Blog
அதிநவீன தொழில்நுட்பங்களோடு பாடி சிவசக்தி திரையரங்கம்
அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்த திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார்.
"அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் சிவசக்தி திரையரங்கம். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான, தரமான, நிறைவான பொழுதுபோக்கினை நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் வகையில் இந்த திரையரங்கை உருவாக்கியிருக்கிறோம். இந்த காலத்திற்கேற்ப நிறைய படங்களை வெளியிடும் வகையில் இரண்டு திரையரங்குகளாக மாற்றி அமைத்திருக்கிறோம்...
நாயகனாக அம்பிகா மகன் நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் “ கலாசல் “
கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம் “ கலாசல் “ இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - பாபுகுமார்
இசை - நிஜாமுதீன்
கலை - கல்லை தேவா
எடிட்டிங் - கோபிகிருஷ்ணா
ஸ்டன்ட் - டேஞ்சர் மணி
நடனம் - கல்யாண், கிரிஷ்
தயாரிப்பு நிர்வாகம் - அருள்
தயாரிப்பு - P.C.பாலு
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - அஸ்வின் மாதவன். இவர் இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ...
கிராமத்து வாழ்வியலை சொல்லவரும் “ உளிரி “
ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் தயாரிக்கும் படம் “ உளிரி “
இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும் பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - வெங்கட்
எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ்
கலை - சாமி கலைக்குமார்
ஸ்டன்ட் - மெட்ரோ மகேஷ்
நடனம் -...
“எஸ்.பி.பி. க்ளாசிக்ஸ்” இசை நிகழ்ச்சி
பின்னணிப் பாடகர் பத்மபூஷன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் "லஷ்மன் ஸ்ருதி" இசைக்குழுவில் கலந்து கொண்டு பாடும் "எஸ்.பி.பி க்ளாசிக்ஸ்" என்னும் பிரம்மாண்டமான மெல்லிசை நிகழ்ச்சி வரும் 18.3.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.
ஒரு பாடகர் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடும்போது அதற்காக அரங்கம் நிரம்பி வழிகிறதென்றால் இன்றைக்கும் அது எஸ்.பி.பி அவர்கள் பாடும் ஒரு நிகழ்ச்சியாகவே இருக்கின்றது.
பல தலைமுறை தாண்டி இன்றைய இளைஞர்கள் வரை அனைவரையும் தன் குரலால் வசீகரித்து இதயம் குளிரப் பாடி மகிழ்ச்சியைக் கொடுப்பவர்.
தான் பாடத்துவங்கி 52 ஆண்டுகளைக் கடந்தும் திரையில் தன் குரலால் பன்மொழிகளில் ஆதிக்கம் செய்து வருபவர்.
பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், மேடைப்பாடகர் என்று பன்முகங்களைக் கொண்டு பணியாற்றும் திறமை கொண்டவர்....
நடிகர் விக்ரம் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகன்
பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்ற நடிகர் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளம் கதாநாயகன் அறிமுகமாகவுள்ளார்.
நடிகர் விக்ரம் சகோதரியின் மகன் அர்ஜுமன் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ள இவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில், குடும்பத்தினரின் அரவனைப்போடு கலையுலகத்திற்கு அறிமுகமாகிறார் அர்ஜுமன்.
...
PRESS RELEASE FROM RMM FOR KRISHNAGIRI DISTRICT OFFICE BEARERS LIST
கடந்த சனிக்கிழமை (10.03.2018) சென்னையில் நடைபெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள கிருஷ்ணகிரி ,காவேரிப்பட்டினம் ,ஊத்தங்கரை ,மத்தூர் ,வேப்பனப்பள்ளி, பர்கூர் ,ஓசூர் ,சூளகிரி ,கெலமங்கலம் ,தளி ஒன்றியங்களின் அமைப்புகள் கிருஷ்ணகிரி ,ஓசூர் நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் .
கிருஷ்ணகிரி மாவட்டம் :
மாவட்ட செயலாளர்
D .மதியழகன் B .SC ,DF .Tech
இணை செயலாளர் ...



