Sunday, November 15

Uncategorized

வெளியீட்டுக்கு முன்பே சாதன செய்த “கான் சிட்டி” திரைப்படம்!

வெளியீட்டுக்கு முன்பே சாதன செய்த “கான் சிட்டி” திரைப்படம்!

Uncategorized
எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் ! அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே கிடைத்துள்ள இந்த மாபெரும் ஒப்பந்தம், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் “கான் சிட்டி”, ஏற்கனவே அதன் டைட்டில் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடக்கும் கதை, அவர்களுக்...
நகைச்சுவையைத் தாண்டி புதிய பாதையில் வெற்றி நடை போடும் யோகி பாபு!

நகைச்சுவையைத் தாண்டி புதிய பாதையில் வெற்றி நடை போடும் யோகி பாபு!

Uncategorized
“கெணத்த காணோம்” உணர்ச்சிப்பூர்வமான வெற்றி:யோகி பாபுவின் மனமார்ந்த நன்றி! பல ஆண்டுகளாக, நகைச்சுவை நடிகர்களில் வெகு சிலரே தங்களின் comfort zone ஐ விட்டு வெளியே வந்து, உள்ளடக்கத்தை(Content) மையமாகக் கொண்ட முக்கிய நடிகர்களாக தங்களை நிரூபித்துள்ளனர். தமிழ்சினிமாவின் தற்போதைய காலகட்டத்தில் அத்தகைய மாற்றத்தை உருவாக்கியவராக யோகி பாபு இருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும், வலுவான கதாநாயகன் கதாபாத்திரங்களிலும் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். அவரது சமீபத்திய படம் “கெணத்த காணோம்” விமர்சகர்கள் ரசிகர்களின் பாராட்டில், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம், தொடர்ந்து பல படங்களில் பிஸியாக இருந்தபோதிலும், இப்படத்திற்காக யோகி பாபு மேற்கொண்ட முழுமையான (360°) ப்ரோமோஷன் ஈடுபாடே ஆகும். யோகி பாபு கூறுகையில்: “இந்தத் தர...
முனீஸ்காந்த் பிரதான வேடத்தில் நடிக்கும் ‘தி டார்ம் ‘

முனீஸ்காந்த் பிரதான வேடத்தில் நடிக்கும் ‘தி டார்ம் ‘

Uncategorized
குட் ஸ்டஃப்( Good Stuff) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் B.DILLI -( பி. டில்லி) வழங்கும் ' தி டார்ம் ' படத்தின் தொடக்க விழா! தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நட்சத்திர நடிகரான முனீஸ்காந்த் கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'தி டார்ம் ' திரைப்படத்தின் தொடக்க விழா பாரம்பரிய முறையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முனீஸ்காந்த் ,ஷாலினி, காசி தங்கம், சபரீஷ் ,சாம் ஜான், அருண் கார்த்திக் ,நிகில் நாயர் ,வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து ,பெரோஜ் மற்றும் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் விஷால் இசையமைக்கிறார். அனில் கிருஷ்ணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள விமல் ராஜ் கலை இயக்கத்தை கவனிக்கிறார். ரசிகர்களுக்கு திரையரங்குகளில் மறக்க இயலாத அனுபவமாக வழங்கவுள்ள இந்த ...
உலகளவில் சாதனை படைத்த ‘துரந்தர்’ திரைப்படம்!

உலகளவில் சாதனை படைத்த ‘துரந்தர்’ திரைப்படம்!

Uncategorized
உலகம் முழுவதும் ரூபாய் 761 கோடியை தாண்டிய துரந்தர் பழிவாங்கல், இந்தியாவில் அனைத்து காலத்திற்குமான மிக பெரிய பிளாக்பஸ்டர் ஆக மாறி உள்ளது. மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புதிய மைல்கல்லை படைத்துள்ளது! ஜியோ ஸ்டுடியோஸ் & B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. உலகளாவிய அளவில் இதுவரை காணாத பிரம்மாண்டமான ஓப்பனிங் வீக்கெண்டை வசூலித்து, அனைத்து காலத்திற்குமான மிகப்பெரிய உலகளாவிய பிளாக்பஸ்டராக உருவெடுத்துள்ளதுடன், உலகெங்கிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளது. அசாதாரணமான முன்பதிவுகள், அனைத்து திரையரங்குகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகள் மற்றும் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கான இணையற்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றின் காரணமாக, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நாளுக்கு நாள் மிக அதிக வசூலை அள்ளி குவித்துள்ளது. இதன் ம...
Yamaha Music India announced the appointment of A.R. Rahman as Brand Ambassador!

Yamaha Music India announced the appointment of A.R. Rahman as Brand Ambassador!

Uncategorized
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பிராண்ட் தூதராக அறிவித்த யமஹா மியூசிக் இந்தியா நிறுவனம் யமஹாவின் முயற்சி மேட் இன் இந்தியாவிற்கு பங்களிப்பதாக ரஹ்மான் கருத்து சென்னை, இந்தியா | 22 மார்ச் 2026: அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளரும், உலகளவில் மதிப்புமிக்க இசை மேதையுமான ஏ.ஆர். ரஹ்மான், இந்திய இசையை சர்வதேச அரங்கில் உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்திய திறமையின் உலகளாவிய திறனை பிரதிபலிக்கும் அவரது பயணம், இந்தியாவில் இசை பண்பாட்டை வளர்க்கும் யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் நோக்கத்துடன் இணங்கி செல்வதாக இந்நிறுவனம் கருதுகிறது. இந்த கூட்டாண்மை, இந்தியாவின் இசை சூழலை வலுப்படுத்துவதற்கான யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது குறித்து, யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. யமமோட்டோ டகெதோஷி கூறுகையில், “இசை என்பது ...
‘அன்பே டயானா’ முதல் பாடல் ‘பெரம்பூர் கானா’ வெளியானது!

‘அன்பே டயானா’ முதல் பாடல் ‘பெரம்பூர் கானா’ வெளியானது!

Uncategorized
வடசென்னையின் துள்ளலான முகத்தை இசையில் கொண்டுவந்த ‘பெரம்பூர் கானா’ – வைரலாகும் ‘அன்பே டயானா’ முதல் பாடல்! பெரம்பூரின் மனிதர்கள், மகிழ்ச்சி, மாஸ் லோக்கல் உணர்வுகளை கொண்டாடும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வெளியீடு! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சத்யா கரிகாலன்,  யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில்,ஞ ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர...
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Uncategorized
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு! தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' திரைப்படத்தில் ஜீவா, இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஹாசினி பவித்ரா மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை ஆஷிஷ் ஜோசப் கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மலேசியா புகழ் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறு...
சந்தீப் கிஷன் நடிக்கும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்!

சந்தீப் கிஷன் நடிக்கும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்!

Uncategorized
‘சம்பாலா’ தயாரிப்பாளர், இயக்குநர் கூட்டணியில், சந்தீப் கிஷன் நடிப்பில், உருவாகும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்! தெலுங்கு மொழியில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற ‘சம்பாலா’ படத்தினைத் தொடர்ந்து, அந்தப் படத்தை தயாரித்த Shining Pictures நிறுவனம் மீண்டும் இயக்குநர் உகந்தர் முனியுடன் கைகோர்த்து, மற்றுமொரு பிரம்மாண்டமான புதிய திரைப்படத்தைத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு ஆகியோர் முன்னதாக ஆதி சாய்குமார் நடித்த “சம்பாலா”படத்தின் மூலம் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தனர். இந்த புதிய பட அறிவிப்பை முன்னிட்டு, படக்குழு ஒரு கண்கவர் கான்செப்ட் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், சிங்கம் மற்றும் ஓநாய் நேருக்கு நேர் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது அதிகாரம், விதி, மற்றும் உள்ளார்ந்த வலிமையின் மாபெரும் மோதலை சுட்...
இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் ‘லவ் 3.0’

இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் ‘லவ் 3.0’

Uncategorized
இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் 'லவ் 3.0' ஜி.வி. பிரகாஷின் கதாநாயகி உள்ளிட்ட இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் 'லவ் 3.0' சினிமா மீதுள்ள ஆர்வத்தால் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் சிவக்குமார், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தவர், இன்ஸ்டாகிராம் மூலம் மக்களிடம் பிரபலமாக இருக்கும் பிரபலங்களைக் கொண்டு படம் தயாரிக்க முடிவு செய்தார் .அந்த வகையில் தனது மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம்தான் 'லவ் 3.0' . இப்டத்தை எழுதி இயக்கியுள்ளார் ராஜேஷ் விகே. வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வைகுந்த் சீனிவாசன் இசையமைத்துள்ளார்.அரவிந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் ஜேபி. இந்தப் படத்தில் சக்தி மிக்க சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் உலகில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலங்களாக இருப்பவர்கள் பிரதான பாத்திரங்களை ஏற்ற...