Blog
100% காதல்
கிரியேட்டிவ் சினிமாஸ் NY - சுகுமார் மற்றும் என்.ஜே என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் “100% காதல்” - தமிழ் திரைப்படத்தை எம். எம். சந்திரமௌலி இயக்க, கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்
முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான எம்.எம். சந்திரமௌலி, இத்திரைப்படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
அதிரடி, மர்மம், வன்மம் என துரோகங்களும் வன்முறைகளும் நிறைந்த திரைப்படங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், முற்றிலும் காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100% காதல், இத்தகைய சூழலில் ஒரு மாபெரும் புதிய திருப்பத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவிருக்கிறது.
தோட்டா தரணி கலைக்கு பொறுப்பேற்கிறார். நடன அமைப்பு பிரேம் ரக்ஷித், நிக்சன். கவிதா சச்சியும், A. மேக்னாவும் இணைந்து உடை வடிவமைப்பு வேலைகளை கவனித்து கொள்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கணேஷ். R, ஜில்லா...
இலவசமாக டவுன்லோடு செய்வது ஆப் இல்லை.. உங்களுக்கான ஆப்பு” ; பகீர் கிளப்பும் ‘X வீடியோஸ்’..!
‘X வீடியோஸ் படத்தின் இயக்குனர் சஜோ சுந்தர். இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்..
“என்னுடைய முதல் படத்தை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் இயக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.. ஆனால் இப்போது X வீடியோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளேன்.. இதை கிளுகிளுப்பான படம் என்று நினைத்துவிடவேண்டாம். இது விறுவிறுப்பான த்ரில்லர் படம். அதை சமொஓக விழிப்புணர்வுடன் கொஞ்சம் நையாண்டி கலந்து சொல்லியிருக்கிறேன்.
என் பையன் கூட, “எங்க அப்பா டைரக்டர்.. இப்படி X வீடியோஸ் என்ற படம் எடுத்திருக்கிறார் என்று தன்னுடைய பிரண்ட்ஸிடம் கூட சொல்லமாட்டேன் என சொல்லிவிட்டான். ஏன் இந்த டைட்டிலை வைத்தீர்கள்.. எப்...
அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டப் போகும் அறிமுக இயக்குநர்
கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ' எக்ஸ் வீடியோஸ் ' .
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சஜோசுந்தர் பேசும் போது ,
" நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது . என் நண்பர் ஒருவர் எனக்கு , தான் பார்த்த பல விதமான வீடியோக்களைப் பகிர்வார். அப்படி ஒரு முறை அவர் அனுப்பிய வீடியோவைப் பார்...
படப்பிடிப்பு முடியும் தருவாயில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’
ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வணிக பலம் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் படங்களே வணிக பலம் பெறும் படங்களாக இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி வருகிறார். '7c's Entertainment Private Limited' தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை 'Amme Narayana Entertainment' ரிலீஸ் செய்யவுள்ளது. நவம்பர் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுதிலிருந்தே இப்படத்தை வணிகத்தார்கள் போட்டி போட்டு வாங்க தொடங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இதற்க்கு விஜய் சேதுபதியின் அசுர வளர்ச்சியும் கவுதம் கார்த்திக்கின் வெற்றி பயணம் தொடங்கியுள்ளதும் தான் காரண...
ஜெயில் ‘பரோல்’ என்பதை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ’12-12-1950′
ஒருவர் தனது வாழ்வின் மிக முக்கியமான நபரை பார்க்க ஜெயிலிலிருந்து கடும் முயற்சிகளுக்கு பிறகு பரோலில் வருவது தமிழ் நாட்டு மக்களிடையே பரபரப்பு செய்தியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெயில் 'பரோல்' என்பதை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் '12-12-1950'. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளவர் கபாலி செல்வா. ஜெயில் தண்டனையில் இருக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர், ரஜினியின் ஒரு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண பரோலில் வர ஆசைப்பட்டு எப்படி வந்தார் , படத்தின் முதல் கட்சியை பார்த்தாரா இல்லையா என்பது தான் இந்த காமெடி கலந்த ஜனரஞ்சகமான படத்தின் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் வாரங்களில் ரிலீசாக தயாராகவுள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு சமர்ப்பணமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து கபாலி செல்வா பேச...





