ப்ரைட் ஆஃப் தமிழ்நாடு 2018 விருதுகள் வழங்கும் விழா
ஆண்கள் வெற்றி பெற்றால் அது அவர்களுக்கு மட்டுமே உரியது, பெண்கள் பெரும் வெற்றி இந்த சமுதாயத்துக்கு உரியது. அவர்கள் வெற்றி பெறுவது மிக மிக முக்கியம்.
ரவுண்ட் டேபிள் இனிஷியேட்டிவ் நடத்தும் கலை, தொழில், பண்பாடு, பொழுதுபோக்கு என பல்வேறு துறைகளின் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் ப்ரைட் ஆஃப் தமிழ்நாடு 2018 விருதுகள் வழங்கும் விழா சென்னை ஃபெதர்ஸ் ராதா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் சாதனையாளர்கள் கலந்து கொண்டு முக்கிய பிரமுகர்களிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்கள்.
நிர்வாக துறையில் பெருமைமிகு தமிழர் விருது ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கு ஷகில் அக்தர் ஐபிஎஸ் அவர்கள் வழங்கினார். வளரும் சாதனையாளர் விருது அம்பத்தூர் இணை கமிஷனர் சர்வேஷ் ராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அப்போது பேசிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், "நான் பணியில் சேர்ந்த 15 நாட்களிலேயே கும்பகோணம் தீ விபத்து நடந்தது. சுனாமி நேரத்தில் நிற...










