Thursday, November 26

Blog

சைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் வெளியீடு!

News
சைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் வெளியீட்டின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் 'சைலண்ட் இன்ஃபுளூயன்சர்' இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் இளையராஜா, "தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" என்றார். எடிட்டர் ராம் கோபி, " வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜா மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தாலே அந்தப் பாடல் ஹிட். இதில் அவர் நடித்தும் இருக்கிறார். நிச்சயம் இந்தப் பாடல் ஹிட் தான்". பாடலாசிரியர் ஜெயந்தி, " இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் பிடித்த பின்பு தான் பாடல் இறுதியானது. அதேபோல, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்". கலை இயக்குநர் சம்பத் ...
வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!

வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!

News
மெகா ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்! இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது. கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது. பல ஆண்டுகளாக, மண் மணம் சா...
மிரட்டலாக தயாராகும் அமானுஷ்ய நாட்டார் மர்மகதை!

மிரட்டலாக தயாராகும் அமானுஷ்ய நாட்டார் மர்மகதை!

News
மிரட்டலாக தயாராகும் அமானுஷ்ய நாட்டார் மர்மகதை! . “GENTLEWOMAN” படத்தை தயாரித்த“கோமளா ஹரி பிக்சர்ஸ்” பட நிறுவனம் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் தனது நான்காவது படைப்பாக ஒரு கதையை பிரமாண்டமாக தயாரிக்கிறார். புரொடக்‌ஷன்-4 படமான இதற்கு இன்னும் பெயர் சூட்ட படவில்லை. சமூகத்தின் நீண்டகால கலாச்சாரம், பண்பாடு மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் மண்ணில் புதைந்த பழைய கலை வடிவங்களையும், பழமை கதையின் பதிவாக இருக்கும் விதமாக இப்பட கதை உருவாகி இருக்கிறது. 1980-களின் மத்தியில், தென் மாவட்டங்களில் ரத்தமும் சதையுமாய் அரங்கேறிய ‘அமானுஷ்யம்’ சார்ந்த உண்மைக் கதை என்பது, இப்படத்தை பிரமாண்ட கதையாக மாற்றியுள்ளது. மண் சார்ந்த படைப்பான “விழா” படத்தை இயக்கி, அனைவர் பாராட்டையும் பெற்ற பாரதி பாலகுமாரன் இப்படத்தை வடிவமைத்து இயக்குகிறார். இந்த கதையை எடுப்பதென்று முடிவு செய்த பின்பு, உண்மைக்கு நெருக்கமான பல வழிகளில் ஆ...
கதாநாயகனாகவும் வில்லனாகவும் கலக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்!

கதாநாயகனாகவும் வில்லனாகவும் கலக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்!

News
கதாநாயகனாகவும் வில்லனாகவும் கலக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்! தப்பாட்டம் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார், மேலும் இப்படத்திற்க்காக x தலம் உரிமையாளர் எலன் மஸ்க்கிடம் பாராட்டையும் பெற்றவர் ஆவார். இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வந்த களவாணி 2 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சசிக்குமார் நடிப்பில் வெளி வந்து பல வெற்றிகளை கொண்டாடிய“நந்தன்” திரைப்படத்திலும் சிறந்த கதாப்பாத்திரதில் தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பல திரைப்படங்களில் குனச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் மாறுப்பட்ட வேடங்களிலும் பட்டைய கிளப்பியுள்ளார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். தற்ப்போது இயக்குனர் சற்குணம் எழுதி இயக்கிய, புஷ்கர் மற்றும் காயத்ரி படைப்புத் தயாரிப்பாளர்களாகக் க...
விளையாட்டுத்துறையின் அவலங்களை சொல்லும் ‘அங்கீகாரம்’ திரைப்படம்!

விளையாட்டுத்துறையின் அவலங்களை சொல்லும் ‘அங்கீகாரம்’ திரைப்படம்!

News
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் ! ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ...
‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

News
'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதியான இன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில்... தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில்.. ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக பதிலளித்து ... இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார். இந்த பரபரப்பான அறிவிப்பை கடந...
சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’!

சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’!

News
நகைச்சுவை நிரம்பிய சர்வைவல் திரில்லர் ஆக உருவாகும் 'லவ் பைட், பெரும் வரவேற்பு பெரும் ப்ரோமோ' முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'லவ் பைட்' திரைப்படத்தை உருவாக்கவுள்ளது. சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், 'டாடா' புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, 'தாய் கிழவி' புகழ் முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏஜ...
ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி

ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி

News
உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்! பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது. புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற “உத்சவ் 2026” விழாவின் முக்கிய அம்சமாக, நடிகர் ரவி மோகன் அவர்களுக்கு பெருமைக்குரிய நான்காவது தேவி ரத்னா விருது வழங்கப்பட்டது. இதனுடன், பாடகி கெனீஷா வழங்கிய நேரடி இசை நிகழ்ச்சியும் விழாவை மேலும் சிறப்பித்தது. பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ பகவதி அம்மன் தேவஸ்தானம் நிறுவியுள்ள இந்தத் தேவி ரத்னா விருது, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும். இந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது முக்கிய பங்களிப்பு மற்று...
‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட முன் வெளியீட்டு விழா!

‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட முன் வெளியீட்டு விழா!

News
“சட்டென்று மாறுது வானிலை” திரைப்பட முன் வெளியீட்டு விழா! BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”. இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது. வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ள, பத்திரி...
“சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது !

“சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது !

News
அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டது ப்ரைம் வீடியோ ! தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்...
CLOSE
CLOSE