Wednesday, November 18

Uncategorized

சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’!

சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’!

Uncategorized
சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்' கார் மேனி செல்வம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமை...
மார்ச் 27ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ‘முத்து என்கிற காட்டான்’!

மார்ச் 27ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ‘முத்து என்கிற காட்டான்’!

Uncategorized
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு! 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் - பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் 'முத்து என்கிற காட்டான்' பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள...
அதிரடி அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’!

அதிரடி அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’!

Uncategorized
‘ப்ளடி பாலிடிக்ஸ்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் – தனது உதவி இயக்குநர் தினா ராகவனின் படப்பிடிப்பு தளத்துக்கு விஜயம் செய்த ராஜு முருகன்! கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் அதிரடி அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் Bloody Politics திரைப்படம் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு அதிகாரப்பூர்வமாக நகர்ந்து, சீராக முன்னேறி வருகிறது. இந்தப் படம், ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படக்குழுவிற்கு உற்சாகம் அளிக்கும் ஒரு சிறப்பு தருணமாக, சமூக திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் விஜயம் செய்தார். தனது உதவி இயக்குநராக இருந்த தீனா ராகவன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், அவருக்கு தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் ராஜு முருகன் தெரிவித்தார். இவர்களுக்கிடையேயான நீண்டகால படைப்பாற்றல் உறவையும், பரஸ்பர நம்பிக்...
அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பு!

அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பு!

Uncategorized
சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் 'புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா! தமிழ் திரையுலகில் ரசிக்கும்படியான ஹிட் பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. தனது தனித்துவமான இசைக்காக கொண்டாடப்படும் அவர் தமிழ் திரையுலகின் இசையுலகில் புத்துயிர் ஊட்டியதாக பாராட்டப்படுகிறார். அவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும் உள்ளது. சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இன்னும் பல நம்பிக்கைக்குரிய படங்களில் இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. அந்த வரிசையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ’புரொடக்ன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு அவர் இசையமைப்பாளராக இணைந்து...
ரியோ ராஜ் – சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ரியோ ராஜ் – சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Uncategorized
Roll Time Studios* - தயாரிப்பில் ரியோ ராஜ் - சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது! *Roll Time Studios* தயாரிப்பில் புதிய திரைப்படமான "movie title" இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கலை அரசு தயாரிக்குகிறார். அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் BK இப்படத்தினை இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் பாவம் பொல்லாதது, ஸ்வீட் ஹார்ட், ஜோ போன்ற வெற்றி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இருகப்பற்று, சொர்க்கவாசல் படத்தின் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார்.ய படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா. உள்ளிட்டோர் முக்கிய கா...
‘Love Oh Love’ First Look Unveiled by Makkal Selvan Vijay Sethupathi

‘Love Oh Love’ First Look Unveiled by Makkal Selvan Vijay Sethupathi

Uncategorized
‘Love Oh Love’ First Look Unveiled by Makkal Selvan Vijay Sethupathi The much-awaited first look of the romantic entertainer “Love Oh Love”, starring Pavish Narayan and Naga Durga, has been officially unveiled by Makkal Selvan Vijay Sethupathi today. In a special and memorable moment, the film’s team met Vijay Sethupathi sir on the sets of his upcoming project Director Thyagaraja Kumararaja’s “Pocket Navel”, where he graciously launched the first look, extending his wishes to the entire cast and crew. The gesture has added significant excitement and visibility to the project, setting the tone for what promises to be a refreshing romantic film. Produced by Zinema Media and Entertainment Ltd, Dinesh Raj, along with Creative Entertainers & Distributors’ G Dhananjheyan, “Love Oh Love” i...
“சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை” – கமல்ஹாசன்!

“சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை” – கமல்ஹாசன்!

Uncategorized
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்! மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது. பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து தமிழகத்தை காக்கவும், தமிழக மக்களின் முன்னேற்றம் கருதியும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. சுயநலமற்ற அரசியலுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்த...
மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் சூரி நாயகனாக நடிக்கும் படம்!

மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் சூரி நாயகனாக நடிக்கும் படம்!

Uncategorized
நடிகர் சூரி, இயக்குநர் ஆர். ரவிகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் ‘Blood Followed The Flood’ எனும் டேக்லைன் கொண்ட புதிய படம் #சூரி07, #மைத்ரிதமிழ்03 அறிவிப்பு! இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் #மைத்ரிதமிழ்03 என்ற தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. வெள்ள நீரில் இடுப்பு வரை நின்றிருக்கும் கதாநாயகனை பின்பிருந்து காட்டும் வகையில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரில் பிரதிபலிக்கும் அவரது உருவம் ம...
டொவினோ தாமஸ் நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு!

டொவினோ தாமஸ் நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு!

Uncategorized
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள ' பள்ளிச்சட்டம்பி 'படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து 'பள்ளிச்சட்டம்பி' மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  அவரது இசையில் வெளியான 'காட்டு செம்பகம்'  பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி  மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ரா...
பான் இந்திய படமாக வெளிவரும் ஷர்வானந்த் நடித்த  ‘பைக்கர்’ ( BIKER)

பான் இந்திய படமாக வெளிவரும் ஷர்வானந்த் நடித்த  ‘பைக்கர்’ ( BIKER)

Uncategorized
ஷர்வானந்த் நடிக்கும்  பைக்கர் ( BIKER)  பட பத்திரிகையாளர் சந்திப்பு ! முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது.., இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிக...