Blog
NatpunaEnnanuTheriyuma Official Trailer
https://www.youtube.com/watch?v=24hEvlWy1J0&feature=youtu.be
வளர்த்துவிட்ட இடத்திற்காக குரல் கொடுக்க மறுப்பது ஏன்..? ; ரஜினி-கமலுக்கு தயாரிப்பாளர் சதீஷ்குமார் கேள்வி..!
ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர் இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ, சரிவிலிருந்து தன்னை மீட்கும் விதமாக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது.
சினிமாவின் ஆதார சுருதியாக, அச்சாணியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்தும் இந்த போராட்டத்தை, யாருக்கோ எவருக்கோ நடத்துகிறார்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இதற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை..
இதனை குறிப்பிட்டு, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ஜே.சதீஷ்குமார், ரஜினி, கமல் இருவரையும் “இந்த திரைப்பட துறையின் இன்னல்களை களைய ஏதேனும் செய்துவிட்டு, அதன்பின் உங்கள் அரசியல் பயணத்தை துவக்குங்கள்.. இதில் உங்களுக்கு ஆதர...
PRESS RELEASE FROM RMM FOR THIRUVARUR DISTRICT OFFICE BEARERS LIST
கடந்த வெள்ளிக்கிழமை (09.03.2018) மயிலாடுதுறையில் நடைபெற்ற திருவாரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள வலங்கைமான் ,நன்னிலம்,திருவாரூர் ,கொரடாச்சேரி ,மன்னார்குடி,நீடாமங்கலம் ,கோட்டூர்,திருத்துறைப்பூண்டி ,முத்துப்பேட்டை ஒன்றியங்களின் அமைப்புகள் பெரம்பலூர்,பெரம்பலூர்,திருவாரூர் ,திருத்துறைப்பூண்டி ,மன்னார்குடி நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் .
திருவாரூர் மாவட்டம் :
 ...
இணையத் திருட்டிற்கு சவால் விடும் “கிரிஷ்ணம்”!
பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் திரைப்படம் “கிரிஷ்ணம்”. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விருவிருப்பான சம்பவங்களே “கிரிஷ்ணம்” படத்தின் கதை. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு. இவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.
மனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களேற்று நடிக்கிறார்கள். ஹரி பிரசாத்தின் இசையில் பாடல்களை சந்தியா எழுதுகிறார்.
“கிரிஷ்ணம்” ஒரு புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது. வாழ்க்கையில் எதிர்ப...
சதை போர்: மரணம், விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை!
ஒரு தாய்நாடானது இரக்கம் மற்றும் ஏற்புத்தன்மையுடன் இருப்பதாய் விளங்க வேண்டும். குறிப்பாக, அது கலவரங்கள் ஏற்படுகிற வேளையில் ஓர் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பினைத் தரும் ஓர் இடமாக இருத்தல் வேண்டும்.
ஆனால் அந்தத் தாய்நாடே உங்களை முழுதாக விழுங்கக் காத்திருக்கும் ஒரு யுத்தக் களமாக மாறினால் என்னாகும்?. கால்கள் சோர்ந்துபோகும் வரையில் ஓட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. நாம் முன்னெடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும், அமளியில் இருந்து தள்ளி வைக்கும் ஓரடியாக மாறுகிறது. இதுதான் சிரியாவின் இன்றைய நிலைமை, அங்கே சுதந்திரம் என்பதைத் தாண்டி உயிர்வாழ்வதற்கான போராட்டமே மேலோங்கி இருக்கிறது.
அத்தகைய சிரியாவின் தற்போதைய நிலையினை பிரதானப்படுத்தும் வகையில் ஒவியர் A.P.ஸ்ரீதர் ஒரு கோட்டோவியத் தொடரை வரைந்திருக்கிறார். அந்தத் தொடரானது, சிரியா மக்களுக்கான உதவிக் கரங்களுக்கு ஓர் அழைப்பை விடுத்துள்ளது. இந்த சம...
Oru Kadhal Kalavani Lyrical Video Song | Thodraa Tamil Movie |
https://www.youtube.com/watch?v=kKE5G9IQMng&feature=youtu.be
அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய 'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை உலுக்கியெடுத்தது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ஈழன் இளங்கோ ஒளிப்பதிவு இயக்கியுள்ள படம் இது. அதே நேரம் போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ளார்.
'சாட்சிகள் சொர்க்கத்தில்' படம் உலகெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது.
...



