Blog
விவேகம் படத்தின் எடிட்டர் ரூபன் தரும் முன்னோட்டம்
ஒரு திரைப்படத்தை ஆக்கவும் அழிக்கவும் கூடிய சக்தி வாய்ந்தது அதன் படத்தொகுப்பு. திறமையாக , நேர்த்தியாக படத்தொகுப்பு செய்யப்பட்ட எந்த ஒரு படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி கண்டுள்ளது. பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படமான 'விவேகம்' போன்ற ஒரு பிரம்மாண்ட படத்தில் படத்தொகுப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. தனது புதுமையான விறுவிறுப்பான 'கட்' களால் தமிழ் சினிமாவின் முக்கிய படத்தொகுப்பாளர்களில் ஒருவரான ரூபன், அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்து, சிவா இயக்கத்தில் , சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் , வெற்றியின் ஒளிப்பதிவில் உருவாகி , ஆகஸ்ட் 24 ஆம் தேதி உலகம் முழுவது பிரம்மாண்டமாய் ரிலீஸாகவுள்ள 'விவேகம்' படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.
இது குறித்து படத்தொகுப்பாளர் ரூபன் பேசுகையில், '''விவேகம்',படம் முழுவது கைதட்டி கொண்டாடக்கூடிய, ஒரு உண்மை...
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் தரமணி
இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரத்துடன் தைரியமாக, வெளிப்படையாக பேசும் படங்களும் என்றுமே வரவேற்பை பெறும். ராம் இயக்கத்தில், JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவியின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் 'தரமணி' இது போன்ற தற்கால ஆண் பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படமாகும். இது குறித்து இயக்குனர் ராம் பேசுகையில் ,''அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றில் நான் கண்ட விஷயங்களின் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும் உருவாகிய கதை தான் 'தரமணி'. உலகமயமாக்கத்தால் தமிழ் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. நவீன சிந்தனைகளுக்...
சிம்பு பெயரை களங்கப்படுத்தும் முயற்சி
சமூக ஊடகங்களில் சினிமா நட்சத்திரங்களின் பெயரில் போலியான அக்கவுண்டுகளை தயாரித்து அதன் மூலம் போலியான தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு அந்த நட்சத்திரங்களுக்கு களங்கம் விளைவிக்க ஒரு கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி நடிகர் சிலம்பரசன் அவரது ட்விட்டர் பதிவில் ஒரு கருது தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு செய்தி நிலவிவருகிறது. இது குறித்து சிம்பு பேசுகையில், ''எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான , உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி. பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக அக்கௌன்ட் மூலம் இது போன்று ட...
நம்ம விவசாயம் – விழிப்புணர்வு நிகழ்வு
நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க அன்பரசன் இயக்கத்தில் 'நம்ம விவசாயம்' என்ற பாடல் மற்றும் காட்சி தொகுப்பு உருவாக்கியிருக்கிறார்கள். சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இந்த அமைப்பின் அடுத்தடுத்த திட்டங்களை பற்றிய ஒரு அறிமுகமும் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் குறு விவசாயிகள் மட்டும் 82 சதவீதம் இருக்கிறார்கள். சொந்த முயற்சியில் அரசின் ஆதரவு இல்லாமலேயே விவசாயம் செய்து வருகிறார்கள். அரசின் மானியமும் கிடைப்பதில்லை. நம்ம விவசாயம் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிப்போம் என்றார் ஷங்கர்.
விவசாயம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. மூன்று போகம் விளையக்கூடிய தஞ்சையில், யாரும் காசு கொடுத்து அரிசி வாங்கியதே இல்லை. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். தஞ்சை...
‘ஜம்ப் கட்ஸ்’ – ஒரு புதிய பாணி
தமிழ் டிஜிட்டல் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் 'ஜம்ப் கட்ஸ்' என்ற புதிய பாணியை கையாண்டு ஒரு புரட்சியை ஏற்படுத்தியது நரேஷ்-ஹரி கூட்டணி. இந்த பாணியை கையாள்வதால் தங்கள் சேனலிற்கு 'ஜம்ப் கட்ஸ்' என்று பெயரிட்டனர். 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த இணையதள சேனலின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை தற்பொழுது 5 லட்சத்தை தொட்டுள்ளது.
லயோலா கலோரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து பட்டம் பெற்ற ஹரி மற்றும் நரேஷின் இந்த விடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிஜிட்டல் வீடியோ உலகின் முன்னோடியாக இந்த 'ஜம்ப் கட்ஸ்' கருதப்படுகிறது. இவர்கள் இருவரின் அபார திறமை இவர்களுக்கு பெரும் பல வாய்ப்புகளை கொண்டவந்தவண்ணமுள்ளது.
இது குறித்து இவர்களின் டிஜிட்டல் பார்ட்னரான 'டிவோ' நிறுவன இயக்குனர் ஷாஹிர் முனீர் பேசுகையில், ''இவ்வளவு குறுகிய காலத்திலேயே இவர்கள் ஐந்து லட்சம் சந்தாதாரர்கள் பெற்றிருப்பது ...
கமல்+ரஜனி ரசிகன் = ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
கமல்+ரஜனி ரசிகன் நான். அதிலும் ரஜனி சார் எனக்கு மிக நெருக்கமான நண்பர்! என் வளர்ச்சியில் அக்கரை காட்டியவர். பாபுஜி என்ற தயாரிப்பாளரிடம் " பார்த்திபனை heroவா போட்டு படம் எடுங்கள்" எனத்தூண்டியவர். Ktvi பார்த்து மெச்சியவர். அவருடன் விவாதங்களில்... என் எதிர் கருத்தை ரசித்து மதிப்பவர்.உதாரனத்திற்கு "எந்த கோவிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இல்லையோ அந்த கோவிலுக்கு உள்ளே தான் கடவுள் இருக்கிறார்" என்ற என் அக(ழ்வு)ஆராய்ச்சி கூட மறுப்பாக இருந்தாலும் வெறுப்பாக நோக்கமாட்டார். நேற்றைய என் பேட்டி கூட அவர் சொன்ன அதே வார்த்தைகளை வழக்கமான என் நகைச்சுவை கலந்து ரசிக்க சொன்னதேயன்றி அவரது ரசிகர்களை புண்படுத்தும் நோக்கமில்லை. அப்படியானால் அது என்னையும் தானே புண்படுத்தும்? (காண்க முதல் வரி).
இதே கேள்விகளுக்கு இதே பதில்களை
இதே சிரிப்புடன் போன மாதமும் சொன்னேன் சிறு சலசலப்புமில்லை ஆனால் நேற்றைய மேடையும் சூழலும் ஏ...
சதுர அடி 3500 – விமர்சனம்
ரியல் எஸ்டேட் தொழிலின் இருண்ட பகுதிகளையும் அதில் ஆதிக்கம் செலுத்தும் மஃபியா கும்பலையும் படம் படித்துக் காட்டுகிறது சதர அடி 3500.
புதிதாகக் கட்டப்பட்டுவரும் அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் அதன் ப்ரமோட்டர் ஆகாஷ் தூக்கில் தொங்கும் காட்சியுடன் துவங்கும் படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது.
தூக்கில் தொங்கும் ஆகாஷ் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற என்ற கேள்வியுடன் காட்சிகள் விரிகின்றன.
இறந்துபோன ஆகாஷின் ஆவி ஆங்காங்கே உலவுவதாகவும், பேயாக அவரைப் பார்த்ததாகவும் பலரும் கூறுகின்றனர். இதை உயர்போலீஸ் அதிகாரியான தலைவாசல் விஜய் நம்புகிறார். இது குறித்து புலன் விசாரணை செய்யும்படி துடிப்பான போலீஸ் அதிகாரியான நிகிலுக்கு உத்தரவிடுகிறார்.
ஆவி, பேய், பிசாசு போன்ற சமாச்சாரங்களை சற்றும் நம்பாத நிகில் களத்தில் இறங்க, இனியாவின் அறையில் ஆகாஷ் ஆவியைப் பார்த்ததாக அவரது தந்தையே கூற...




