Thursday, November 26

Blog

ஜூன்-12ஆம் தேதி வெளியாகும் ‘ஆட்டி’ திரைப்படம்!

ஜூன்-12ஆம் தேதி வெளியாகும் ‘ஆட்டி’ திரைப்படம்!

News
ஜூன்-12ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்ட ‘ஆட்டி’ படத்தின் வெளியீடு! லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். எங்கள் குல\த்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.. பழந்தமிழ் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும், அதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி வந்ததைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கிய பாலியல் சீண்டல்களையும் அதை கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது. ஜூன்-5 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில்,...
அனைவரும் பார்க்கத் தகுந்த வகையில் U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம்!

அனைவரும் பார்க்கத் தகுந்த வகையில் U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம்!

News
திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.* ட்ரைலர், வசனங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனம் ஈர்த்த அங்கீகாரம் திரைப்படம் அனைவருக்குமான திரைப்படமாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு U சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின், டிரெய்லரும், முதல் பாடலான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜிப்ரான் இசையில், கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில் உருவான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் அமைந்துள்ள இந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல உண்மை சம்...
முதல்வரை சந்தித்த பார்த்திபன்!

முதல்வரை சந்தித்த பார்த்திபன்!

News
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! சினிமா ஒரு சொகுசு சொர்க்கபுரி. சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர் சட்டென மாறிய வானிலைப் போல CM நாற்காலியில் அமர்ந்ததுமே தன்னை மிகுந்த பொறுப்புள்ளவராக பொருத்திக் கொள்வது சாத்தியமா? சத்தியமாய் சந்தேகம் மேலெழும். சினிமாவிலிருந்து சென்றவர் என்பதால் ஒரு செல்ல ப்ரியம் கலந்த கர்வத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் சந்தித்தேன் நம் மாண்புமிகு விஜய் அவர்களை. புகைப்படம் எடுக்கையில் தோளின் மீது கை வைக்கையில் “ கை போட்டுக்கலாமா?”என்றார் பணிவாக. “சார்ர்ர்! என்ன சார் நானில்லை உங்ககிட்ட கேட்கனும்” என்றேன் “போடுங்க” என்று அவரே என் கையை இழுத்து போட்டுக் கொண்டார். திரையை விலக்கி நான் காட்டிய photo frame-ஐ பார்த்து “இப்படி ஏதாவது வருமென எதிர்...
நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’!

நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’!

News
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் 'அந்தரன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! 'அந்தரன்' திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், 'அருவி' பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா மேற்கொள்ள கலை இயக்கத்தை சசிகுமார் கவனித்திருக்கிறார் பரபரப்பான கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார். வரும் 25ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரை...
ஜூன் 3 அன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் ‘கார்மேனி செல்வம்’!

ஜூன் 3 அன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் ‘கார்மேனி செல்வம்’!

Uncategorized
தமிழ், தெலுங்கு மொழிகளில் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற 'கார்மேனி செல்வம்' திரைப்படம் ஜூன் 3 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது! *பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவான 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தை அமேசான் பிரைமில் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்* தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற 'கார்மேனி செல்வம்' திரைப்படம், ஜூன் 3, 2026 அன்று அமேசான் பிரைம் வீடியோ ஒடிடி தளத்தில் வெளியாகிறது. பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படம், நிதி நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக தனது முதலாளியின் காரை யாருக்கும் தெரியாமல் டாக்ஸியாக இயக்கும் ஓட்டுநர் ஒருவரின் வாழ்க்கையை திரையில் கா...
ஹிப்ஹாப் தமிழா தயாரித்த “பொருநை” ஆவணப்படம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு!

ஹிப்ஹாப் தமிழா தயாரித்த “பொருநை” ஆவணப்படம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு!

News
 Foca International Archaeology & Cultural Heritage Film Festival-இல் திரையிடப்படும் முதல் தமிழ் ஆவணப்படம் பொருநை! ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் 2019 ஆம் ஆண்டு தமிழி என்ற ஆவணப்பட இணையத் தொடரை உருவாக்கி வெளியிட்டிருந்தது. சுமார் 20,000 கிமீ பயணித்து, பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை பலவற்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் முன்னெடுப்பில், பொருநை என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி என்று அழைக்கப்படும் பொருநை நதிக்கரையில் 2020-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை முழுமையாக பதிவு செய்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பொருநை ஆவணப்படத்தை ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப்குமார் - இளங்கோ சம்பத்குமார...
கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு  நிறைவு!

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு! பின்னணி பணிகள் தொடக்கம்!! மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல் ஆக்ஷன் திரைப்படமான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’, இதில் கதாநாயகனாக கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், தற்போது திரைப்படம் பின்னணி (Post-Production) பணிகளுக்குள் நுழைந்துள்ளது. புகழ்பெற்ற இயக்குநர் ராஜு முருகனின் நீண்டகால உதவியாளரான அறிமுக இயக்குநர் தீனா ராகவன் இயக்கும் இந்தப் படம், அதன் தாக்கமிக்க தலைப்பு டீசர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. கௌதம புத்தரின் சிந்திக்கத் தூண்டும் மேற்கோளுடன் தொடங்கிய அந்த டீசர், தீவிரமான அரசியல் பின்னணி, அதிரடியான காட்சிகள், ஆழமான உணர்வுகள் மற்றும் ராஜு முருகன் எழுதிய சக்திவாய்ந்த ...
இசை உலகில் புகழ்பெற்ற கெனீஷா திரையுலகில் அறிமுகம்!

இசை உலகில் புகழ்பெற்ற கெனீஷா திரையுலகில் அறிமுகம்!

News
இண்டி இசை உலகின் பிரபலமான கெனீஷா, Mud Fish திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகம்!! இசைப் பயணத்தை விரிவுபடுத்தும் பாடகியின் புதிய மாலிவுட் அத்தியாயம்!! தனது மனதை வருடும் குரல் மற்றும் தனித்துவமான இசை அடையாளத்தால் இண்டி இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள கெனீஷா, தற்போது தனது கலைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டத் தயாராக உள்ளார். Mud Fish திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகும் அவர், தனது இசைப் பயணத்தில் ஒரு புதிய மற்றும் உற்சாகமான அத்தியாயத்தை தொடங்குகிறார். சுயாதீன இசை மற்றும் உலகளாவிய மேடை நிகழ்ச்சிகள் மூலம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள கெனீஷாவின் மாலிவுட் நுழைவு, திரைப்படத்தின் இசை உலகிற்கு ஒரு புதுமையான இசைச் சுவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கெனீஷாவுக்கு இசை என்பது எப்போதும் உணர்வுகளை வெளிப்படுத்தவும், மக்களை இணைக்கவும், நேர்...
Dayal Padmanabhan’s “Lakshmikanthan Kolai Vazhakku 

Dayal Padmanabhan’s “Lakshmikanthan Kolai Vazhakku 

News
Dayal Padmanabhan’s “Lakshmikanthan Kolai Vazhakku  State Government Award winning filmmaker Dayal Padmanabhan, known for his compelling and content driven storytelling across languages, is gearing up for the release of his much anticipated Tamil film ‘Lakshmikanthan Kolai Vazhakku’, slated to hit screens on June 25. Produced by KV Shabarreesh under the banners 2M Cinemas and D Pictures, the film features an ensemble cast including Vetri, Rangaraj Pandey, Brigida Saga, Maaran, Saravanan, Lizzie Antony, Logan Kannan, Narmadha, Aruvi Madhan, Kanya Bharathy, Kavitha Bharathy, and Subramaniam Siva in pivotal roles. A grand press meet of ‘Lakshmikanthan Kolai Vazhakku’ was held in Chennai in the presence of the cast and crew. Adding to the excitement, an exclusive visual synopsis and characte...
பிறந்தநாளில் முதியோரிடம் ஆசிபெற்ற நடிகை சோனா!

பிறந்தநாளில் முதியோரிடம் ஆசிபெற்ற நடிகை சோனா!

News
பிறந்தநாளில் முதியோரிடம் ஆசிபெற்ற நடிகை சோனா! நடிகை சோனா தனது பிறந்தநாளை முன்னிட்டு மதுரவாயலில் உள்ள 'பிருந்தாவனம் முதியோர் இல்லம்' சென்று அங்கிருந்த முதியோரிடம் ஆசி பெற்றார். முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த முதியோர்களைச் சந்தித்து நலம் விசாரித்தவுடன் அவர்களுக்கு உணவு, பரிசுப் பொருட்களை வழங்கினார். நடிகை சோனா ஹைடன் திரைத்துறையின் தொழில்நுட்பங்களை அறிவதில் அர்வம் உள்ளவர், அதில் ஈடுபடவும் செய்பவர். அவர் இயக்கி நடித்து அண்மையில் வெளிவந்த 'பஜ்ராவோ மஸ்தானி' இசை ஆல்பம் பெரிய வெற்றி பெற்றுள்ளது.இதில் சோனாவுடன் பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன் பாடி நடித்திருக்கிறார். V2 இசையமைப்பில் ஆசிஃப் கான் ஒளிப்பதிவில் இந்த ஆல்பத்தை சோனாவே இயக்கியிருந்தார். ஏற்கெனவே பல படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்துப் பிரபலமாகியுள்ள நடிகை சோனா, பிரதான வேடமிட்டு நடிக்கும் புதிய படம் தொடங்கி இருக்கிறது.புதிய...
CLOSE
CLOSE