Monday, April 20

ஃபோர்த் ஃப்ளோர் _ விமர்சனம்

Loading

ஃபோர்த் ஃப்ளோர்_ விமர்சனம்

நடிகர்கள்
ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா,  பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய்

இயக்குநர்: L R சுந்தரபாண்டி
தயாரிப்பாளர்: A. ராஜா
ஒளிப்பதிவு: J லக்ஷ்மன்
 இசையமைப்பாளர்: தரண் குமார்
எடிட்டர்: ராம் சுதர்ஷன்
மக்கள் தொடர்பு: A ராஜா

மும்பையில் பணியாற்றும் ஆரி அர்ஜுனன்,  தன்னுடைய முன்னாள் காதலியின் தொலைபேசி அழைப்பின் காரணமாக சந்திக்க சென்னை வருகிறார்.

இங்கு வந்த பிறகு காதலியை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆரி தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டிலும் சில பல நிழலான சம்பவங்களும், அமானுஷ்ய விஷயங்களும் தொடர்ந்து நடக்கின்றன.

காணாமல் போன  காதலிக்கும் இப்போது நடக்கும் அமானுஷ்யங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

காதலியை ஆரி பிரேக்கப் செய்த பிறகு என்ன நடந்தது?

இவற்றையெல்லாம் திகில் பின்னணியில், விறுவிறு திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி.

எப்போதும் மிகை நடிப்பை கொடுக்காத ஆதி இந்தப் படத்திலும் பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் அளவோடு நடித்திருக்கிறார்.

காணாமல் போன காதலி குறித்து ஆரம்பத்தில் வெளிப்படும் அதிர்ச்சியையும், பின்னர் வில்லன் குழுவில் தன்னவள் மாட்டிக் கொண்டு இருப்பது தெரிந்ததும் ஆக்ரோஷமாக வில்லன் குரூப்பிடம் போராடுவதும் என நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் ஆரி.

நாயகிகள் தீபிகா மற்றும் பவித்ரா என்று இருவர் இருந்தாலும் பெரிதாக யாருக்குமே வாய்ப்பு இல்லை.

வில்லன் வேடத்தில் மிரட்டி இருக்கும் இயக்குனர் சுப்பிரமணிய சிவா கவனம் ஈர்க்கிறார்.

பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் திகில் படங்கள் பின்னணி இசையே பெரிதும் நம்பி இருப்பதால் அந்த நம்பிக்கையை வீணாக்காமல் படத்துக்கு கை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தரண்குமார்.

அமானுஷ்ய வகை திகில் படம் என்றால் விஷுவலாக எப்படி வேண்டுமானாலும் காட்டிவிட்டு பேய் மீது  ‘பழி’யைப் போட்டு விடலாம் என்ற எழுதாத விதியை அட்வான்டேஜ் ஆக இயக்குனர்  எடுத்துக் கொண்டாரோ என எண்ணும்  வகையில் சில காட்சிகள் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கின்றன.

திகில் பட ரசிகர்களை கவரும் இந்த ‘ஃபோர்த் ஃப்ளோர்‘.