![]()
நடிகர்
நடிகைகள்
விமல் ( ஹரி ), ஆஷ்னா சவேரி ( சுரேகா ), ஆனந்த ராஜ் ( அண்ணாச்சி )
சிங்கம்புலி ( கிரி )மன்சூரலிகான் ( செங்கல்வராயன்), பூர்ணா ( கீதா ), மியா ராய் (கன்பைட் காஞ்சனா) லோகேஷ், வெற்றி வேல்ராஜ்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
இசை – நடராஜன் சங்கரன்
பாடல்கள் – விவேகா கலை – வைரபாலன்
நடனம் – கந்தாஸ் ஸ்டண்ட் – ரமேஷ். எடிட்டிங் – தினேஷ் தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் திரைக்கதை வசனம்இயக்கம் – AR.முகேஷ்.
ஹரஹரமகாதேவி பாடிக்கொண்டு, இருட்டு அறையில் முரட்டுக்குத்து குத்தி இதுதான் ரொமாண்டிக் காமெடி என்ற அரை வேக்காடுகளுக்கு மத்தியில் நிஜமான ரொமாண்டிக் காமெடி படம் ஒன்றைத் தந்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.ரமேஷ். தெலுங்கில் குண்டூர் டாக்கீஸ் எனும் பெயரில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படத்தை அதன் சாரம் கெடாமல் அட்டகாசமாய் மறு உருவாக்கம் செய்து இருக்கிறார்.
மருந்துக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் விமலும் சிங்கம் புலியும் வயது வித்தியாசத்தை மீறி நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். பெரிதாகத் திருடினால் மாட்டிக்கொள்வோம் என்று சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நண்பர்கள்,காவல் துறை ஆய்வாள்ர் ஒருவரின் வீட்டிலிருந்து லட்சக்கணக்கில் திருடிவிடுவதால் ஏற்படும் விளைவுகளை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படம்தான் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு“.
பிளே பாய் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் விமல். தமிழில் நடித்த முல் இரண்டு படங்களிலும் பொத்திப் போர்த்தி நடித்த ஆஷ்னா சவேரி இந்தப் படத்தில் ஆடை துறப்பில் அநியாயத்துக்கு தாராளம் காட்டியிருக்கிறார். இந்தக் கவர்ச்சி போதுமோ போதாதோ என்று சந்தேகப்பட்ட இயக்குநர்,
மியா ராய் என்ற பலான பட நடிகையையும் கன்பைட் காஞ்சனா என்ற வேடத்தில் நடிக்க வைத்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
கம்பீரம் காட்ட வேண்டிய காவல் உதவி ஆய்வாளர் வேடம் என்பதால் பூரணா மட்டும் விதிவிலக்கு.
படத்தின் இரண்டாவது கதாநாயகன் என்று சொல்லத்தக்க வகையில் விமலுடன் திரைப்பரப்பை பங்கிட்டுக் கொள்ளும் சிங்கம் புலி தனித்துவம் மிக்க குரலாலும் உடல் மொழியாலும் படம் முழவதும் பின்னிப் பெடலெடுக்கிறார்.
அறிமுகமான கேப்டன் பிரபாகரன் படத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனாக தலையை ஆட்டியபடியே வசனம் பேசிய மன்சூரலிகான் இன்றுவரை ஒவ்வொரு படத்திலும் அதேபாணியில் நடிப்பதைத்தான் சகிக்க முடயவில்லை.
கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. பாடலாசிரியர் விவேக் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் காம்பினேஷனில் உருவான படல்கள் பரவாயில்லை ரகம்.
குடும்பத்தினரோடு கண்டு களிக்க வேண்டிய படங்கள் என்று ஒரு ரகம் உண்டு. ரகசியமாகச் சென்று ரசிக்க வேண்டிய படங்கள் என்று மற்றொரு ரகம் உண்டு.
“இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு“ இதில் இரண்டாவது ரகம்.

