Wednesday, September 2

கைலா – விமர்சனம்

Loading


முகத்தை அகோரமாக்கிக்கொண்டு அபத்தமான முறையில் பயமுறுத்தும் கிளிஷே பேய்ப்படங்களுக்கு மத்தியில் கொஞ்சம் மாறுபட்ட முறையில் மர்மங்கள் நிரம்பிய த்ரில்லர் படத்தைக் கொடுத்ததற்காகவே இயக்குநர் பாஸ்கர் சீனிவாசனை முதலில் பாராட்டலாம்.
குறிப்பிட்ட ஒரு வீட்டின் முன் மர்மமான முறையில் மரணங்கள் நிகழ்கின்றன, அந்த வீட்டில் உள்ள பேய்தான் இதற்கு காரணம் என்று பொது மக்கள் திடமாக நம்புகின்றனர். மரணங்கள் குறித்து விசாரணை நடத்தும் காவல் துறையினர் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் திணறுகின்றனர்.

தானா என்ற பெண் எழுத்தாளர் இந்த மர்மங்ளை எவ்வாறு அம்பலப்படுத்துகிறார் என்பதுதான் கைலா படத்தின் கதை.

பெண் எழுத்தாளர் தானாவாக தானா நாயுடு நடித்திருக்கிறார். முகத்தையே மறைக்கும் அளவுக்கு இவர் அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடி இவரை எழுத்தாளர் என்று பார்வையாளர்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறது. ஆனால் எழுத்தாளரான இவர் அமெச்சூர் போட்டோகிராபர் மாதிரி புகைப்டங்களாகத்தான் எடுத்துத் தள்ளுகிறார். அழகான இடங்களைப் பார்த்தால் புகைப்படம் எடுக்கும் ஒரு பங்களாவை புகைப்படம் எடுக்கப்போக, அதைப் பார்த்த இவர் தோழிகள் இந்த பங்களா பேய் பங்களா என்று சொல்கிரார்கள். இந்த பங்களா முன் நடந்த மர்ம மரணங்கள் குறித்து தானா அறிய முயற்சிக்கிறார். இந்த மரணங்கள் அனைத்தும் மாதத்தின் குறிப்பட்ட ஒரு தேதியில்தான் நடக்கிறது.

மர்ம மரணங்களுக்குக்க காரணம் என்ன இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை பின்பகுயில் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாஸ்கர் சீனிவாசன். படத்தில் தேவ் என்ற முக்கிய வேடத்திலும் இவர் நடித்திருக்கிறார். பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அடக்கி வாசித்து அருமையாக நடித்திருக்கிறார். காவல் துறை அதிகாரியாகயாக வரும் அன்பாலயா பிரபாகரனும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றாலும் முக்கிய பாத்திரங்களில் தோன்றும் தானா நாயுடுவும், பாஸ்கர் சீனிவாசன் மட்டுமே மனதில் பதிகிறார்கள்.
கைலா படத்தில் பாராட்டுத்தக்க முதல் அம்சம் பரணி செல்வத்தின் ஒளிப்பதிவுதான். ஸ்வரனின் இசையும் நம்மை படத்தில் ஒன்றிப்போக உதவுகிறது.
தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் நிதி உதவியை எல்லாம் ஏதோ பீரோவிலிருந்து பணம் எடுப்பதுபோல் எடுத்து யாரும் இஷ்டத்துக்கு செலவு செய்து விடமுடியாது. பாரின் கான்ட்ரிபியூஷன் ஆக்ட் எனப்படும் எப் ஆர் சி ஏ சட்ட திட்டங்கள் கடுமையாக இருக்கும்போது, இதை கைலா படத்தில் நுனிப்புல்லாக மேய்ந்திருப்பது நம்பும்படி இல்லை. இந்த விஷயத்தை மட்டுமே பிரதானப்படுத்தி திரைக்கதை அமைத்து காட்சிகளை அமைத்து படமாக்கியிருந்தால் இன்னும் பிரமாதமான படமாக இருந்திருக்கும்.