Sunday, November 29

Blog

நடிகர் சங்கம் அவசர அறிக்கை

News
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட கூறி 100 நாட்களாக அமைதி போராட்டம் நடத்திய மக்கள் மீது இன்று போலீஸார்  துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.  10பேர் உயிரிழந்து ,பலரும் காயம்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயலாக இருக்கிறது. இந்த துப்பாக்கி சூட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வருத்தத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.  மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுகாண தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் வைக்கிறது.  கடந்த மாதம் வள்ளூவர் கோட்டத்தில் சினிமா துறையின் சார்பில்  நடைப்பெற்ற அறவழிப்போராட்டத்தில் ஸ்டார்லெட் ஆலை மூட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி சினிமா துறையை சேர்ந்த 5 ஆயிரம் தொழிலளர்களிடம் கையெப்பம் பெற்று ஆளுநரிடம் மனு கொடுத்தோம்.  மக்கள் போராட்டம் வலுவடைந...
ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் – விஷால்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் – விஷால்

News
தூத்துக்குடி   ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.   இறந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். போராட்டம் சமூக நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது. தனிப்பட்ட விஷயங்களுக்காக நடத்தப்படுவது அல்ல. 50,000 மக்கள் சேர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் கண்டிப்பாக மக்கள் , பொதுஜன நலத்துக்காக தான் போராடுகிறார்கள் .      மரியாதைக்கூறிய பிரதமர் கண்டிப்பாக தன்னுடைய அமைதியான மனநிலையை கலைக்க வேண்டிய நேரம் இது. போராட்டம் ஜனநாயகத்தில் ஒன்று. அதில் ஏன் மக்கள் ஈடுபடக்கூடாது.      அரசாங்கம் மக்களுக்காக தான். வேறுயாருக்கும் அல்ல.      2019 பற்றி கவனமாக யோசிக்க வேண்டும் மக்கள்      - விஷால்...
இனியாவின் தங்கை தாராவின் தயக்கத்தை உடைத்த மன்சூர் அலிகான்

இனியாவின் தங்கை தாராவின் தயக்கத்தை உடைத்த மன்சூர் அலிகான்

News
ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.    முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து, இயக்குநர் ரசாக் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள்.    கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்களுடன், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.  ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.   இந்த படம் குறித்து நடிகை தாரா அளித்துள்ள பேட்டியில், “ ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படம் பார்க்க, தி...
முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்”

முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்”

News, Uncategorized
முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்” பட பூஜை சென்னையில் நடைபெற்றது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார். இப்படம் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 15வது திரைப்படம்! கொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் - முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும். இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய   பிரவீன் K .L  படத்தொகுப்பு செய்ய உள்ளார். கதாநாயகி,இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் தேர்வுகள் முடிந்தவுடன் அறிவிக்கப்படும். “Devarattam” is the title of StudioGreen ‘s Production No 15th project. Starring       &nbs...
சாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத்

சாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத்

News
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி ஸ்கொயர் ’ என்ற படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது. அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ‘சாமி ஸ்கொயர் ’ படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் மோஷன் போஸ்டருக்கான இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். தேவிஸ்ரீபிரசாத்தின் வித்தியாசமான இந்த இசைக்காக அவருக்கு  திரையுலகினர் மட்டுமல்லாமல் இசை ஆர்வலர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது. அதிலும் ‘சாமி ஸ்கொயர் ’ போன்ற மாஸ் படத்தின் மோஷன் போஸ...
CLOSE
CLOSE