Wednesday, November 25

Blog

அங்கீகாரம் _ விமர்சனம்

அங்கீகாரம் _ விமர்சனம்

Reviews
அங்கீகாரம் _ விமர்சனம் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, தன் வாழ்வையே அதற்காகத் தொலைக்கும் ஒரு தடகள வீரனின் கதைதான் இந்தத் திரைப்படம். அதிகார வர்க்கத்தின் வக்கிரங்களுக்குப் பலியாகும் அந்த இளைஞனின் பயணம், நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ்? நெஞ்சை அழுத்தும் பாரம்! *நடிகர்களின் பங்களிப்பு* கே.ஜெ.ஆர் (நாயகன்): அறிமுக நடிகர் என்று சொல்லவே முடியாது! ஒரு தடகள வீரருக்குரிய கட்டுக்கோப்பான உடல்வாகு, எதார்த்தமான நடிப்பு என முதல் படத்திலேயே ஸ்கோர் செய்கிறார். அம்மா மற்றும் தங்கையிடம் காட்டும் பாசம், அதிகார வர்க்கத்திடம் வெளிப்படுத்தும் கோபம், இறுதிக்காட்சியில் அந்த மெல்லிய வலியை வெளிப்படுத்தும் விதம் என மிரட்டியிருக்கிறார். சிந்தூரி விஸ்வநாத்: தடகள வீராங்கனையாகக் கச்சிதமான தேர்வு. தன்னைத் தவறாக அணுகும் ஒருவனை ஒரே அறையில் வீ...

பூஜையுடன் துவங்கிய ‘குட் நியூஸ்’ (GOOD NEWS) திரைப்படம்!

Uncategorized
மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் 2-வது தயாரிப்பான "குட் நியூஸ்" (GOOD NEWS) திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது! மூவிட்ரான் புரொடக்ஷன் (Movietron Production) நிறுவனம் தங்களது இரண்டாவது தயாரிப்புப் படத்தைத் சென்னையில் பாரம்பரிய முறைப்படி, பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. *"குட் நியூஸ்" (GOOD NEWS)* என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், அனைத்து வயதினரும் ரசித்து மகிழும் வண்ணம், பாசம், நகைச்சுவை மற்றும் நெஞ்சை நெகிழ வைக்கும் தருணங்கள் நிறைந்த ஒரு முழுமையான குடும்பத் திரைப்படமாக உருவாகவுள்ளது. இவ்விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். படத்தின் முதல் காட்சிக்கான க்ளாப் அடித்து *இயக்குநர் விஜய்* துவக்கி வைக்க, புகழ்பெற்ற *இயக்குநர் பாலா* கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். *நடிகர் ஆர்யா* சிறப்பு விருந...
ஜூலை 17-ஆம் தேதி  வெளியாகும் யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து”

ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும் யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து”

News
யோகி பாபுவின் 300-வது திரைப்படம் “அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது! Dhev Cinemas Pvt Ltd கிருத்திகா தங்கப்பாண்டி.S, தங்கப்பாண்டி.D தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள *“அர்ஜுனன் பேர் பத்து”* திரைப்படம், வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். யோகி பாபுவின் 300-வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படம், ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு நடுத்தர வர்க்க இளைஞன் தனது வாழ்க்கையில் ம...
Netflix Unveils Trailer for its First Telugu Original Series: ‘Super Subbu’ Premieres 2 July!

Netflix Unveils Trailer for its First Telugu Original Series: ‘Super Subbu’ Premieres 2 July!

News
Netflix Unveils Trailer for its First Telugu Original Series: ‘Super Subbu’ Premieres 2 July! _Subbu may have come prepared with his lesson plans for Maakipur,_ _but Maakipur has other plans in store for him!_ *24th June 2026:* Netflix has just unveiled the trailer for its first Telugu comedy series, Super Subbu. Created and directed by *Mallik Ram* and starring *Sundeep Kishan, Mithila Palkar* and *Murali Sharma* in pivotal roles, Super Subbu premieres on July 2, only on Netflix. In this comedy of errors, Subramanyam "Subbu" Chillukuri Rao is posted to the one place no teacher wants to go: the notorious (and entirely fictitious) village of Maakipur. Determined to save face with his family, Subbu arrives ready to teach – only to be handed the village’s most awkward assignment: teachin...
அனந்தன் காடு –  விமர்சனம்

அனந்தன் காடு – விமர்சனம்

Reviews
அனந்தன் காடு –  விமர்சனம் கதைக்களமும் பின்னணியும்: தொண்ணூறுகளின் இறுதிக் காலத்தில், திருவனந்தபுரத்தின் பின்னணியில் அரங்கேறிய நிஜக் கதைகளை மையமாக வைத்துத் தீட்டப்பட்ட அரசியல் ஆக்‌ஷன் சித்திரம்தான்  'அனந்தன் காடு'. ஈழப் போராட்டக்களத்திலிருந்து உயிர் தப்பி கேரளாவுக்கு வரும் ஒரு போராளி, அங்குள்ள நிழல் உலகக் கும்பலின் பிடியில் சிக்கினால் என்னவாகும் என்பதே படத்தின் மையப்புள்ளி. திரைக்கதைச் சுருக்கம்: இலங்கை ராணுவத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் ஆர்யா, கேரளாவின் குடிசைப்பகுதி ஒன்றில் தஞ்சம் புகுகிறார். அதே சமயம், தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட  கேரள முதல்வரால் ஏவப்படும் அதே கும்பலுடன் ஆர்யாவின் பாதை இணைகிறது. முதல்வரின் சதித்திட்டத்தின்படி ஒரு செல்வந்தர் கொல்லப்பட வேண்டிய நிலையில், ஆர்யா அதைத் திட்டமிட்டுக் கொடூரமாக முடிக்கிறார். அந்தக் கொலைக்கான பின்னணி என்ன? அந்தச் சம்பவ...
ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம்!

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம்!

News
யுவன் சங்கர் ராஜா இசையில் விக்ரம் பிரபு - அறிமுக இயக்குநர் சித்தார்த் கூட்டணி; புதிய கமர்ஷியல் படம் தொடக்கம்! தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லர் படைப்பாக உருவாக உள்ளது. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ந...
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும்  “தர்மன்”!

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்மன்”!

News
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கமல்ஹாசன் பெருமையுடன் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "தர்மன்" இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து இசை: அனிருத் ரவிச்சந்தர் சண்டைப் பயிற்சி: அன்பரிவ் தயாரிப்பு: கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஜூன் 24, 2026 ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருமே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள். இந்த இருபெரும் நாயகர்களுக்கு இடையேயான நட்பு அரிதானது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பிரியமும் மரியாதையும் அபூர்வமானது. கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்...
சாம் சி எஸ் இசையில்  “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!

சாம் சி எஸ் இசையில் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!

News
சாம் சி எஸ் இசையில் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு! இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது AK Film Factory சார்பில் Arunkumar Dhanasekaran தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் 'இம்மார்டல்' (Immortal) திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலில் தனது தனித்துவமான இசை பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கேட்டவுடன் மனதில் பதியும் மெலடி, டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசை அமைப்பு மற்றும் புதுமையான சவுண்ட் டிசைன் ஆகியவை பாடலுக்கு தனி...
தொடர்ந்து உயர்ந்து வரும் வைபவ் முருகேசனின் திரைப்பயணம்!

தொடர்ந்து உயர்ந்து வரும் வைபவ் முருகேசனின் திரைப்பயணம்!

News
‘யெல்லோ’ முதல் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வரை... தொடர்ந்து உயர்ந்து வரும் வைபவ் முருகேசனின் திரைப்பயணம்! ‘யெல்லோ’ வெற்றிக்குப் பிறகு அடுத்த முக்கிய அத்தியாயம் – ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’. மூலம் மீண்டும் வருகிறார் வைபவ் முருகேசன் ‘யெல்லோ’ (Yellow) படத்தின் மூலம் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்ற நடிகர் வைபவ் முருகேசன், தனது அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படைப்பான ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ (Mammatiyaan Stars) மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளார். இயக்குநர் சவிர் சுதாகர் இயக்கியுள்ள இந்த ZEE5 ஒரிஜினல் வெப் தொடர், ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் கொண்ட ஒரு கிராமத்து இளைஞர்கள் குழு, சென்னை சென்று பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்குகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக அவர்கள் ஒ...
Demonte Colony 3 – The End is Too Far – Worldwide Release on September 11, 2026

Demonte Colony 3 – The End is Too Far – Worldwide Release on September 11, 2026

News
September 11, 2026 Will Belong to Horror Lovers* _*Demonte Colony 3 - The End is Too Far – Worldwide Release on September 11, 2026*_ Few franchises transcend the boundaries of a regular movie release and evolve into an event eagerly awaited by audiences. Particularly in the horror genre, certain franchises command a loyal following that turns every new installment into a celebration. Globally acclaimed franchises such as The Conjuring and Evil Dead have sustained this phenomenon for years, keeping audiences invested in their ever-expanding worlds. On the Indian panorama, only a select few franchises have cultivated such enduring fascination. Tamil cinema proudly boasts one such phenomenon in Demonte Colony. What began nearly 11 years ago has grown into one of the country's most follow...
CLOSE
CLOSE