Sunday, November 29

Blog

‘வேம்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

‘வேம்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

News
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'வேம்பு'. 'வேம்பு'. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் 'மெட்ராஸ்' , 'தங்கலான்', கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிகண்டன் முரளி இசை அமைத்துள்ளார். குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சீனுராமசாமி, தங்கர்பச்சான் , நித்திலன் சாமிநாதன், மடோன் அஷ்வின், நடிகர் யோகிபாபு, நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இப்படம் குறித்து அதன் இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறுகையில், "பெண் என்றாலே ஏதாவது குறை ...

மார்ச் 14ல் ரி-ரிலீஸ் ஆகும் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி”!

Uncategorized
ரவி மோகன் நடித்த ஹிட் படம் “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ் . தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் திரைத்துறையில் 20 வருடங்களைக் கடந்திருக்கிறார். இதனைக் கொண்டாடும் வகையில் அவர் நடித்த பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மீண்டும் புதுப்பொலிவுடன் மார்ச் 14ம் தேதி வெளியாகவுள்ளது. எடிட்டர் மோகன் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், 2003 ஆம் வருடம் ரவி மோகனை திரைக்கு அறிமுகப்படுத்திய படம் ஜெயம். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து திரையுலகில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதர்கடுத்த ஆண்டு 2004 ல் இதே கூட்டணியில் வெளியான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. அதிரடி ஆக்‌ஷன் படமான இப்படத்தை தியேட்டர்களில் மக்கள் கொடுத்த ஆர்பாட்ட ரியாக்‌ஷன் மறக்க முடியாதது. ...
கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’!

கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’!

News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள'பைசன்' எனும் துணிச்சலான விளையாட்டு வீரரை பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்டுள்ளன! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பைசனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அனைவரின் பாராட்டையும் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விளையாட்டு வீரர் பற்றிய இந்த கதையின் ஃபர்ஸ்ட் லுக்கை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- நீலம் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வெளியிட்டுள்ளது. கபடி வீரராக துருவ் விக்ரம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவருடன் இணைந்து நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு.. ஆர்வம்.. மீள் உருவாக்கம்.. மற்றும் அனைத்து தடைகளையும் எதிர்த்து வெற்றி பெறுவதற்கான ஒரு உறுதியான நிலைப்பாட்டை உயிர்ப்பிக்கிறது...
கிங்ஸ்டன் _ விமர்சனம்

கிங்ஸ்டன் _ விமர்சனம்

Reviews
கிங்ஸ்டன் _ விமர்சனம் ஜிவி பிரகாஷின் 25 ஆவது படமாக மலர்ந்திருக்கிறது கிங்ஸ்டன். படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்று படத்தையும் தயாரித்து இருக்கிறார் ஜீவி. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூவத்தூர் கடற்கரை கிராம மக்கள் மீன்பிடித் தொழிலையே நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஆனால் சிறிது காலமாக அவர்களால் கடலுக்குச் சென்று மீன் பிடி தொழிலை செய்ய முடியவில்லை. காரணம் கடலுக்குள் அடக்கம் செய்யப்பட்ட ஒரு பிரேதத்தின் ஆத்மா கடல் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டு மீன் பிடிக்க வரும் மீனவர்களை கொன்று விடுவதாக மீனவ மக்களே நம்புகிறார்கள். இந்த துஷ்ட ஆவியின் அட்டகாசங்கள் சுமார் 40 ஆண்டுகளாக நீடிக்கின்றன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த இளைஞர்கள் கடல் அட்டையை கடத்தும் தொழிலில் ஈடுபடுகின்றனர். கிங்ஸ்டன் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், கிங் என்று எல்லோராலும் அழைக்கப்...
”என்னை வாழ விடுங்கள்” _ நடிகை சோனா கண்ணீர்!

”என்னை வாழ விடுங்கள்” _ நடிகை சோனா கண்ணீர்!

News
“‘ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள் கொடுக்கிறார்கள் ?” ; நடிகையும் இயக்குநருமான சோனா காட்டம்! அஜித் நடித்து எழில் இயக்கத்தில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக அறியப்படும் சோனா. தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும் ‘ஸ்மோக்’ என்கிற வெப் சீரிஸ் மூலமாக அவர் தனது டைரக்சன் பயணத்தையும் துவங்கியுள்ளார். ஷார்ட்பிளிக்ஸ் OTT கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் Fly High production நிறுவனம் சார்பில் இந்த வெப் சீரிஸை அவர் தயாரித்திருப்பதுடன் இதற்கான கதையையும் அவரே எழுதியுள்ளார். இந்த வெப் சீரிஸ் தயாரிப்பில் தனக்கு ஏற்பட்ட கடுமையான, கசப்பான அனுபவங்கள் தனக்கு கிளம்ப...

எமகாதகி குழு மற்றும் நைசாட் மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் நன்றி அறிவிப்பு!

Uncategorized
எமகாதகி படத்திற்கு பெரும் ஆதரவையும் அன்பையும் தந்த தமிழ் திரைப்பட பிரபலங்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி நைசாட் மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒரு தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு தர வேண்டும் என்பது தான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது. இப்படத்திற்கு முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் அளித்த பெரும் ஆதரவும், அன்பும் எங்களை திக்குமுக்காடச் செய்துள்ளது. உங்களின் அன்பால், நீங்கள் தந்த ஆதரவினால், எமகாதகி திரைப்படம் பெருமளவிலான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் கவின், மற்றும் அஞ்சலி ஆகியோருக்கு நாங்கள் எங்கள் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். முழு அன்புடன் எங்கள் படத்திற்கான விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டதுடன், எங்களின் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த அவர்களின் அன்பு மறக்க முடியாதது. புதுமுக குழுவான எங்களுக்கு இவ்விதமான உதவிகளும...
தமிழ், தெலுங்கில் அடுத்தடுத்து வெளியாக தயாராகும் வசுந்தராவின் படங்கள்!

தமிழ், தெலுங்கில் அடுத்தடுத்து வெளியாக தயாராகும் வசுந்தராவின் படங்கள்!

News
“நெகட்டிவ் சாயல் கொண்ட கெத்தான மாடர்ன் கதாபாத்திரங்கள் தான் எனது முதல் சாய்ஸ்” ; வசுந்தரா! இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா பக்ரீத், தலைக்கூத்தல் போன்ற செலக்டிவ்வான நல்ல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதனால் தான் இத்தனை வருட திரையுலக பயனத்தில் அவரால் நிலையாக தொடர்ந்து பயணிக்க முடிகிறது. அந்தவகையில் கடந்த வருட இறுதியில் இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வெளியான ‘கங்குவா’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத...
100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!

News
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது ! தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. 1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உட்படப் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொண்டனர். வ...
ஏப்ரல் 4 அன்று ஸ்ட்ரீம் ஆகும் டெஸ்ட்’ திரைப்படம்!

ஏப்ரல் 4 அன்று ஸ்ட்ரீம் ஆகும் டெஸ்ட்’ திரைப்படம்!

News
மூன்று நடிகர்கள், ஒரு கிரிக்கெட் போட்டி மற்றும் வாழ்க்கையை மாற்றும் ஒரு கதை: ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று ப்ரீமியர் ஆகிறது! நம் வாழ்வின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. சில சோதனைகள் உங்கள் தைரியம், உங்கள் கனவுகள் மற்றும் உங்கள் தியாகங்களை சோதிக்கும். ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் 'டெஸ்ட்' திரைப்படம் ப்ரீமியர் ஆகிறது. கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் 'டெஸ்ட்'. இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. துணிச்சலான மற்றும் அழுத்தமான கதைகளைத் தயாரித்த 'YNOT' ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்கு...
அஸ்திரம்’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம்!

அஸ்திரம்’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம்!

News
மார்ச் 7 இல் வெளியாக இருந்த ‘அஸ்திரம்’ படம் ரிலீஸ் தள்ளி வைப்பு! பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளார்கள். வரும் மார்ச்-7ஆம் தேதி இந்த படம் தமிழகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டபோது படம் பார்த்த அனைவரும் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக பாசிட்டிவான விமர்சனங்களையே கூறினார்கள். ஆனாலும் இந்த வாரம் இன்னும் அதிக அளவில் சில படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ‘தியேட்டர் பகிர்வில் ‘அஸ்திரம் படத்திற்கு போதுமான அளவு திரை...
CLOSE
CLOSE