Thursday, November 26

Blog

பிரபு தேவா வடிவேலு இணைந்து நடிக்கும் “பேங் பேங்” படப்பிடிப்பு நிறைவு!

பிரபு தேவா வடிவேலு இணைந்து நடிக்கும் “பேங் பேங்” படப்பிடிப்பு நிறைவு!

Uncategorized
KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது !! KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகி வரும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலும் , வடிவேலுவின் தனித்துவமான நகைச்சுவையும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவுள்ளது. மலேசியாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்ப...

கருப்பு _ விமர்சனம்

Reviews
கருப்பு _ விமர்சனம் நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் அநீதிகளை அச்சமின்ற தோலுரித்துக் காட்டும் அட்டகாசமான படம் கருப்பு. ஆதிக்கம் மிக்க மனித சக்திகளால் நடைபெறும் அக்கிரமங்களை தட்டிக்கேட்க, எளியோர்களின் சாமியான கருப்பு மனித உருவில் வந்து நின்றால் எப்படி இருக்கும் என்கிற ஃபேண்டஸி + அதிரடி மசாலாதான் கருப்பு! கேரளாவிலிருந்து சென்னைக்குத் தன் மகள் பினுவின் அறுவை சிகிச்சைக்காக, வருகிறார் தந்தை இந்திரன்ஸ். ஆனால், சென்னை நகரம் அவர்களுக்குப் புதியது என்பதால் வழி தெரியாமல் தவித்து, துரதிர்ஷ்டவசமாக சில சமூக விரோதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள். மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த நகைகள் அனைத்தையும்  திருடர்கள் பறித்துச் செல்ல, செய்வதறியாது திகைக்கும் அந்தத் தந்தை, நியாயம் கேட்டு காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைகிறார். அங்குதான் கதையின் முக்கியத் திருப்பம் ஏற்படுகிறது. அநீதிக்குத் ...
‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு!

‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு!

News
''கங்கணம்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு! கல்யாணி இ என்டர்பிரைஸ் சார்பில் கல்யாணி கே மற்றும் சிரஞ்சன் கே.ஜி. தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்கணம்’. அ.இசையரசன் இதன் கதை எழுதி இயக்கியுள்ளார். தேசிய நாடகப்ப பயற்சிப்பள்ளி மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் பயிற்சி பெற்ற இவர், ‘என் கண்ணே’ என்கிற குறும்படத்தை இயக்கி ஐந்து விருதுகளையும் பெற்றவர். இப்படத்தில் கதாநாயகனாக கூத்துப்பட்டறை சௌந்தர் நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி சந்திரசேகர், பிராணா ஆகியோர் நடிக்கின்றனர்.. முக்கிய வேடத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். பான் இந்தியா நடிகர் சம்பத்ராம் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் தவிர விஜய் டிவி ராமர், சேதுபதி, ஜெயச்சந்திரன், கயல் மணி, KM..பாரி வள்ளல், ராட்சசன் யாசர், அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ் மற்றும் சிரஞ்சன் கே.ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ...
இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !

News
இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி ! எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியாகியுள்ளது. பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவி...
ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் – கமல்ஹாசன் அறிக்கை!

ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் – கமல்ஹாசன் அறிக்கை!

News
ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் - கமல்ஹாசன் அறிக்கை! கமல்ஹாசன் அறிக்கையின் சாராம்சம்: என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே, மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் விதங்களும் மாறக்கூடும். இந்தச் சுமை தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், வினியோகஸ்தர்கள், பைனான்சியர்...
ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘கொலை சேவல்!

ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘கொலை சேவல்!

News
மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் — ZEE5-ல் ‘கொலை சேவல்’ இந்தியா, 15 மே 2026: ZEE5 தமிழ் ZEE5, பரபரப்பூட்டும் கிராமப்புற திரில்லர் திரைப்படமான கொலை சேவல் தற்போது தங்களது தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருவதாக அறிவித்துள்ளது. சஸ்பென்ஸ், உணர்ச்சிகள் மற்றும் தீவிரமான கிராமத்து நாடக அம்சங்களை இணைக்கும் இப்படம், பேராசை, துரோகம் மற்றும் மனித உறவுகளின் இருண்ட பக்கங்களை ஒரு நாட்டுப்புற பின்னணியில் ஆழமாக ஆராயும் வலுவான கதையை கொண்டுள்ளது. தனித்துவமான தலைப்பும், இயல்பான கதை சொல்லும் முறையும் கொண்ட கொலை சேவல், அதன் யதார்த்தமான அணுகுமுறை மற்றும் சூழல்மிக்க காட்சிப்படுத்தலால் ஏற்கனவே பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக புதைந்திருந்த ரகசியங்கள் மெல்ல வெளிப்படுகின்ற ஒரு பதற்றமான விசாரணையை மையமாகக் கொண்ட இப்படம், இறுதி வரை பார்வையாளர்களை ஈர்க்கும்...
இசைப்பயணத்தில் 51-ம் ஆண்டில் நுழைந்த ‘இசைஞானி’ இளையராஜா!

இசைப்பயணத்தில் 51-ம் ஆண்டில் நுழைந்த ‘இசைஞானி’ இளையராஜா!

News
இசைப்பயணத்தில் 51-ம் ஆண்டில் நுழைந்த 'இசைஞானி' இளையராஜா! பாடல் பதிவுக்கான பரபரப்போடு பத்திரிகையாளர்களைச் சந்தித்து உற்சாகம்!! 'இசைஞானி' இளையராஜா 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து, 50 ஆண்டுகளை நிறைவு செய்து 14.5.2026 இன்று 51-வது ஆண்டில் நுழைகிறார். அதையடுத்து அவருக்கு திரையுலகினரிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இளையராஜா, ''ஆண்டுகள்தான் கடந்துபோகிறதே தவிர நான் முதல் படத்திற்காக எப்படி ஈடுபாட்டுடன் பணியாற்றினேனோ அதேபோல்தான் இப்போதும் பணிபுரிகிறேன். இப்போதுகூட (உடனிருந்த இயக்குநர் பால்கியை சுட்டிக்காட்டி) இவர் இயக்கும் படத்தின் பாடல் பதிவுக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்'' என்றார் உற்சாகமாய். பத்திரிகையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, தான் இசையமைத்த மு...
சுயாதீன திரைப்படங்களை (Indie Films) அறிமுகப்படுத்தும் புதிய YouTube சேனல்!

சுயாதீன திரைப்படங்களை (Indie Films) அறிமுகப்படுத்தும் புதிய YouTube சேனல்!

News
Friday premiere ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மறைக்கப்பட்ட ரத்தினங்களையும் (Hidden Gems), சுயாதீன திரைப்படங்களையும் (Indie Films) அறிமுகப்படுத்தும் புதிய YouTube சேனல்! சென்னை, 14 மே 2026: இரண்டு முறை தேசிய விருது பெற்ற எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான G. தனஞ்ஜெயன் தலைமையிலான Creative Entertainers and Distributors நிறுவனம், FRIDAY PREMIERE என்ற புதிய YouTube சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக தரமான தமிழ் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடும் தனித்துவமான தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேனலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு புதிய திரைப்படம் இலவசமாக வெளியிடப்படும். திரையரங்குகளில் போதிய வரவேற்பைப் பெறாமல் தவறவிட்ட சிறந்த படைப்புகள், சுயாதீன திரைப்படங்கள், கல்ட் கிளாசிக் படங்கள் மற்றும் நினைவில் நிற்கும் கதைகள் ஆகியவற்றி...
மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

News
திரையரங்குகளில் குடும்பங்கள் பார்த்து ரசிக்க இருக்கும் மீரா கதிரவனின் 'ஹபீபி' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது! நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் 'ஹபீபி'. மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து 'யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டிய...
சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல்!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல்!

News
சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல் 'வேலும் மயிலும்'! சிவகார்த்திகேயன் இந்தப் பாடல் எழுதியிருக்க, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியிருக்கிறார். புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான 'தாய் கிழவி' திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, 'வேலும் மயிலும்' வெளிய...
CLOSE
CLOSE