Thursday, November 26

Blog

ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ்!

News
ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்பக் கதை! *‘கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.* சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. குடும்ப உறவுகளின் ஆழத்தையும்...
மதுரை தந்த மற்றுமோர் கலைஞன்!

மதுரை தந்த மற்றுமோர் கலைஞன்!

News
மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா! மதுரையின் மண்ணில் பிறந்து வளர்ந்த ஈசா, விளையாட்டு உலகில் சாதனைகள் படைத்த இளைஞராக இருந்து தற்போது தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள “ஹபீபி” திரைப்படம் மூலம் அவர் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் தீவிர ஆர்வம் கொண்ட ஈசா, தமிழ்நாடு மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் சென்னை கல்லூரி வாழ்க்கையில் உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டிகளில் பல இடைக்கல்லூரி தங்கப் பதக்கங்களை கைப்பற்றி, இந்திய அளவிலான பல்கலைக்கழகப் போட்டிகளிலும் தொடர்ந்து இறுதிச்சுற்றை எட்டியுள்ளார். விளையாட்டுத் துறையில் பெற்ற ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் மன உறுதியுடன் சினிம...
சீயான் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

சீயான் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

News
சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம் … தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு! தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், தற்போது படப்பிடிப்பு கட்டத்திற்குள் நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது. சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்த் சங்கர் இணைவு, சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதா...
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மகுடம்’ சூடும் விஷால்!

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மகுடம்’ சூடும் விஷால்!

News
விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்* திரைத்துறையின் மீது தனக்குள்ள காதல், அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் என தனது பங்களிப்பை நடிப்பு மற்றும் இயக்கத்தின் வாயிலாக மகுடம் திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் விஷால். ஆக்சன், எமோஷன் மற்றும் நேர்த்தியான திரைக்கதையை கொண்டு உருவாகியுள்ள மகுடம் திரைப்படமானது தமிழ் திரையுலகின் பெருமைமிகு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99 வது திரைப்படமாகவும் நடிகர் விஷாலின் திரைப்பயணத்தில் 35 வது திரைப்படமாகவும் அமையப் பெற்றிருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் மகுடம் திரைப்படத்தின் டீசர் வாயிலாக மக்களுக்கு ஓர் ஆழமான ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கலந்த நேர்த்தியான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் திரைப்படமாக இது அமையப்பெற்றிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ...
செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகும் ‘மண்டாடி’!

செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகும் ‘மண்டாடி’!

News
RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது! விரிவான மற்றும் சவாலான படப்பிடிப்பை திட்டமிட்ட படி வெற்றிகரமாக நிறைவு செய்து, பின்னணிப் பணிகளில் (Post-Production) விறுவிறுப்பாக முன்னேறி வரும் நிலையில், RS இன்ஃபோடெயின்மெண்ட் தனது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமா திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. RS இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள ‘மண்டாடி’, அதன் வித்தியாசமான தலைப்பு, தனித்துவமான விளையாட்டுப் பின்னணி மற்றும் கவனத்தை ஈர்த்த முதல் பார்வை (First Look) காட்சிகளின் மூலம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும்...
சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’

சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’

News
“அந்த வார்த்தையை விஜய் பின்பற்றுகிறாரோ இல்லையோ நான் பின்பற்றுகிறேன்” _ ஆட்டி’ பட தயாரிப்பாளரும் நடிகருமான இசக்கி கார்வண்ணன்! சமீப காலத்தில் கருத்து ரீதியாக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒருசேர வரவேற்பைப் பெற்ற ‘பெட்டிக்கடை’, தமிழ்க் குடிமகன், ‘பரமசிவன் பாத்திமா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவர் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். “எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்” என்கிற கருத்தை மையப்படுத்தி ...
கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்தக்கொண்டZEE5!

கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்தக்கொண்டZEE5!

News
FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது. பரந்த அளவிலான அணுகல் மற்றும் அதிநவீன டிஜிட்டல் திறன்களுடன், ஜூன் 11 முதல் ZEE5 நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ் மற்றும் பிரத்யேக உள்ளடக்கங்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு சாதனங்களில் உள்ள பார்வையாளர்கள் உலக கால்பந்து திருவிழாவின் ஒவ்வொரு தருணத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். இந்த கூட்டாண்மை, FIFA தொடர்களின் பரவலான அளவுக்கும் ரசிகர்களின் ஆர்வத்திற்கும் ஏற்றவாறு, ஆழமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் பிரீமியம் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதோடு, தனது விளையாட்டு உள்ளடக்கப் பட்டியலை வலுப்படுத்தும் ZEE5-இன் உறு...
‘லிங்கம்’ தொடரின் டிரெய்லர் வெளியீடு!

‘லிங்கம்’ தொடரின் டிரெய்லர் வெளியீடு!

News
ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்! கதிர், திவ்யா பாரதி, சத்யா மற்றும் பூர்ணிமா ரவி நடித்துள்ள இந்த தமிழ் கிரைம் திரில்லர், இலட்சியம், துரோகம் மற்றும் பழிவாங்கலை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த கதையைச் சொல்கிறது ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தமிழ் ஒரிஜினல் தொடரான லிங்கம் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. குற்றம், அதிகாரம், துரோகம் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு தீவிரமான உலகத்தை இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தொடர் ஜூன் 26 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 1990களிலும் 2000களின் தொடக்க காலத்திலும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடைபெற்ற நம்பமுடியாத உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட லிங்கம், ஒரு கபடி வீரரின் வாழ்க்கை...
பாரதிராஜா மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்!

பாரதிராஜா மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்!

News
பாரதிராஜா மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்! 'என் இனிய தமிழ் மக்களே'... என்று தன் கரகரத்த குரலால் ரசிகர் பெருமக்களை கட்டிப்போட்ட அந்த தென்பாண்டி சிங்கமாம், தேனீ பக்கத்துல இருந்து வந்த தங்கமாம், தமிழ் திரை உலகத்தின் தலையாய அங்கமாம், இயக்குனர் இமயமாம் ஐயா பாரதிராஜா அவர்களுடைய மறைவு மனதை வாட்டுகின்றது. 16 வயதினிலே படத்திலே மயிலை படைத்தவர். கிழக்கே போகும் ரயிலில் ரயிலை குயிலாய் கூவி அழைத்தவர். புதிய வார்ப்புகளை வார்த்தவர். சிகப்பு ரோஜாக்களை விதைத்தவர். நிறம் மாறாத பூக்களாய் நிலைத்து நின்றவர். மண்வாசனையை பரப்பியவர். கிழக்கு சீமையிலே என்று கிளர்ந்தெழுந்து நின்றவர். முதல் மரியாதையை கண்டவர். தமிழ் திரை உலகத்தின் தலையாய மரியாதையை வென்றவர். அவருடைய மறைவு செய்தி மனதை ஈட்டி போல் தாக்குகின்றது. நெஞ்சம் தாங்கவில்லை. எப்படி தாங்குவது என்றே தெரியவில்லை. அவரை இழந்து வாடக்கூடிய தமிழ் திரை உலகத்து ரசிக பெரு...
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்துக்காக தர்புகா சிவா இசையில் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பாரதியார் பாடல்!

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்துக்காக தர்புகா சிவா இசையில் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பாரதியார் பாடல்!

News
மகாகவி பாரதியாரின் காலத்தால் அழியாத ‘காதல் செய்வீர்’ பாடல், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தில் புத்துயிர் பெறுகிறது! ஜூன் 26 பட வெளியீட்டை முன்னிட்டு தயாள் பத்மநாபனின் தீவிர கிரைம் டிராமா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு! மாநில அரசின் விருது பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரைப்படம், அதன் விறுவிறுப்பான கதைக்களம், தீவிரமான கதாபாத்திர உலகம் மற்றும் உணர்வுகள் நிறைந்த கதை சொல்லல் ஆகியவற்றால் தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. 2M சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாரித்துள்ள இப்படத்தில், தயாள் பத்மநாபன் இணை தயாரிப்பாளராக டி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் பணியாற்றியுள்ளார். இப்படம் உலகம் முழுவதும் ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பார்வையாளர்களுக்கு தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் திரையரங...
CLOSE
CLOSE