![]()

ஜோஷ்வா _ திரைப்பட விமர்சனம்
அமெரிக்காவில் பிரபல வழக்கறிஞராக இருக்கும் நாயகி குந்தவை, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதான மாஃபியா கும்பலின் தலைவனுக்கு எதிராக ஒரு வழக்கை வாதாட இருக்கிறார்.
இதனால் வில்லன், குந்தவையை கொல்வதற்கு பெரும் தொகை அளிப்பதாக தெரிவிக்கிறான்.
வழக்கறிஞர் குந்தவையை இந்த கொலைகார கும்பல்களிடம் நாயகன் வருண் காப்பாற்றுவதே கதை.
ஐந்து நிமிடங்களுக்கு ஒரு துப்பாக்கிச்சூடு காட்சி. தியேட்டரே அதிர்கிறது. பிறகு கொஞ்சம் வசனம், காதல்.. மீண்டும் துப்பாக்கிச்சூடு!
ஆக்சன் படமாக உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டதெல்லாம் சரிதான். இதற்கும் அடிப்படையாக சுவாரஸ்யமான திரைக்கதை வேண்டுமே.. அது மிஸ்ஸிங்.
அதே நேரம் மேக்கிங் அசத்தல். ஜேம்ஸ் பாண்ட் படத்தைப்போல் நாயகனுக்கு காஸ்டியூம் எல்லாம் கொடுத்து சண்டைக் காட்சிகளை சிறப்பாக அமைத்து உள்ளனர். யானிக் பென் உருவாக்கி இருக்கும் சண்டைக் காட்சிகள்… அதற்கேற்ற வகையில் ஸ்டெடி கேம் ஷாட்கள் அதிரவைக்கின்றன.
அதிரடி நாயகனாக களம் இறங்கி இருக்கிறார் வருண். சண்டைக் காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார். மின்னல் வேகத்தில் எதிரிகளை தாக்குகிறார். முழுமையான அதிரடி நாயகன் எனலாம். காதல் செண்டிமெண்ட் காட்சிகளில் இன்னும் பயிற்சி தேவை.
குந்தவையாக நடித்திருக்கும் நாயகி ராஹே, அழகாகவும் இருக்கிறார் இயல்பாகவும் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு, இசை அனைத்தும் ஹாலிவுட் ரகம். தரம்.
ஆனால் அடிப்படையான திரைக்கதையில் கவனம் செலுத்தாததால் படத்துடன் ஒன்றமுடியவில்லை.

