![]()
ஃபீனிக்ஸ் _ விமர்சனம்
நடிகர்கள்: சூர்யா சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன், மூனார் ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ்
இசை: சாம் சி எஸ்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
இயக்கம்: அனல் அரசு
சிட்டிங் எம்எல்ஏ சம்பத் பட்டப்பகலில் படு பயங்கரமாக கொலை செய்யப்படுகிறார்.
அவரை கொலை செய்த குற்றத்திற்காக சூர்யா சேதுபதியை கைது செய்யும் காவல்துறை, அவரை நீதிமன்ற காவலில் அடைக்கிறது.
எம் எல் ஏ சம்பத்தின் மனைவியான வரலட்சுமி சரத்குமார் தனது ஆட்களை சிறைக்கு அனுப்பி சூர்யா விஜய் சேதுபதியை தீர்த்துக்கட்டச் சொல்கிறார்.
ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்து தன்னை காத்துக் கொள்கிறார் சூர்யா.
இதனால் வெகுண்டெழும் வரலட்சுமி தரப்பு, வட இந்தியாவில் இருந்து அடியாட்களை வரவழைத்து சூர்யாவின் கதையை முடிக்க சொல்கின்றனர்.
வட இந்திய கும்பலும் சூர்யாவிடம் வாங்கி கட்டிக் கொண்டு வந்து சேர்கிறது.
யார் இந்த சூர்யா சேதுபதி?
அவருக்கும் எம் எல் ஏ சம்பத்துக்கும் அப்படி என்ன தீராத பகை என்பதை அதிரடி ஆக்சன் காட்சிகள் மூலமாகவும், விறுவிறுப்பான திரைக்கதை மூலமாகவும் விளக்குகிறது பீனிக்ஸ்.
ஓர் ஒளிப்பதிவாளர் இயக்குனராகும்போது, படத்தின் ஒளிப்பதிவு மிகப் பிரமாதமாக அமைந்து பெரிய அளவில் பேசப்படும்.
அதேபோல் ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு, இயக்குனராக களம் கண்டிருக்கும் ,ஃபீனிக்ஸ் படத்தில் சண்டை காட்சிகள் அசத்தலாக அமைந்து, படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் சூர்யா விஜய் சேதுபதி, தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் கோபத்தையும் வன்மத்தையும் முக பாவங்களில் வெளிப்படுத்தி அருமையாக நடித்திருக்கிறார்.
விசாரணை அதிகாரியாக வரும் ஹரிஷ் உத்தமன், சூர்யாவின் தாயாராக வரும் தேவதர்ஷினி ஆகியோரும் சிறப்பான நடிப்பில் படத்திற்கு தங்கள் பங்களிப்பை செய்திருக்கின்றனர்.
அனுபவம் மிக்க ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் உழைப்பு படம் முழுக்க பளிச்சிடுகிறது.
சிறார் கூர்நோக்கு இல்ல அதிகாரி வேடத்தில் வேல்ராஜின் நடிப்பும் நம் நினைவில் நிற்கிறது.
அடுத்து வரும் காட்சிகளை சுலபமாக யூகிக்க முடிந்தாலும் சற்றும் போர் அடிக்காத வகையில் தனது அதிரடி ஆக்சன் காட்சிகள் மூலமும், விறுவிறுப்பான திரைக்கதை மூலமாகவும் படத்தை கொடுத்திருக்கும் இயக்குனர் அனல் அரசுக்கு நமது பாராட்டு.
அதிரடி சண்டைக் காட்சிகளை விரும்பும் ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு அட்டகாசமான திரை விருந்து பீனிக்ஸ்.
மதிப்பெண்3.5/5


