிந்துள்ளது' என்று தெரிவித்துள்ளனர். தசரா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு திறமை மிகு  இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியிருக்கும் #...
சிவகாரத்திகேயன் வெளியிட்ட, அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசர்!

சிவகாரத்திகேயன் வெளியிட்ட, அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசர்!

News
BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள “ரெட்ட தல” படத்தின் அதிரடியான டீசரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க, பட அறிவிப்பு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்தப்படத்தின் டீசரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் தன் சமூக வலைத்தளம் வழியாக வெளியிட்டார். முழுக்க முழுக்க ஸ்டைலீஷாக ஆக்சன் ரொமான்ஸ் கலந்து, ஒரு கலர்ஃபுல் எண்டர்டெயினராக, அருண் விஜய்யின் இரண்டு விதமான லுக்கை காட்டும், இந்த டீசர் படம் பற்றிய ஆவலைத்தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்த டீசர் வெளியான வேகத்தில் இணையம் முழுக்க வைரலாக பரவி ரசிகர்களிடம் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. நடிகர் அருண் விஜய் நாயகனாக ந...
‘புல்லட்’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி ஆகும் டிஸ்கோ சாந்தி!

‘புல்லட்’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி ஆகும் டிஸ்கோ சாந்தி!

Uncategorized
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் நடிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் 'புல்லட்' அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் விறுவிறு டீசரை விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ், ஜி வி பிரகாஷ் வெளியிட்டனர்! *'புல்லட்' திரைப்படத்தின் தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார்* #Bullet (Tamil) Teaser - https://youtu.be/zeGb3MBZY6Y #BullettuBandi (Telugu) Teaser - https://youtu.be/t554tWPq10U ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், அருள்நிதி நடித்த ‘டைரி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குநர் இன்னாசி பாண்டியன் உடன் மீண்டும் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'புல்லட்' படத்தை தயாரித்துள்ளார். விறுவிறுப்பான அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு...
அகண்டா 2 தாண்டவம் படத்தின்டப்பிங்கை முடித்த பாலகிருஷ்ணா!

அகண்டா 2 தாண்டவம் படத்தின்டப்பிங்கை முடித்த பாலகிருஷ்ணா!

News
அகண்டா 2 தாண்டவம் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார் காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா ! காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta), 14 ரீல்ஸ் பிளஸ் (14 Reels Plus), M தேஜஸ்வினி நந்தமூரி (M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 அகண்டா 2: தாண்டவம் பட டப்பிங்கை முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்கு வெளியாகிறது. 'காட் ஆஃப் தி மாஸஸ்' நந்தமூரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu) கூட்டணி, நான்காவது முறையாக இணைந்து, மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிக வரவேற்பைப் பெற்ற 'அகண்டா 2 : தாண்டவம்' படத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது போஸ்ட்-புரொடக்‌ஷன் கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகச்சிறந்த தொழில்நுட்பத் தரத்தில், ...
‘காந்தாரா’ படத்தில் ருக்மணி வசந்தின் எழில் தோற்றம்!

‘காந்தாரா’ படத்தில் ருக்மணி வசந்தின் எழில் தோற்றம்!

News
காந்தாரா திரைப்படத்திலிருந்து ருக்மணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது ! வரமஹாலக்ஷ்மி திருவிழாவின் இந்த புண்ணிய நாளில், ஹோம்பாலே பிலிம்ஸ், ருக்‌மிணி வசந்தை ‘கனகவதி’ (Kanakavathi) எனும் கதாபாத்திரமாக, காந்தாரா அத்தியாயம் 1 படத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று வெளியாகிறது. இந்திய கலாச்சாரத்தில் புனிதமும் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட வரமஹாலக்ஷ்மி திருநாளில், வரவிருக்கும் மாபெரும் திரைப்படமான “காந்தாரா அத்தியாயம் 1” இன் நாயகியாக நடிக்கும் நடிகை ருக்‌மிணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இப்படத்தை எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கதைக...

எதிர்பார்ப்பைகளை எகிற வைத்த ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் போட்டி நடனம்!

News
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்! ஹ்ரித்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் என இருவருக்கு இடையேயான நடன மோதல் பாடலான 'ஜனாபே ஆலி' (தமிழில் களாபா) இந்த பாடலின் சிறு க்ளிம்ஸ் வீடியோவை தற்போது யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில், இந்திய சினிமாவில் நடனத்திற்கு பெயர் பெற்ற ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவர் கிடையே நடைபெறும் ஒரு நடன மோதலாக உள்ளது. இந்த பாடலில் இருவரும் ஸ்டைல் நிறைந்த நடனத்தால் ரசிகர்களை மெய்மறக்க செய்துள்ளனர். இந்த பாடலை பிரிதம் இசையமைத்துள்ளார். பாடகர்கள் சச்சேத் டாண்டன், சாஜ் பட் இப்பாடலை பாடியுள்ளனர். இதன் பாடல் வரிகளை அமிதாப் பட்டாசார்யா எழுதியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படங்களை புதிய யுக்தியுடன...
‘அக்யூஸ்ட்’  படத்துக்கு காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

‘அக்யூஸ்ட்’ படத்துக்கு காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

News
  பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்களுக்கு ‘அக்யூஸ்ட்’ தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் மனமார்ந்த நன்றி! ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ கடந்த வாரம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இதன் காரணமாக, காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வ...
தெலுங்குப் படவுலகில் அறிமுகமாகும் யோகிபாபு!

தெலுங்குப் படவுலகில் அறிமுகமாகும் யோகிபாபு!

News
யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் முதன்முறையாக குர்ரம் பாப்பி ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகிறார் நகைச்சுவையின் தலைவராகிய பிரம்மானந்தம் அவர்களுடன் இணையுகிறார்! தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தற்போது தனது தெலுங்கு சினிமா பயணத்தை குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார். எப்போதும் தனது நேர்த்தியான நகைச்சுவையுடன் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, இப்போது தனது தனித்துவமான நடிப்பை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறார். முரளி மனோகர்ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில், நகைச்சுவையின் பிறமகாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் ஒரே படத்தில் இணைவது காரணமாக, இப்படத்துக்குத் திரையுலகில் மிகுந்த எதிர்...

‘சொட்ட சொட்ட நனையுது’ விழாவுக்கு ‘சொட்டை தலை’ மேக்கப்புடன் வந்த நாயகன்!

Uncategorized
“சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  ! Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள,  இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் ஆனந்த் பாண்டி பேசியதாவது… எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. எனக்கு இதில் வித்தியாசமான ஒரு கேரக்டர், சாதா ஹீரோவாக இருந்த என்னை, பான் இண்டியன் ஹீரோவாக மாற்றிவிட்டீர்கள். இப்படத்தில் எல்லோரும் செம்மையாக நடித்துள்ளனர். பாடல்கள் ...
CLOSE
CLOSE