Thursday, November 26

Blog

ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை ‘வாரண்ட்’!

ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை ‘வாரண்ட்’!

News
முதன்மை கதாபாத்திரத்தில் விலங்கு, மாமன் பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராக அறிமுகம்! இந்தியா, XX மே 2026: தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் பிரசாந்த் பாண்டியராஜ் மேற்கொண்டுள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள...
ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாகும் ‘சிஸ்டம்’ திரைப்படம்!

ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாகும் ‘சிஸ்டம்’ திரைப்படம்!

News
ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது! அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ...
‘எக்ஸாம்’ இணைய தொடரை பாராட்டிய திரை நட்சத்திரங்கள்!

‘எக்ஸாம்’ இணைய தொடரை பாராட்டிய திரை நட்சத்திரங்கள்!

News
நானி, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், சுனைனா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்” சீரிஸை பாராட்டி குழுவிற்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளனர் ! மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ரைம் வீடியோவின் எக்ஸாம் சீரிஸ், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பல முன்னணி பிரபலங்கள் இந்த தமிழ் சஸ்பென்ஸ் டிராமாவைப் பற்றி தங்களது உற்சாகத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நானி இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளம் குறித்து பாராட்டி, இதன் பின்னணி குழுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் பெற்ற S. J. சூர்யா, முழு குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, இந்த சீரிஸ் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்...
‘சேயோன்’ திரைப்படத்தில் இணைந்த பாக்யஸ்ரீ போர்ஸ்!

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைந்த பாக்யஸ்ரீ போர்ஸ்!

News
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்  'சேயோன்' திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன. ஒரு சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ ஒரு பிரம்மாண்டமான கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாகவும், 2026 ஆம் ஆண்டின் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் அமைகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ரசிகர்கள் பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், இந்த அறிவிப்பைப் பகிர்வதற்கு இதுவே மிகச் சிறந்த தருணமாக அமைவதுடன், மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த ஒரு அற்புதமான ஆண...
தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்!

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்!

News
ஆர்.பி.சௌத்ரி ஐயா அவர்களை இழந்தோரை தேற்றுவதற்கு முன் நாம் நம்மை தேற்றிக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளது. தன்னிலை மாறாமல் மற்றவர் மனதையும் புண்படுத்தாமல் அவர் ஓசையில்லாமல் சாதனைகளை படைத்தவர். புது புது கதைகள், புது புது தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள் என அப்போதைய சினிமாவிற்கு புது இரத்தம் பாய்ச்சியவர். தெளிவும் திட்டமிடுதலும் செயல்படுத்ததிலும் ஒரு நேர்த்தி கண்டவர். "வீண்- விரயம்" என்கின்ற வார்த்தைகளை தன் அகராதியிலிருந்து அகற்றியவர். அவர் கறையின்றி நிறைவாக வாழ்ந்தார், குறையொன்றும் சொல்வார் இல்லை. இயற்கை அவரை திடக்காத்திரமாய் வைத்திருக்க, எதிர்பாரா விபத்து ஒன்றில் மரணித்தது கொடுமையிலும் கொடுமை. அவரை இழந்து வாடும் உற்றார் உறவினர், அறிமுகப்படுத்தப்பட்டோர், வணிகம் செய்தோர், பழகியோர், பயணித்தோர் அனைவரின் சோக வெள்ளத்த...
சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் ’காவிய காதல்’!

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் ’காவிய காதல்’!

News
சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு! உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ’மாவீரன்’ மற்றும் ’3BHK’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இப்போது அந்த படத்திற்கு ’காவிய காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. நகைச்சுவையோடும் கலர்ஃபுல்லாகவும் உருவாகியுள்ள இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாரத் மற்றும் சான்வே மேக்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங...
குறும்பட பூஜை …

குறும்பட பூஜை …

News
குறும்பட பூஜை … ஓகே டேக் டிஜிட்டல் மீடியா மற்றும், திவ்யா புரொடக்ஷன். இணைந்து குறும்படங்கள் தயாரிக்க உள்ளது. இந்த குறும்படத்தின் பூஜை சென்னை அலுவலகத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்தவிழாவில் பல முன்னணி இயக்குனர்களும் புதுமுகம் நடிகர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். ஓகே டேக் ராஜேஷ் கூறுகையில் :- இவர் தமிழ்,ஹிந்தி, மராட்டி,கன்னடா, கொங்குனி, மலையாளம், பஞ்சாபி, பெங்காளி, முதலிய‌ பட மொழிகளில் உதவி இயக்குனர்களாலும் ஆல்பம் இசைகளும் தயாரிப்பு மற்றும் இயக்குனர் ஆகவும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார். மேலும் ஓகே டேக் டிஜிட்டல் மீடியாவில் பல முன்னணி நிறுவனங்கவுடன் இணைந்து நூறு குறும்படங்களை தயாரிக்க திட்டம் உள்ளதாகவும் மேலும் வெப் சீரியல் திரைபடங்கள் ஆகியவற்றை தயாரிக்கவும் உள்ளதாகவும் கூறினார் இந்நிறுவனத்தின் புதுமுகம் நடிகர்கள்‌ மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களும...
கேன்ஸ் விழாவில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படைப்பு!

கேன்ஸ் விழாவில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படைப்பு!

News
கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் திரையிடப்படும் KVN புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் ஃபிலிம்ஸின் ‘பாலன் த பாய்’ இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ் புகழ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம் புகழ்) கூட்டணியில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'பாலன் த பாய்'. இந்தப் படம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நகர்கிறது. புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் 'மார்ச் டு ஃபிலிம்'-இல் (Marché du Film) வருகிற மே 14-ஆம் தேதி இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நடைபெறவுள்ளது. 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிதம்பரம் இயக்கும் படம் இது. KVN புரொடக்ஷன்ஸ் (வெங்கட் கே. நாராயணா) மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் (சைலஜா தேசாய் ஃபென்) இணைந்து இப்படத்தை வழங்குகின்றன. அடையாளம், உயிர்வாழ்வதற்கான போராட்டம் மற்றும் தாய்-சேய் இடையிலான பிண...
‘தமிழ் கிறுக்கன்’ முதல் ஆல்பம் – லோகோ & தலைப்பு வெளியீடு!

‘தமிழ் கிறுக்கன்’ முதல் ஆல்பம் – லோகோ & தலைப்பு வெளியீடு!

News
பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் வழங்கும் வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ முதல் ஆல்பம் – லோகோ & தலைப்பு வெளியீடு! எழுத்தாளர் மற்றும் பாடகர் வாகீசன் ராசையாவுடன் இணைந்து, பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் அவரது முதல் ஆல்பமான ‘தமிழ் கிறுக்கன்’ லோகோ மற்றும் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இது அவரது கலைப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும். இந்த ஆல்பத்தின் லோகோ மற்றும் தலைப்பு, இன்று யூடியூப் தளத்தில் பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சிகளுடன், டிரெய்லர் வடிவில் இந்த வெளியீடு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு கதையைப் பேசும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த டிரெய்லர், ‘தமிழ் கிறுக்கன்’ ஆல்பத்திற்கான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்துகி...
வெளியீட்டிற்கு முன்பே சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்ற திரைப்படம்!

வெளியீட்டிற்கு முன்பே சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்ற திரைப்படம்!

News
  நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது! விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது படத்தின் சிறந்த திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும். கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும், சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ’என்ன விலை’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இப்படம் தற்போது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்று, அதன் கதை சொல்லலுக்கும் திரைக்கதைக்கும் வலு சேர்த்துள்ளது. சஜீவ் பழூர் இயக்கியுள்ள ’என்ன வ...
CLOSE
CLOSE