Sunday, November 29

Blog

வின்செண்ட், பாரதிராஜா ஆகியோருக்கு ”நிமிர்’ படத்தை  அர்ப்பணிக்கிறேன் – பிரியதர்ஷன்

வின்செண்ட், பாரதிராஜா ஆகியோருக்கு ”நிமிர்’ படத்தை  அர்ப்பணிக்கிறேன் – பிரியதர்ஷன்

News
மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் ஆகியோர் நடித்திருக்கும் படம் ''நிமிர்''. இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கிறது. தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமித்திருக்கிறார்கள். இதுவரை நான் 4 படங்கள் தயாரித்திருக்கிறேன். எல்லாமே  மலையாள படங்கள். முதன் முறையாக தமிழில் படம் தயாரித்திருக்கிறேன். அதுவும் 93 படங்கள் இயக்கிய லெஜண்ட் பிரியதர்ஷன் சார் இயக்கும் படம். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அவர் இயக்கிய  பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட். நிமிர் படமும் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா.  என்னுடைய கேரியரில் நிமிர் மிக முக்கியமான படம். இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். உதயநிதியுடன் நடிக்...

அனிருத் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் – கார்க்கி

News
எனக்குள் இருக்கும் இனிமையின் சாரத்தை அலங்கரித்தாய் நீ, விடியலை வைத்து என்னுடைய இரவுகளை வரைந்தாய், பொய்கள் மறைகிறது, உண்மை விடிகிறது. ஒரு கவிஞனின் வேலையில் பாடல் வரிகளில் உருவகத்தை  கலக்கும்போது தான் அதன் ஆன்மாவே வெளிப்படுகிறது. குறிப்பாக காதல் பாடல்களில். இந்த மாதிரியான விஷயங்களுக்கு பாடலாசிரியர் கார்க்கி ஒரு சிறந்த உதாரணம். புதுமையான வார்த்தைகளுக்கான அவரின் தேடலும், அவர் எழுதும் வரிகளும் ரசிகர்களுக்கு உடனடியாக பிடித்து போய் விடுகின்றன. இந்த தன்மைகளால் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தில் வரும் இதயனே பாடல் ஒரே இரவில் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. காதல் பாடல் எழுதுவது என்பது எப்போதுமே சவாலான விஷயம். பாடல் வரிகள் மிகவும் சாதாரணமாகவும், அதே சமயம் ரசிகர்களை உடனடியாக கவரும் விதமாகவும் இருக்க வேண்டும். இரு ஆன்மாக்கள் உண்மையான காதலின் தேடலில் இருக்கும்போது இணைந்து, வழி...
3 மணி நேரத்தில் 21,000 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை

3 மணி நேரத்தில் 21,000 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை

Uncategorized
சென்னையில் நடைபெற்ற மீம்ஸ் மாரத்தான் போட்டியில் மூன்று மணி நேரத்தில் 21,619 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகங்களான பத்திரிகைகளில் வெளியாகும் கேலிசித்திரங்களுக்கு என சென்ற தலைமுறையில் தனி வாசகர் வட்டமும், ரசிகர் கூட்டமும் இருந்தது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கேலிசித்திரங்கள், மீம்ஸ்கள் என பெயர்மாற்றம் பெற்று உலா வருகிறது. இதற்கென தனிஅடையாளமும், ஏராளமான லைக்குகளும் கிடைத்து வருகிறது. இதனை ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையினர் உருவாக்கி, இணையப்புரட்சியையும், சமுதாயப் புரட்சியையும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களை ஒன்றிணைத்து, சாதனையாளர்களாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் ‘த சைட் மீடியா ’ என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் லோகேஷ் என்பவருக்கு உருவானது. இவரின் அரிய முயற்சியால் ‘மீம்ஸ் மாரத்தான் ’ என்ற பெயரில் போட்டி ஒன்று சென்னையில் நடைபெற்றது. இது குறித்து இந்த போட்ட...
Chennai’s Youth Icon Aravind Jayabal bestowed with the Karnataka’s prestigious Saalumarada Thimmakka National Greenery Award

Chennai’s Youth Icon Aravind Jayabal bestowed with the Karnataka’s prestigious Saalumarada Thimmakka National Greenery Award

News
Chennai's Youth Icon Aravind Jayabal bestowed with the Karnataka's prestigious Saalumarada Thimmakka National Greenery Award Aravind Jayabal, Founder and Creative Head of Raindropss, a renowned youth based social organization was bestowed with the Karnataka's prestigious Saalumarada Thimmakka national greenery award 2017 for his outstanding valuable service in the field of social work. The award was presented by the Karnataka's Social Welfare Minister H Anjaneya in Bengaluru recently. The award has been instituted by the Saalumarada Thimmakka International Foundation Bengaluru. It is notable, Aravind Jayabal is the only recipient of this award from an other state. Its indeed a proud moment for a Tamizhan to recieve the prestigious award of Karnataka. RAINDROPSS a youth based social organiz...
தயாரிப்பாளர்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கக் கூடிய ஒரு இயக்குனர் –  சினிஷ்

தயாரிப்பாளர்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கக் கூடிய ஒரு இயக்குனர் – சினிஷ்

News
70MM Entertainment நிறுவனம் சார்பில் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி தயாரிக்க, ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி  நடிக்க,  சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பலூன்'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆரா சினிமாஸ் மகேஷ் வெளியிடும் இந்த படத்தின் ட்ரைலர் சென்னையில் வெளியிடப்பட்டது. சினிமாவில் எனது முதல் படம், நண்பர் அருண் பாலாஜி தான் இயக்குனர் சினிஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் கதை சொன்னார், அவர் சொன்ன விதம் எனக்கு ரொம்ப பிடித்தது. அவர் ஜெயிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. போஸ்டர் நந்தகுமார் உனக்கு ஏன் தேவையில்லாத வேலை என்றார். ஆனாலும் படத்தை நாங்க ஆரம்பிச்சிடுறோம், எங்களுக்கு உதவி தேவைப்படுறப்போ மட்டும் உதவி பண்ணுங்கனு அவரை கேட்டுக்கிட்டேன். நந்தகுமாரும், தேனப்பனும் எங்களுக்கு நிறைய உதவி...
15 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் பிரபு – பிரபு தேவா!

15 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் பிரபு – பிரபு தேவா!

Uncategorized
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின்-2’. கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’. இந்த படத்தில் பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். காமெடி படமாக உருவான இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் இளைய திலகம் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதற்கட்டப் படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று(சனிக்கிழமை) முதல் தொடங்கியது. அதில் பிரவுதேவா – பிரபு 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்...
குமரியை தாக்கிய  ஒக்கிப் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் !

குமரியை தாக்கிய ஒக்கிப் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் !

Uncategorized
குமரியை தாக்கிய ஒக்கிப் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் ! இறந்த மீனவக் குடும்பங்களுக்கு 25 இலட்சம் நிதி வழங்க வேண்டும் !   திருவாடனை தொகுதி எம். எல்.ஏ., கருணாஸ் கோரிக்கை   இந்த ஆண்டு தமிழ்நாட்டைத் தாக்கிய ஒக்கிப் புயல், கன்னியகுமரி மாவட்டத்தை நடுநடுங்க வைத்துவிட்டது. இருண்ட மாவட்டமாக குமரி மாறிவிட்டது. எங்குபார்த்தாலும் பெண்களின் அழுகை ஓலங்கள், பசுமையாக காட்சி அளித்த குமரி  ஒக்கியால் உடைந்து கிடக்கிறது. மத்திய அரசின் முறையான முன்னறிவிப்பு இல்லாததன் காரணமாக புயலில் சிக்கிக் கொண்ட ஆயிரத்திற்கும்மேற்பட்ட தமிழக மீனவர்கள், இன்னமும் வீடுவந்து சேராத அவல நிலையில், நம் மீனவ மக்கள் வீதிக்கு வந்துநீதிகேட்கத் தொடங்கியுள்ளனர். அடுத்த நாட்டை மிரட்ட ராக்கெட் விட்டு அறிவியல் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குவதாகப் சொல்லிக்கொள்ளும் மத்திய அரசு, 36 மணிநேரத்திற்கு முன்பாகவே புயல் சீற...
மலேசியாவில் நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழா, ஜனவரி 5,6 தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து

மலேசியாவில் நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழா, ஜனவரி 5,6 தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து

News
தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான 'நட்சத்திர விழா 2018'  வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அன்று முழுவதும் நடைபெறுகிறது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் மூத்த நடிகர் நடிகைகளும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.  மேலும் எல்லா நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்ள வசதியாக ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தது.இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்  ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள்  படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை  அளிப்பதாக அறிவித்துள்ளது. ...
CLOSE
CLOSE