Sunday, November 29

Blog

ஈழத்தில் உருவான “அந்தோனி” திரைப்படம்!

ஈழத்தில் உருவான “அந்தோனி” திரைப்படம்!

Uncategorized
ஈழத்தில் உருவாகியிருக்கும் “அந்தோனி” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்! ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், கயல் வின்சன்ட் மற்றும் TJ.பானு இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி இலங்கை - யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது டப்பிங் பணிகள் ஆரம்பித்திருப்பதாக படக்குழுவினர் அறியத்தருகின்றனர். அந்தோனி திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்குகின்றனர். ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் கலைவளரி சக ரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். திரு.இரமணன் அவர்கள் இத்திரைப்படத்தில் இணை இயக்குனராகவும் பணிபுரிகின்றார். மற்றும் இணை தயாரிப்பாளர்களாக விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) , சிறீஸ்கந்தராஜா (ட்...
நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்!

நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்!

News
 ஜூலை 23 சூர்யா அவர்களின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக நேற்று மாலை 2 லட்சம் மதிப்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தையல் மெஷின், 150 நபர்களுக்கு புடவை 150 நபர்களுக்கு வேட்டி 150 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் 150 தண்ணீர் குடம் 10 முதியோர்களுக்கு ஊக்கத்தொகை இதில் தயாரிப்பாளர் திரு. ராஜசேகர் பாண்டியன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....
‘கூலி’ படத்தின் மலேசிய விநியோக உரிமையை பெற்ற மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்!

‘கூலி’ படத்தின் மலேசிய விநியோக உரிமையை பெற்ற மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்!

News
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் மலேசிய விநியோக உரிமைகளைப் பெற்றுள்ளது! டத்தோ அப்துல் மாலிக் அவர்களின் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, பிளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் மலேசிய விநியோக உரிமையை பெற்ற இயக்கத்தில், பிரபலமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான கூலியின் மலேசிய திரையரங்க விநியோக உரிமைகளைப் பெற்றுள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசையை சென்சேஷனல் அனிருத் இசையமைத்துள்ளார், இது இந்த சக்திவாய்ந்த கூட்டணிக்கு மேலும் உற்சாகமான அம்சத்தை சேர்க்கிறது. தங்களின் தைரியமான மற்றும் தாக்கமுள்ள வெளியீடுகளுக்குப் பெயர் பெற்ற மாலிக் ஸ்ட்ரீம்ஸ், மலேசியாவில் கூலி திரைப்படத்திற்காக இதுவரை இல்லாத புதிய விளம்பர பிரச்சாரத்தை திட்டமிட்டு...
பன் பட்டர் ஜாம் _ விமர்சனம்

பன் பட்டர் ஜாம் _ விமர்சனம்

Reviews
பன் பட்டர் ஜாம் _ விமர்சனம் பிக் பாஸ் புகழ் ராஜு கதாநாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் பன் பட்டர் ஜாம். கதாநாயகிகளாக ஆதியா மற்றும் பாவ்யா இருவரும் நடித்திருக்கின்றனர். ஃபிரண்ட், லவ்வர், பெஸ்டி என்றெல்லாம் இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் உச்சரிக்கப்படும் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்பதை வைத்து இந்தப் படம் உருவாக்க பட்டதோ? ராஜுவின் தாயார் சரண்யா பொன்வண்ணனும், ஆதியாவின் அம்மா தேவதர்ஷணியும் இணைந்து ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதாவது தங்கள் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கும்போது, யாரையாவது காதலித்து தொலைத்து, கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக தங்கள் பிள்ளைகள் இருவரையும் ஒருவருக்கொருவர் சந்திக்கச் செய்து, பழக வைத்து அவர்களை காதலிக்கவும் வைத்து, திருமணம் செய்து வைத்து விடலாம் என்பதுதான் அந்த (சிறப்பு)  திட்டம்.  பிள்ளைகளைப் பொறுத்தவரை அது லவ் மேரேஜ் ஆகவும், ...
நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

News
நடிகர் உதயா நடிக்கும் 'அக்யூஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! நடிகர்கள் உதயா - அஜ்மல் - யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் - சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா - 'தயா' என். பன்னீர்செல்வம் - எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் முதல் தேதியன்று உலகம் முழுவதும் த...
பாதி சம்பளம் வாங்கிய ஜி.வி. பிரகாஷ்!

பாதி சம்பளம் வாங்கிய ஜி.வி. பிரகாஷ்!

News
‘பிளாக்மெயில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் அமல்ராஜ், “இந்தப் படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் சாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்து கடைசி 8 நாட்கள் மட்டும் ஷூட் முடிக்க முடியாமல் இருந்தது. அதற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்தவர் ஜி.வி. பிரகாஷ். படத்திற்காக அவர் பாதி சம்பளம்தான் வாங்கி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டப்பிங் முடித்து ஆடியோ லான்ச் வரை வந்திருக்கிறார். அவருக்கு என்றுமே கடமை பட்டிருக்கிறேன்”. இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “30 வருடங்களுக்கு முன்னால் ‘பிளாக்மெயில்’ என்ற இந்தி படம் பார்த்தே...
TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !

TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !

News
TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் ! தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது. இந்த விருது விழாவில் தென்னிந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையான ஊடக நண்பர்களுக்கான நியூ இந்தியன் டைம்ஸ் மீடியா விருதுகள், சிறந்த தொகுப்பாளர் | சிறந்த நிருபர் | சிறந்த வீடியோ எடிட்டர் | சிறந்த வீடியோ கேமராமேன் | சிறந்த நகல் எடிட்டர் | சிறந்த குரல் ஓவர் கலைஞர் | சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது. TNIT குழுமத்தின் CEO ரகுபட் இந்த விருது விழாவை நடத்துகிறார். இந்த விழாவினை பற்றிய அறிமுகத்தை மீடியா நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக TNIT சார்பில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித...

ட்ரெண்டிங் _ விமர்சனம்

Reviews
ட்ரெண்டிங் _ விமர்சனம் இன்றைய இளைய தலைமுறை இணைய தலைமுறையாகவே தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருப்பது குறித்து உரத்த சிந்தனையை கிளரும் படம் ட்ரெண்டிங். கலையரசன் பிரியாலயா தம்பதி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி வித்தியாசமான வீடியோக்களை போட்டு, அதன் மூலம் லட்சக்கணக்காண ஃபாலோயர்ஸைப் பெற்று வருமானமும் ஈட்டி, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். சமூக ஊடகத்தின் மூலம் புகழ் பெறும் இத்தம்பதி தங்களுக்கு கிடைக்கும் வருமானம் நிரந்தரம் என நினைத்து தங்கள் சக்திக்கு மீறிய ஆடம்பரமான வீட்டை மாத தவணை முறை மூலம் வாங்குகின்றனர். திடீரென அவர்களுடைய youtube சேனல் முடங்கி போய்விட செய்வதற்காக திகைத்து நிற்கின்றனர். இ எம் ஐ கட்ட முடியவில்லை... கடன் காரர்களின் மிரட்டல் என்ற நிலையில் இருக்கும்போது மர்மமான ஒரு தொலைபேசி அழைப்பு கலையரசனுக்கு வருகிறது. பிக் பாஸ் பாணியிலான ஒருவகை விளையாட்டில் ஈடுபட்டால...
மிஸஸ் அண்ட் மிஸ்டர் _/விமர்சனம்

மிஸஸ் அண்ட் மிஸ்டர் _/விமர்சனம்

Reviews
மிஸஸ் அண்ட் மிஸ்டர் _ விமர்சனம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வசித்து வருகின்றனர் வனிதா ராபர்ட் தம்பதியர். 40 வயதைக் கடந்து விட்ட நிலையில் வனிதாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ராபர்ட் . திருமணமாகாத இளம் காதலர்களைப் போலவே இந்த ஜோடி பரஸ்பரம் அன்பு செலுத்தி கொண்டாட்டமாக தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது இருவருக்கும் குழந்தைகள் இல்லை. அதை ஒரு குறையாகவே நினைக்காமல் அது பற்றிய கவலையே இல்லாமல் சந்தோஷமாகவே இந்தத் தம்பதியினர் வாழ்கின்றனர். ஆனால் மற்றவர்கள் இவர்களை குழந்தை பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை சொல்கின்றனர். இனியும் தாமதப்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டால் அவ்வளவுதான்... என்று சுற்றிலும் உள்ளவர்கள் தூண்டி விடவே அம்மாவாகிய தீருவது என்ற முடிவுக்கு வருகிறார் வனிதா. ஆனால் அவரது கணவர் ராபர்ட்டோ குழந்தையை வேண்டாம் என்று நினைக்கிறார். எனவே வனிதா சாம,...
சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் வெளியீடு!

சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் வெளியீடு!

News
சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் வெளியீடு! இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், 'ச்சீ ப்பா தூ...' சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !! சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது. இலங்கைய...
CLOSE
CLOSE