Wednesday, September 23

இரட்டையர் _ விமர்சனம்

Loading

‘இரட்டையர் விமர்சனம்

‘இரட்டையர்’ – இருக்கை நுனிக்கே  ரசிகர்களை இழுத்து வரும் சைக்கலாஜிகல் திரில்லர் என்று ஒரே வரியில் சுருக்கமாக விமர்சித்து விடலாம்
எத்தனையோ மொழிகளில் ஏராளமான த்ரில்லர் படங்களை பார்த்துப் பழகியிருப்போம். ஆனா, இது அப்பிடி இல்ல பாஸ்! டோட்டலா வேற ரூட்டுல வந்து மிரட்டுற பக்கா சைக்கலாஜிகல் த்ரில்லர் தான் இந்த ‘இரட்டையர்’. ஏசியா ஐகானிக் ஸ்டுடியோஸ் தயாரிப்புல ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன், வினோத் கண்ணன் கூட்டணியில இந்த வாரம் தியேட்டருக்கு வந்திருக்கு. புது இயக்குநர் ஜெகதீஷ் ஃபர்ஸ்ட் மேட்ச்லயே சிக்ஸர் அடிச்சிருக்காரா இல்லையா? வாங்க பார்ப்போம்!

கதை
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை பிரதேசம் ஒரு குடும்பம் காதலி சென்று கொண்டிருக்கிறது.

எதிர்பாராமல் நடக்கும் ஒரு கோர விபத்துல அப்பா ஸ்பாட் அவுட்! அம்மாவோட முகமும் முழுமையாக சிதைந்து விடுகிறது. அப்புறம் என்ன, பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு கிட்டத்தட்ட முகத்தை மறைக்கும் அளவுக்கு கட்டு போட்டுக்கொண்டு   வீட்டுக்கு வர்றாங்க அம்மா.

ஆனா, வீட்டுக்கு வந்த அம்மா பண்ற சில வித்தியாசமான செய்கைகளை பார்த்துட்டு, வீட்டில் இருக்கும் இரட்டை மகள்களுக்கும் ஒரு பெரிய சந்தேகம் வருகிறது. “வந்திருக்கிறது நம்ம நிஜ அம்மா தானா, இல்ல வேற யாராவதா?” – இந்த விறுவிறுப்பான ட்விஸ்ட்டை வச்சுக்கிட்டு, கடைசி வரைக்கும் நம்மள சீட் நுனியில உட்கார வைக்கிறதுதான் படத்தோட செம த்ரில்லிங் கதை!

நடிப்புல யார் டாப்?
அபிநயா: அம்மாவாக வருகின்றற அபிநயா நடிப்புல சும்மா மிரட்டியிருக்கிறார். சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மகள்கள் இருவரையும் சமாளிக்கும் காட்சிகளில் முத்திரை பதிக்கிறார் பிள்ளைகள்கிட்ட காட்டுற பாசம், அதே நேரத்துல அவங்க பண்ணுற மர்மமான கண்டிப்புன்னு கேரக்டரை அப்படியே கச்சிதமா பிடிச்சிருக்காங்க.

அனுமிதா & அனுஷிதா:

இரட்டை குழந்தைகளா வர்ற இந்த ரெண்டு பேரும் அனுபவம் மிக்க குழந்தைகள் நட்சத்திரங்களை போல் அட்டகாசமாக நடித்திருக்கின்றனர் வீட்டுக்குள்ள இருக்குறது நம்ம அம்மா தானான்னு சந்தேகப்படுற இடத்துலயும், அங்கிருந்து தப்பிக்க பிளான் போடுற சீன்லயும் எதார்த்தமான நடிப்பை  வெளிப்படுத்திருக்காங்க.

சுப்ரமணிய சிவா: இரட்டைக் குழந்தைகளின் குடும்ப சொந்தமா வர்ற இயக்குநர் சுப்ரமணிய சிவா, அவரோட அனுபவ நடிப்பை பக்காவா இறக்கியிருக்கார். நல்லவரா கெட்டவரான்னு கணிக்கவே முடியாத அளவுக்கு, சரியான மீட்டர்ல நடிச்சு படத்துக்கு பெரிய வெயிட் சேர்த்திருக்கார். 

டெக்னிக்கல் டீம் எப்பிடி?
கேமரா (முகமது அமீன்): மலையோட அழகையும், அந்தப் பசுமையையும் அப்படியே கேமராவுக்குள்ள  கொண்டு வந்திருக்கார். படம் முழுக்க பெரும்பாலும் ஒரே வீட்டுக்குள்ளேயே நகர்ந்தாலும், கொஞ்சம் கூட போர் அடிக்காத அளவுக்கு விதவிதமான ஆங்கிள்ல பிரேம் வச்சு அசத்தியிருக்கார்.

மியூசிக் (GKV): ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்கு என்ன தேவையோ, அந்த பிஜிஎம்-ஐ (BGM) கரெக்டாக செய்து படத்தோட விறுவிறுப்பை ஏத்தியிருக்கார்.

எடிட்டிங் (ஈஸ்வரா மூர்த்தி): கத்தரி போட்ட விதம் செம கச்சிதம், தேவையில்லாத சீன் எதுவுமே இல்ல!

இயக்குநரின் டச்!
அறிமுக இயக்குநர் ஜெகதீஷ், முதல் படத்துலேயே முத்திரை பதிச்சிருக்கார். பட்ஜெட் ரொம்ப குறைவுதான், ஆனாலும் அது எந்தஞ இடத்திலும் தெரியாத அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அசத்தி இருக்கிறார்.

பார்க்கலாமா? வேண்டாமா?
கண்டிப்பா தியேட்டர்ல போய் பார்க்கலாம்! புதுவிதமான த்ரில்லர் அனுபவத்தை விரும்புறவங்களுக்கு இந்த ‘இரட்டையர்’ ஒரு சூப்பர் சாய்ஸ்!