Blog
மா.கா.பா.ஆனந்தின் ‘மாணிக் பஸ்ட் லுக் – விஷால் வெளியிட்டார்
சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கும் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மாணிக்’. இதில் ஹீரோயினாக ‘எதிர் நீச்சல்’ படத்தில் நடித்த சூசா குமார் நடித்துள்ளார். இரண்டாம் ஹீரோவாக வத்சன் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் மார்டின், இயக்கிய பல குறும்படங்கள் பல்வேறு விருது போட்டியில் பங்கேற்றதுடன், கலைஞர் டிவி-ன் நாளைய இயக்குநர் சீசன் 5 போட்டியில் வெற்றி பெற்று டைடிலையும் வென்றுள்ளது.
மோஹிதா சினி டாக்கீஸ் சார்பாக மா.சுப்பிரமணியம் தயாரித்துள்ள இப்படம் பேண்டஷி கலந்த காமெடிப் படமாக உருவாகியுள்ளது
பாட்ஷா ரஜினிகாந்த் கெட்டப்பில் இப்படத்தின் டிசைன்கள் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று (செப்.15) இப்படத்தின் பஸ்ட் லுக் டிசைன் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி...
The Beautiful Eye | Tamil Documentary
https://www.youtube.com/watch?v=xh0GeY5cBcE&feature=youtu.be
அக்டோபர் 6ஆம் தேதி ‘விழித்திரு’
சில படங்கள் தான், ரிலீஸ் தாமதம் ஆனாலும் அதன் எதிர்பார்ப்பு என்றுமே குறையாமல் இருக்கும். கிருஷ்ணா. வித்தார்த், வெங்கட் பிரபு மற்றும் தன்ஷிகா நடிப்பில் தயாரான 'விழித்திரு' தனது கதையம்சத்தினால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'' இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள 'சவுந்தர்யன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான கதையை சுவாரஸ்யமாக.தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார் இப்படத்தின் இயக்குனர் மீரா கதிரவன்....
பைரஸிக்கு எதிராக 24 மணி நேரம் தொடர்ந்து பேசும் மாரத்தான்
பைரஸிக்கு எதிராக ஹீரோ டாக்கீஸ் நிறுவனம் 24 மணி நேரம் தொடர்ந்து பேசும் 24 மணி நேர தொடர் மாரத்தான் நிகழ்ச்சியை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடத்தி வருகிறது. இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஜே சதீஷ்குமார், ஏபி இண்டர்நேஷனல் சஞ்சய் வாத்வா ஆகியோர் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். இன்று 12 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி நாளை 12 மணி வரை தொடர்ந்து நேரலையாக நடக்க இருக்கிறது.
3 வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஹீரோ டாக்கீஸை ஆரம்பித்தோம். பல பேருக்கு ஹீரோ டாக்கீஸ் என்றால் என்ன? நாங்கள் யார் என்பதே தெரியாது. 5 வருடங்களுக்கு முன்பு பைரஸியால் தான் எங்கள் நிறுவனமே துவங்கப்பட்டது. துப்பாக்கி படத்தை திரையரங்கில் பார்க்க முடியாத சூழ்நிலையில் டோரண்டில் பார்த்தோம். எங்களுக்கு ஒரே குற்ற உணர்வாக இருந்தது. நம்மை போல பலர் இந்த குற்ற உணர்வோடு இருப்பார்கள் என நினைத்தோம். அ...
குழந்தைகள் வன்புணர்வு, கடத்தலை தடுக்க பாரத் யாத்ரா…
2014ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, சத்யார்த்தி என்ற அமைப்பை தொடங்கி இந்தியா முழுக்க குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கடத்தலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பாரத் யாத்ரா என்ற ஒரு யாத்திரையை தொடங்கியுள்ளார். செப்டம்பர் 11ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு யாத்திரை டெல்லியில் முடிகிறது. 35 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான உறுதிமொழியை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் கைலாஷ் சத்யார்த்தி.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ஒவ்வொரு நாளும், செய்திகளில் குழந்தைகள் பற்றிய செய்திகளை காண்கிறோம். நம் வீடுகள் கூட பாதுகாப்பானதாக இல்லை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெரு...
சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு முடிந்தது!
சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்தது.
அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, சண்டைதான் இந்தப் படத்தின் கதை. ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது என்கிறார் வாராகி.
இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. படப்பிடிப்பில் செய்தியாளர்களை வாராகி மற்றும் நாயகிகள் ஷிவானி குரோவர், ஜிஸ்மி ஆகியோ...





