Sunday, November 29

Blog

புதிய முறையில் உருவான கிண்டி பொறியியல் கல்லூரி பண்

புதிய முறையில் உருவான கிண்டி பொறியியல் கல்லூரி பண்

News
இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி 225 ஆண்டுகளைத் தொடப்போகிறது. இந்தக் கல்லூரியின் 93ஆவது ஆண்டு முன்னாள் மாணவர் அமைப்பின் கூட்டத்தில் முதல் முறையாக கல்லூரிப் பண் ஒன்று வெளியிடப்பட்டது. இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் துணைப் பேராசிரியர் மதன் கார்க்கியின் "முடிவிலி என்றே நீளுவோம், காலம் வென்றே வாழுவோம், பொறியியல் என்னும் புரவியில் ஏறி புவியைச் செயலால் ஆளுவோம்" என்று தொடங்கும் பாடல் வரிகளை டூபாடூ இசை நிறுவனம் மூலமாக சில தனியிசைக் கலைஞர்களிடம் கொடுத்து ஐந்து பாடல்களாக உருவாக்கி அப்பாடல்களுள் மூவாயிரத்துக்கும் மேலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை இசையமைத்தவர் தனியிசைக் கலைஞர் ஜெரார்ட் ஃபீலிக்ஸ். சத்யபிரகாஷ் மற்றும் ஜெரார்ட் இந்தப் பாடலை பாடியுள்ளார்கள். இந்தப் பாடலை கிண்டி பொறியியல் கல்லூரியின் ...
யுவன்,  மெட்ரோ சிரிஷை அழைத்துப் பாராட்டிய சிம்பு!

யுவன், மெட்ரோ சிரிஷை அழைத்துப் பாராட்டிய சிம்பு!

News
மெட்ரோ நாயகன் சிரிஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘நா யாருன்னு தெரியுமா?’ என்ற  பாடல்  மார்ச் 15-ம் தேதி வெளியிடப்பட்டு அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு லட்சம் பேருக்கும் அதிகமானோரால் யு ட்யூபில் ரசிக்கப்பட்டிருக்கிறது இப்பாடல்.  பாடலை சிலம்பரசன் பாடியுள்ளது கூடுதல்  சுவை. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சிம்பு, நாயகன் மெட்ரோ சிரிஷையும், இசை நாயகன் யுவன் சங்கர் ராஜாவையும்  அழைத்துப் பாராட்டியிருக்கிறார். ’இந்த பாடல் ஹிட் ஆனதன் மூலமாக படமும் ஹிட் ஆகும்’ என்று   இருவரிடமும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் சிம்பு. அடுத்த  ஹிட் டுக்கு ஆயத்தமாகி விட்டார் மெட்ரோ சிரிஷ்....
மெர்லின் படத்தில் உள்ள காட்சியை நீக்க கோரிய மனுவிற்கு,  இயக்குனர் கீரா &  நடிகர் விஷ்ணு பிரியன் விளக்கம்!

மெர்லின் படத்தில் உள்ள காட்சியை நீக்க கோரிய மனுவிற்கு, இயக்குனர் கீரா & நடிகர் விஷ்ணு பிரியன் விளக்கம்!

News
மெர்லின் திரைப்படத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான அவதூறான காட்சியை நீக்க கோரிய மனுவிற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘மெர்லின்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் விஷ்ணுபிரியன், அஸ்வினி சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த பேய் படத்தில வரக்கூடிய் ஒரு காட்சியில் சாமியார் வேடத்தில் வருபவர் பெண்களுக்கு மட்டும் தான் அதிக அளவில் பேய் பிடிக்கும். அதற்கு காரணம் செக்ஸ் தான் என்று கூறுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சியும், வசனமும் பெண் இனத்தையே இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதால் அந்த காட்சியை நீக்க தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு மனு அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பெண்களுக்கு எதிரான இந்த காட்சியை அகற்ற சென்சார் போர்டுக்...
முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் பொதுநல அறக்கட்டளை துவக்க விழாவில் நடிகர்  கார்த்தி ! ​

முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் பொதுநல அறக்கட்டளை துவக்க விழாவில் நடிகர் கார்த்தி ! ​

News
  ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார் , கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.               இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி .... ,               தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பிறகு பொது மக்களில் ஒருவனாக போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது எனக்கு. இங்கே நேர்மைக்காக கொடுக்க வேண்டிய விலை இன்னும் பெரிதாக உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கபடபோவது யாரு என்று பார்த்தால் அவர்களுடைய குடும்பத்தினர் தான். போலீஸ் அதிகாரிகள் எப்போதும் பணியிலேயே இருப்பவர்கள். அவர்களுடைய குடும்பங்கள் நன்றாக இருந்தால் தான் அவர்களால் தைரியமாக வேலை செய்...
கோடை விடுமுறை விருந்தாக வெளிவரும்  ‘Mr.சந்திரமௌலி’

கோடை விடுமுறை விருந்தாக வெளிவரும் ‘Mr.சந்திரமௌலி’

News
எந்த தொழில் நமக்கு சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் 'Mr.சந்திரமௌலி'. சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக்,வரலக்ஷ்மி சரத்குமார்,  ரெஜினா கசண்டரா  ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'Mr.சந்திரமௌலி' முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதளை பின்பற்றிவரும் அணியாகும். இந்த படத்தை BOFTA Media works India Private Limited சார்பில்  'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , '' படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏ...
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின்  உதவி இயக்குனர்

கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்

News
பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார்.    புகைப்படக் கலைஞராக வேண்டும் என அதீதமான ஈடுபாட்டுடன் இருக்கும் இளைஞன், காதல் மற்றும் குடும்பம் குறித்து எந்த விதமான பிரக்ஞையுமே இல்லாமல் இருக்கிறான். தனது குறிக்கோளுக்காக ஒரு கட்டத்தில் காதலையே உதறி, பின்னால் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் இறுதியில் வாழ்க்கை, அன்பு, குடும்பம் இவற்றின் மீதான மதிப்புகளை உணர்ந்து கொள்கிறான். இதுவே “மேகம் செல்லும் தூரம்” வீடியோ பாடலின் சாராம்சம்.    இந்த பாடலை படமாக்குவதற்காக ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண், உதவி இயக்குநர் விக்னேஷ்ராஜ் மற்றும் விக்னேஷ் குமார் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு மட்டுமே இமாச்ச...
சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘என் மகன் மகிழ்வன்’

சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘என் மகன் மகிழ்வன்’

News
என் மகன் மகிழ்வன் (My Son is Gay) - ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து முதன்முதலாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள திரைப்படம். சென்னையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் பிரபலநடிகர்களான அனுபமா குமார், கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் நிலையில், ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, தமிழ் திரையுலகிற்கு பெருமை தேடித் தந்து கொண்டிருக்கிறது. மெல்போர்ன், நியூயார்க், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், பிலடெல்பியா நகரங்களில் நடந்தேறிய பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு,வெகுவாக மக்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வரிசையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது இந்தியன் வேர்ல்ட் பிலிம் பெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டது. துருக்கி, இஸ்தான்புல், அமெ...
CLOSE
CLOSE