Thursday, November 26

Blog

‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!

‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!

News
ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!! ருத்ரம் சினிமாஸ் மற்றும் SR பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படமான சிங்கா படத்தின் டீசர், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், அனைத்து வயதினரையும் கவரக்கூடிய உணர்ச்சி மிகுந்த கதையாக உருவாகியுள்ளது. ராஜ துரை சிங்கம் இயக்கியுள்ள இந்தப் படம், வசந்த் மற்றும் சற்குணம் போன்ற முன்னணி இயக்குநர்களிடம் பயிற்சி பெற்ற அனுபவத்தை பிரதிபலிக்கிறது. “பர்பெக்ட்” குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தின் டீசர், காதல், நட்பு மற்றும் உணர்ச்சி நிரம்பிய தருணங்களை அழகாக வெளிப்படுத்துகிறது. வேலாயுதம் ராஜேந்திரன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில், கயல் ...
மிஸ்டர் எக்ஸ்_ விமர்சனம்

மிஸ்டர் எக்ஸ்_ விமர்சனம்

Reviews
மிஸ்டர் எக்ஸ்_ விமர்சனம் இந்தியாவின் ரா உளவுப் பிரிவில் பணியாற்றும் அதிகாரியான சரத்குமார் நியூக்ளியர் அணு ஆயுதம் தயாரிக்க தேவையான மூலப்பொருள் அடங்கிய பெட்டியை எதிரிகள் கைக்கு கிடைக்க விடாமல் பாதுகாக்கிறார். ரஷ்ய ராணுவ அதிகாரிகள் திடீரென நுழைந்து அந்தப் பெட்டியை கைப்பற்றுவதுடன், சரத்குமாரையும் கைது செய்கின்றனர். சரத்குமாரை பிணைக் கைதியாக வைத்துக்கொண்டு, இந்த பெட்டியை பாகிஸ்தானுக்கு அனுப்பவும் திட்டம் தீட்டுகின்றனர். சரத்குமார் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டால் நமது ராணுவ ரகசியங்கள் அவர்களுக்கு தெரிந்து விடும் பேராபத்து இருக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காக ரா பிரிவின் உயர் அதிகாரியான மஞ்சு வாரியர் தலைமையில் ஒரு குழு களமிறங்குகிறது. இதற்காக மஞ்சு வாரியர் தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஆர்யாவின் உதவியை நாடுகிறார். அணு ஆயுதம் தயாரிக்கும் இந்த மூலக்கூறு அடங்கிய பெட்டி எதிரி...
விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு!

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு!

News
விஜய் தேவரகொண்டா - இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு* 'இந்தக் கோபம் எல்லாம் ஒரு காலத்தில் அன்பாக இருந்தது' என்று தொடங்கிய ஒன்று... இப்போது உங்களை சொல்ல வைக்கிறது - அதுதான் கர்ஜனை. நடிகர் விஜய் தேவரகொண்டா , இயக்குநர் சௌர்யுவ் இயக்கும் #VDxSHOURYUV படத்தில் நடிக்கிறார். அது பிரம்மாண்டத்தையும், இலட்சியத்தையும் உலகளாவிய சினிமாவை நோக்கிய ஒரு துணிச்சலான வீறு நடையையும் குறிக்கிறது. நீங்கள் அவரை அறிந்த விதத்தில் அல்ல... மாறாக நீங்கள் கற்பனை செய்திராத விதத்தில்... அந்த அறிவிப்பு போஸ்டரில் ...விஜய் தேவரகொண்டா உலோக பட்டைகளால் நான்கு நாய்களை பிடித்தபடி முன்னோக்கி நடந்து செல்வது காட்சிப்பபடுத்தப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் ஆறு அல்லது ஏழு பேர் அவருடன் நடந்து செல்கின்றனர். இதுதான் ட்ரீம் கலெக்டிவ். உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களின் ...

தலைமுறைகளை கடந்து சாதனை படைக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்!

News
  எம்ஜிஆர் முதல் சியான் விக்ரம் வரை… சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த அப்டேட்! தமிழ் திரைப்பட உலகில் பல தலைமுறைகளை கடந்து வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த அதிரடியாக, விக்ரம் நடிக்கும் “சியான் 63” படத்தை அறிவித்துள்ளது. வீனஸ் பிக்சர்ஸ் திரு. டி. கோவிந்தராஜன், திரைக்கதைச் சித்தர் அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் சத்யா மூவிஸ் மரபையும், கலைவாணர் திரு. என். எஸ். கிருஷ்ணன், திரு. டி. ஜி. தியாகராஜன் போன்ற திரையுலக முன்னோடிகளின் 70 ஆண்டுகால திரையுலக பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் சத்யஜோதி பிலிம்ஸ், எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த், அஜித் குமார், கார்த்திக், முரளி, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல தலைமுறை முன்னணி நட்சத்திரங்களுடன் வெற்றிப்படங்களை வழங்கி, தமிழ் திரையுலகில் நீண்...

‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

News
’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா! ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது, "படத்தின் தலைப்பு 'பிரேக்ஃபாஸ்ட்' என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது" என தெரிவித்தார். நடிகை அமிதா, "காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை ...
இந்தியாவின் மாபெறும் காதல் காவியமாக உருவாகியிருக்கும் “லவ் & வார்”!

இந்தியாவின் மாபெறும் காதல் காவியமாக உருவாகியிருக்கும் “லவ் & வார்”!

News
ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது ! இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 குடியரசு தின வார இறுதியை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும் 2027 ஜனவரி 21 வியாழக்கிழமை, அன்று வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த காதல் திரைப்படத்தில், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் இணைந்து நடிக்கின்றனர். வலுவான உணர்ச்சிகள் நிரம்பிய ஒரு தீவிரமான காதல் காவியமாக இப்படம் உருவாகியுள்ளது. பன்சாலியின் தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் ஆழமான கதை சொல்லும் முறைப்படி, இந்த படம் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய காட்சி அனுபவத்தையும், ஆழமான உணர்ச்சியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்டமான அளவில் உருவாகும் “லவ் & வ...
சீயான் 63 ஸ்டைலீஷ் புரோமோ வீடியோவுடன் அறிவிப்பு!

சீயான் 63 ஸ்டைலீஷ் புரோமோ வீடியோவுடன் அறிவிப்பு!

News
சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் ! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிககரான சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு, சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு ஸ்டைலிஷ் புரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இப்போதே ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெருமளவில் உயர்த்தியுள்ளது. தனித்துவமான கதைக்களம் மற்றும் ஸ்டைலிஷ் திரைக்காட்சிகளின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். 2016 ல் சீயான் விக்ரம் கூட்டணியில் இவர் இயக்க...
கவனம் கவரும் திகில் முயற்சியாக மலரும் ‘சூனியம்’!

கவனம் கவரும் திகில் முயற்சியாக மலரும் ‘சூனியம்’!

News
இரட்டை முகத்தில் மர்ம மிரட்டல்! ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’ கவனம் கவரும் திகில் முயற்சி! சூனியம், கருமம், மர்ம நம்பிக்கைகள் போன்ற அடிப்படையில் உருவாகும் திகில்–மர்ம திரைப்படமாக ‘சூனியம்’ உருவாகி வருகிறது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாகும் இந்த படம், ஆரம்ப கட்டத்திலேயே ரசிகர்களின் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. பல பரிமாணங்களில் தன்னை நிரூபித்துள்ள நடிகர் ஜே.டி. சக்கரவர்த்தி, இந்த படத்தில் இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் தோன்றுகிறார். ஹீரோவும் வில்லனுமாக இரட்டை கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது இந்த படத்தின் முக்கிய பலமாகும். இந்த ‘டுவல் ரோல்’ அணுகுமுறை, கதைக்கு கூடுதல் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. M3 மீடியா மற்றும் மஹா மூவீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை சூர்யாஸ் இயக்குகிறார். மகர்ஷி கொண்ட்லா வழங்கும் இப்படத்திற்கு மகேந்திர நாத் கொண்ட்லா தயாரிப்பாளராக உள்ள...
ரசிகர்களை ஆட வைக்கும் “கான் சிட்டி” குத்துப்பாடல்!

ரசிகர்களை ஆட வைக்கும் “கான் சிட்டி” குத்துப்பாடல்!

News
“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும்  கொரியன் ஃபேமிலி சாங்  “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்! பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாக பாடியுள்ளனர். “கொரியன் ஃபேமிலி சாங்” என சுவாரஸ்யமான தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த பாடல், “ரா ரா ரங்கையா” என்ற வரியுடன் துவங்கி, நம்மூர் தரைலோக்கல் குத்துப்பாணியில் முழுக்க முழுக்க உற்சாகத்தைக் கொட்டுகிறது. பாடலின் இசை மட்டுமல்லாமல், காட்சியமைப்பு...
ஆரி அர்ஜுனன் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பகவான் !

ஆரி அர்ஜுனன் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பகவான் !

News
“பகவான்” – வித்தியாசமான கதைக்களத்துடன் புராண கால வரலாற்று பின்னணியில் உருவாகும் பிரம்மாண்ட படம்!! ஆரி அர்ஜுனன் நடிப்பில் மிரட்டலான ஆக்சன் திரில்லர் திரைப்படம் பகவான் !! சு. காளிங்கன் இயக்கத்தில் மித்தாலஜிகல் திரில்லராக உருவாகி இருக்கும் " பகவான் " அம்மன்யா மூவிஸ் பட நிறுவனத்தின் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரிப்பில், சு.காளிங்கன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பகவான்”. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தில், பிரபல நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், யோக் ஜேபி, பிர்லா போஸ், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர் பாண்டி, அஜெய் தாத்தா, ஜெகதீஷ், ஜி.வி. கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கத...
CLOSE
CLOSE