Saturday, March 7

பூக்கி _ விமர்சனம்

Loading

பூக்கி _ விமர்சனம்

Casting : Ajay Dhishan, R. K. Dhanusha, Pandiarajan, Sunil, Lakshmi Manchu, Indumathi Manigandan, Aaditya Kathir Vivek Prasanna, Black Pandi, Bigg Boss Sathya, M. J. Shriram, Radha, Ashwin Ram, Shiyara Sharmi,Priyanka
Directed By : Ganesh Chandra
Music By : Vijay Antony
Produced By : Vijay Antony Film Corporation – Fatima Vijay Antony, Meera Vijay Antony

இன்றைய இணைய தலைமுறையின் அதிவேக காதலையும் அதைவிட அதிக வேகத்தில் நடக்கும் பிரேக்_அப்களையும் கலகலப்பாக சொல்லும் படம் பூக்கி.

நாயகன் அஜய் தர்ஷன் மற்றும் நாயகி இருவரும் தீவிரமாக காதலிக்கின்றனர்.

ஒரு சின்ன விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பிரச்சனையாகி பெரிய சண்டையாக வளர்ந்து நடுரோட்டில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றகனர்.

இதை சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரவ விட, பொறியாக தோன்றிய பிரச்சனை தீயாக கொழுந்துவிட்டு எரிகிறது.

சில சேனல்கள் எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற முயற்சிக்க,  காதல் போயினும் மீண்டும் காதல் என அடுத்த இணையைத் தேடி இருவரும் பயணிக்க ஆரம்பிக்கின்றனர்.

இந்த இருவரின் பயணமும் எந்த வழியில் சென்று எவ்வாறு நிறைவடைகிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லுகிறது பூக்கி.

படத்தில் வரும் பாடல் ஒன்றில் “என்னடா எழவு காதல் இது…” என்று  ஒரு வரி வருகிறது.

இந்த ஒரு வரியை மையமாக வைத்து ஒரு முழு நீள திரைப்படம் உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்? அதுதான் பூக்கி.

காதல் ஜோடி ஒன்று காதலிக்கும் போது ஒத்துப் போகாமல் பிரிந்து சென்று,  தனித்து பயணிக்கும் போது பரஸ்பரம் தங்கள் காதலை உணர்ந்து கொள்வதுதான் காதல் என்றால் அதை இந்தப் படம் மிகச் சரியாகவே செய்திருக்கிறது.

படம் முழுவதும் இழைந்தோடும் மிருதுவான நகைச்சுவை ரசிக்க  தக்க வகையில் அமைந்திருக்கின்றன.

ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா காம்போ நடத்தும் நகைச்சுவை அலப்பறைகள் அட்டகாசம்.

அஜய் தர்ஷன் காதலில் கசிந்துருக ஆர் கே தனுஷாவுடன் பயணிக்கும் போதும் அதே காதலி கோபப்படும் வார்த்தைகளை சொல்லும்போது வெகுண்டு எழுவதும் என்று நடிப்புத் திறனை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பக்கத்து வீட்டுப் பெண் போல் எளிய தோற்றத்தில் இருக்கும் நாயகியே ஆர் கே கனமான வேடத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

அஜய் அப்பா வேடத்தில் வரும் பாண்டியராஜனுக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் இறுதியில் மகன் சொந்தமாக வீடு வாங்கித் தரும் காட்சியில் நெகிழ்ந்து போய் பேச்சு வராமல் இருக்கும் காட்சியில் நிகழ வைக்கிறார்.

விஜய் ஆண்டனியின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் முணுமுணுக்க வைக்கின்றன.

குறிப்பாக மாஸ் பாடல் இந்த வருட ஹிட் லிஸ்டில் சேர்ந்து விடும்.

காதலைப் பற்றிய கண்ணோட்டம் காலம் தோறும் மாறினாலும் காதல் மாறாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரா.

மதிப்பெண் 3.5/5