Thursday, November 26

Blog

பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !

பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !

News
ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா ! ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர். விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக ந...
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (SIFPA) இரண்டாவது கூட்டம்!

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (SIFPA) இரண்டாவது கூட்டம்!

Uncategorized
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (SIFPA) தனது இரண்டாவது கூட்டத்தை இன்று ஹைதராபாத்தில் நடத்தியது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பல்வேறு தயாரிப்பாளர் அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய திரைப்படத் துறையின் ஒட்டுமொத்த நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி தயாரிப்பாளர் அமைப்புகள் மற்றும் கில்டுகள் பங்கேற்றன. தயாரிப்பு செலவுகள், திரையரங்கு வெளியீட்டு அமைப்பு, OTT வெளியீட்டு காலவரையறைகள், தொழிலாளர் ஒத்துழைப்பு, திரைப்பட நிதி நிலைத்தன்மை மற்றும் தென்னிந்திய மொழித் திரைப்படத் துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய தொழில் சார்ந்த விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன. தென்னிந்திய திரைப்படத் துறையின் வெளிப்படைத்தன்மை, தொழில்துறை நிலைத்தன்மை மற்றும் கூட்டு ...
6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி -2” !

6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி -2” !

News
ஆதிராஜன் இயக்கத்தில் மாளவிகா மேனன்! தமிழில் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சிலந்தி. ஜி கம்பெனி (G COMPANY) சார்பில் சங்கர் பழனிச்சாமி தயாரிக்க எழுதி இயக்கியிருந்தார் ஆதிராஜன். அதே படநிறுவனமும் அதே இயக்குநரும் மீண்டும் கைக்கோர்க்கிறார்கள், சிலந்தி - பார்ட் 2 வுக்காக. இப்படம் தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் மற்றும் பெங்காலி என 6 மொழிகளில் பிரமாண்டமான பட்ஜெட்டில் மிரட்டலான த்ரில்லர் படமாக உருவாகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் சினிமா வில் கலக்கிவரும் மாளவிகா மேனன் மாறுபட்ட கேரக்டரில் நாயகியாக நடிக்கிறார். பல மொழிகளிலும் வலம் வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரபல தொழில் நுட்ப கலைஞர்களுடன் இதன் படப்பிடிப்பு கம்போடியா வியட்நாம் நாடுகளிலும் நடைபெற உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா, மற்றும் காந்...
ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ!

ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ!

News
"கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்! பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ,  லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவு...
விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’!

விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’!

News
சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் 'ரவுடி ஜனார்த்தனா' படத்தில் இருந்து வெளியாகியுள்ளது! ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா ரூரல் ஆக்‌ஷன் கதையாக உருவாகி வரும் 'ரவுடி ஜனார்த்தனா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மழையில் முழுவதுமாக நனைந்து கையில் துப்பாக்கி பிடித்தபடி தீவிரமான தோற்றத்துடன் இருக்க, அவர் நெஞ்சின் மீது கால் வைத்தபடி கீர்த்தி சுரேஷூம் உள்ளார். இந்த ஜோடிகளுக்கு இடையேயான காதல் மற்றும் படத்தின் ஆக்‌ஷனை இந்த போஸ்டர் பிரதிபலிக்க...
29 விமர்சனம்

29 விமர்சனம்

Reviews
29 விமர்சனம் 'மேயாத மான்', 'ஆடை' ஆகிய வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குனர் ரத்தினகுமார், மாறுபட்ட கோணத்தில் காதலை சொல்லி இருக்கும் படம் தான் 29. ஒரு மனிதனின் வாழ்வில் 29 வயது என்பது மிகவும் முக்கியமானது. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும், தான் யார் என்பதை நிரூபிக்கவும் இந்த வயதில் ஓர் உத்வேகம் ஏற்படும். இந்த விஷயத்தை கதைக்களமாக கொண்டு இயக்குனர் ரத்தினகுமார் வழங்கி இருக்கும் புதுமை படைப்பு 29. சேலத்தில் இருந்து சென்னை வந்து ஒரு மேன்ஷனில் தங்கி வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞன் சத்யாவின் வாழ்க்கையில் நுழைந்த விஜி என்ற இளம் பெண், அவனது வாழ்க்கையில் எந்த வகையான பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்துகிறாள்? அதன் விளைவுகள் என்னென்ன என்பதுதான் 29 திரைப்படத்தின் கதை. அனேகமாக எல்லா படங்களிலும்தான் காதல் வருகிறது. ஆனால் காதலை புதிய கோணத்தில் சொல்லும் படங்கள் மிகச் சில மட்டுமே. இந்த மிகச்சில...
‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !

‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !

News
சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது ! விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறத...
எம்.ஆர். பாரதி இயக்கும் ‘சைக்கிள் கேப்’!

எம்.ஆர். பாரதி இயக்கும் ‘சைக்கிள் கேப்’!

News
டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம் 'சைக்கிள் கேப்'! மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டில் வெளியான மியூசிக்கல் காதல் திரைப்படங்களான ’ஆஷிகி2’,’சயாரா’ வரை இந்தத் திரைப்படங்களின் பாடல்கள், உணர்வுகள் மற்றும் உறவுகள் என ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை இவை உருவாக்கியுள்ளன. இதே உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். ...
ஆகஸ்ட் மாதம் வெளியாகும் துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்”!

ஆகஸ்ட் மாதம் வெளியாகும் துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்”!

News
துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது ! துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது. தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath ) , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும...
கண்ணீரை வரவழைக்கும் உருக்கமான படம் ‘பெத்தி’!

கண்ணீரை வரவழைக்கும் உருக்கமான படம் ‘பெத்தி’!

News
“பெத்தி”  படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா! 70 களின் காலகட்டத்தை நிஜத்தில் கொண்டு வரும் 24 பிரம்மாண்ட செட்கள், கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி” குறித்து அவினாஷ்p கொல்லா பகிர்வு மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ்  கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் ...
CLOSE
CLOSE