Thursday, November 26

Blog

இரட்டையர் _ விமர்சனம்

இரட்டையர் _ விமர்சனம்

Reviews
‘இரட்டையர் விமர்சனம் ‘இரட்டையர்’ - இருக்கை நுனிக்கே  ரசிகர்களை இழுத்து வரும் சைக்கலாஜிகல் திரில்லர் என்று ஒரே வரியில் சுருக்கமாக விமர்சித்து விடலாம் எத்தனையோ மொழிகளில் ஏராளமான த்ரில்லர் படங்களை பார்த்துப் பழகியிருப்போம். ஆனா, இது அப்பிடி இல்ல பாஸ்! டோட்டலா வேற ரூட்டுல வந்து மிரட்டுற பக்கா சைக்கலாஜிகல் த்ரில்லர் தான் இந்த ‘இரட்டையர்’. ஏசியா ஐகானிக் ஸ்டுடியோஸ் தயாரிப்புல ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன், வினோத் கண்ணன் கூட்டணியில இந்த வாரம் தியேட்டருக்கு வந்திருக்கு. புது இயக்குநர் ஜெகதீஷ் ஃபர்ஸ்ட் மேட்ச்லயே சிக்ஸர் அடிச்சிருக்காரா இல்லையா? வாங்க பார்ப்போம்! கதை இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை பிரதேசம் ஒரு குடும்பம் காதலி சென்று கொண்டிருக்கிறது. எதிர்பாராமல் நடக்கும் ஒரு கோர விபத்துல அப்பா ஸ்பாட் அவுட்! அம்மாவோட முகமும் முழுமையாக சிதைந்து விடுகிறது. அப்புறம் என்ன, பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்ட...
புதிய வாழ்க்கையை தொடங்கிய தயாரிப்பாளர் தீபன் பூபதி!

புதிய வாழ்க்கையை தொடங்கிய தயாரிப்பாளர் தீபன் பூபதி!

News
புதிய வாழ்க்கையை தொடங்கிய தயாரிப்பாளர் தீபன் பூபதி! தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் தீபன் பூபதி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோர், டாட்டூ கலைஞரான நிவேதிதா கிரி ஆகியோர் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் நடைபெற்ற தனியார் குடும்ப விழாவில் திருமண பந்தத்தில் இணைந்தனர். மிகவும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த திருமண நிகழ்வு, பாரம்பரிய சடங்குகள் மற்றும் குடும்ப மூத்தோரின் ஆசீர்வாதங்களுடன் அமைதியான சூழலில் நடைபெற்றது. பிரம்மாண்ட கொண்டாட்டங்களைத் தவிர்த்து, குடும்ப பாசத்திற்கும் உறவுகளின் அரவணைப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் சினிமாவில் தடம் பதித்த தயாரிப்பாளர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரைப்படத் துறையில் பயணித்து வரும் தீபன் பூபதி, உள...
ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் ‘தி இந்தியா ஸ்டோரி’!

ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் ‘தி இந்தியா ஸ்டோரி’!

News
காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே   நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது! Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது. ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்ட...
ஜூன் 12 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘டபுள் ஆக்குபன்சி’!

ஜூன் 12 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘டபுள் ஆக்குபன்சி’!

News
ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்! அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ள புதிய தமிழ் ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படமான டபுள் ஆக்குபன்சி, வரும் ஜூன் 12-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில், படம் உருவான விதம் மற்றும் வெளியீட்டை நோக்கிய அதன் சுவாரஸ்யமான பயணம் குறித்த பல தகவல்களைப் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ள இப்படத்தில், சந்தோஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் சம்யுக்தா விஸ்வநாதன், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில...
பெத்தி _ விமர்சனம்

பெத்தி _ விமர்சனம்

Reviews
பெத்தி _ விமர்சனம ’ராம் சரணின் மிரட்டல் பிளாக்பஸ்டர் என்று பத்து படத்தை ஒரே வரியில் சுருக்கமாக விமர்சனம் செய்து விடலாம். புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் - ஜான்வி கபூர் கூட்டணியில் உருவான 'பெத்தி' தியேட்டர்களை அதிரவைக்கும் அட்டகாசமான படமாக தூள் கிளப்பிக்  கொண்டிருக்கிறது. லப்பர் பந்து படத்தின் கிரிக்கெட் எமோஷனையும், பைசன் படத்தின் குஸ்தி ஆக்ஷனையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்த ஒரு வெறித்தனமான அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது! படத்தின் மெயின் ஸ்டோரி: விஜயநகரம் தாண்டிய ஒரு மலைக்கிராமம். அங்கே 1800-க்கும் மேற்பட்ட மக்கள் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் வாழ்கிறார்கள். கண் முன்னாடி ரயில் போனாலும், அந்த ஊரில் நிற்காது. கிலோமீட்டர் கணக்கில் நடந்தே செல்லும் அவலம். இந்த ஊரில் பிறந்து, கூலி கொடுத்தால் யாருக்காகவும் மேட்ச் ஆடக்கூடிய ஒரு 'ஆட்டக்கூலி' தான் நம்ம பெத்தி (ராம் சரண்). ...
பரிமளா அண்ட் கோ _ விமர்சனம்

பரிமளா அண்ட் கோ _ விமர்சனம்

Reviews, Uncategorized
பரிமளா அண்ட் கோ _ விமர்சனம் ஃபேமிலி டிராமா எனப்படும் குடும்பப்  பாங்கான படங்களை உருவாக்குவதில் முத்திரை பதித்த இயக்குனர் பாண்டிராஜ் வழக்கமான பாசம், அழுகை சென்டிமென்ட் டிராக்குகளை எல்லாம் ஓரமாக ஒதுக்கிவிட்டு, இந்த முறை முழுக்க முழுக்க கலகலப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் ரூட்டில் புது வண்டியை ஓட்டியிருக்கிறார். கதை ஆரம்பத்தில் ஒரு ஜாலியான, கலகலப்பான குடும்பக் கதையாகத் தான் படம் தொடங்குகிறது. ஆனால், சட்டென்று கியரை மாற்றி, ஒரு கொலை வழக்காக மாறி மர்மத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்கிறது திரைக்கதை. அடுத்து என்ன நடக்கப் போகுது? என்ற ஆர்வத்தை க்ளைமாக்ஸ் வரை தக்க வைத்தது தான் இயக்குநரின் சாமர்த்தியம். அதோடு, இன்றைய தலைமுறைக்கு அவசியமான போதைக்கு எதிரான ஒரு வலுவான கருத்தையும் திரைக்கதையில் நேர்த்தியாகப் பிணைத்திருக்கிறார்கள். யார் யாருடைய ஆட்டம் எப்படி? ஜெயராம் - ஊர்வசி கெமிஸ்ட்ரி அபாரம். இவர்க...
சம்ஹாரம் _ விமர்சனம்

சம்ஹாரம் _ விமர்சனம்

Reviews
சம்ஹாரம்: விமர்சனம் ஒரே வீட்டுக்குள் அதுவும் ஒரே இரவில் நடப்பது போன்ற ஒரு கதையை சஸ்பென்ஸ் தெளிவாக கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு சம்ஹாரம் படத்தின் மூலம் அட்டகாசமான பதிலை தந்திருக்கிறார் இயக்குனர் ராம் பிரபா. அடுத்த நாள் காலை திருமணம்.ஆனால் மணப்பெண்ணுக்கு இந்தத் திருமணத்தில் கொஞ்சமும் விருப்பமில்லை. காரணம், அவளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை ஒரு குடிகாரன் மற்றும் ரவுடி. மேலும் அந்த மணப்பெண் தன் காதலனுடன் முதல் நாள் இரவே ஓடிப்போகத் திட்டம் போடுகிறாள். இதை மோப்பம் பிடிக்கும் அண்ணன், தங்கையை அறைக்குள் பூட்டி வைக்கிறான். ஆனால் அந்தப் பெண்ணோ அசராமல், நைஸாகத் தன் காதலனை அதே வீட்டுக்குள்ளேயே வரவழைத்து விடுகிறாள். இவர்கள் போதாதென்று, அந்த ரவுடி மாப்பிள்ளையும் நள்ளிரவில் அங்கே வந்து இறங்குகிறார். கூடவே இன்னும் சிலரும் வந்து சேர, அந்த வீடே ஒரு பரபரப்பான சூழலுக்கு மாறுகிறது. இங்குதான் ...

மும்மொழி நடிகை ஈடன் குரியகோஸ்!

News
தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடிக்கும் நடிகை ஈடன் குரியகோஸ்! மும்மொழி நடிகை ஈடன் குரியகோஸ்! சேர நாட்டுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு.கேரளாவில் இருந்து ஏராளமான கனவுக்கன்னிகள் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி இங்கே கோலோச்சி இருக்கிறார்கள். அந்தக் 'கேரள நாட்டிளம் பெண்கள்' வரிசை ,அந்தக்கால பத்மினி தொடங்கி இந்தக் கால லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரையிலான தொடர்ச்சி கொண்டது. இன்றைய காலத்திலும் கேரளாவிலிருந்து அறிமுகங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.அப்படி நடிக்க வரும் நடிகைகளில் ஒரு தனித்துவம் கொண்ட நடிகையாக ஈடன் குரிய கோஸ் உள்ளார். பணம்,புகழ் என்பவற்றை மட்டுமே குறியாகக் கொண்டு வெற்று ஆர்வத்தில் நடிக்க வராமல் தனக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு வந்துள்ளவர் இவர். இவர் ஊடக மேலாண்மையில் எம்.பி.ஏ படித்தவர்.இவருக்குத் தமிழ், மலையாளம் ,இந்தி ,ஆங்கில மொழிக...
ரசிகர்களுக்கு ஒரு புதுமையான சினிமா அனுபவத்தைத் தரும் ‘தி ஒன் : வித்தின் யூ’!

ரசிகர்களுக்கு ஒரு புதுமையான சினிமா அனுபவத்தைத் தரும் ‘தி ஒன் : வித்தின் யூ’!

News
ஹரிஷ்னி பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் “தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு! தமிழ் திரையுலகிற்கு விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த ஒரு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் வகையில், ஹரிஷ்னி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது புதிய திரைப்படமான “தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கோபால் பாலகிருஷ்ணன் மற்றும் சிவா ராமநாதன் தயாரிக்கும் இப்படம், மனித வாழ்க்கையின் பல்வேறு உணர்வுப்பூர்வமான தருணங்களை ஒருங்கிணைக்கும் சக்திவாய்ந்த படைப்பாக உருவாகியுள்ளது. ஆதிரன் ராக்கெப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள “தி ஒன் : வித்தின் யூ”, ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் வகையைச் சேர்ந்த திரைப்படமாகும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மனிதர்களின் வாழ்க்கை, விதி, சூழ்நிலை மற்றும் உயிர் பிழைப்பிற்கான போராட்டம் ...

தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட்

News
THE END OF OAK STREET தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட் ஒரு மர்மமான விண்வெளி சார்ந்த நிகழ்வின் விளைவாக, புறநகர்ப்பகுதியிலிருக்கும் ஓக் ஸ்ட்ரீட் பெயர்த்தெடுக்கப்பட்டு அதன் அக்கம் பக்கமுள்ள வீடுகள் முன்பின் தெரியாத ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், அடையாளம் தெரியாத சுற்றுச்சூழலில் வழி தேடி சுற்றும் ப்ளாட் குடும்பம், தாங்கள் ஒன்றாக இணைந்திருந்தால் தான் உயிர் பிழைக்க முடியுமென்பதை புரிந்து கொள்கிறது. ஆன் ஹாத்அவே மற்றும் ஈவன் மெக்க்ரெகர் ஆகியோர் நடிக்கும் தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட் திரைப்படத்தில் மெய்ஸி ஸ்டெல்லா மற்றும் க்றிஸ்டியன் கான்வெரி ஆகியோரும் நடித்துள்ளனர். டேவிட் ராபர்ட் மிட்ச்செல் எழுதி இயக்க, ஜே.ஜே.ஏப்ரம்ஸ், ஹானா மிங்கெல்லா, ஜான் கோஹென், டேவிட் ராபர்ட் மிட்ச்செல், மாட் ஜாக்சன் மற்றும் டாமி ஹார்ப்பர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்கள் க்றிஸ் பெண்டர...
CLOSE
CLOSE