ஜெயலலிதா வேடத்துக்கு சரியான தேர்வு ரம்யா கிருஷ்ணன்!

0

 167 total views,  3 views today

எம்.எக்ஸ்.பிளேயரின்குவீன்டிரைலர் ரம்யா கிருஷ்ணன் சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறது

 தேசிய விருது வென்ற கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘குவீன்’ இணையதளத் தொடர் டிசம்பர் 14 முதல் ஒளிபரப்பாகிறது

துணிச்சலான நடிகை, தைரிமான அரசியல்வாதி, இறுதி மூச்சுவரை சமரசங்களின்றி திகழ்ந்தவரை விதியின் குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவையைப்போல்,  அவர் மிக் குறைந்த வயது பெண் முதல்வர் என்ற பெருமையுடன் தமிழகத்தை ஆண்டார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான சக்தி சேஷாத்ரி என்ற தொடரை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது எம்.எக்ஸ்.பிளேயர். தனக்கு விருப்பமில்லாத வாழ்க்கைக் கூறுகளுக்குள்  வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்ட பெண், அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெற்றியடைந்த கதை இது.

இதன் டீஸருக்குக் கிடைத்த அபரிமிதமான வரவேற்பைப் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி நிறுவங்களில் ஒன்றாகத் திகழும் எம்.எக்ஸ்.பிளேயர் டிரைலரை டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடுகிறது.

தேசிய விருது வென்ற கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இத்தொடரில் மெகா ஸ்டார் ரம்யா கிருஷ்ணன்  குவீனாக நடிக்கிறார். பதினைந்து வயதில் வறுமை காரணமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததில் தொடங்கி மக்களின் ராணியாக மாறியதுவரையிலான சம்பவங்களை விவரிக்கிறது  ‘குவீன்’. 

தான் ஏற்றிருக்கும் வேடம் குறித்து ரம்யா கிருஷ்ணன்: சில கதாபாத்திரங்கள் அதில் உள்ள சவால்களை வெளிப்படுத்தி அதை ஏற்க வற்புறுத்தும். சக்தி அதுபோன்ற கதாபாத்திரம்தான்.  நான் பின்பற்றும் ஒரு பெண்மணி, தன் வெகுளியானயான இயல்பிலிருந்து வெளிவந்து, இந்த கடின உலகை எப்படி வெற்றி கொண்டார் என்பது என்னை மிகவும் கவரவே, நான் இந்த வேடத்தை ஏற்க முடிவு செய்தேன்.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்ததாவது: சில கதைகள் சொல்லியே ஆகவேண்டும் என்ற தகுதியைப் பெற்றிருக்கும். அத்தகைய கதைதான் இது. இந்தத் தொடரை உருவாக்க நாங்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். இந்த குழுவைவிட வேறு ஒரு நல்ல குழு எனக்கு அமையவே முடியாது. இந்தத் தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் திடமான காரணம் இருக்கிறது. இதில் நடித்த ஒவ்வொருவருமே தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர்.

எம்.எக்ஸ் பிளேயர், தலைமை நிர்வாக அதிகாரி கரண் பேடி, முத்தாய்ப்பாகச் சொன்னது: மொழிகள், மற்றும் நாடுகள் என்ற சிறிய எல்லைகளுக்குள் சிக்காமல் இந்தக் கதை உலகளாவிய ஏற்புத்தன்மை கொண்டது.   ஆக்கப்பூர்வமான படக்குழு, ஏற்கும் வேடம் எதுவாகினும் அதற்கு நியாயம் செய்யும் நடிக நடிகையர், செலவைப் பொருட் படுத்ததாத பிரமாண்டம் என்று மிகச் சிறந்த இலக்கியப் பெரும் படைப்பாக உருவாக்குகிறோம். தான் வெகுவாக நம்பியவற்றின் மீதே நம்பிக்கையிழந்து, தனக்குத்தானே உருவாக்கிக்கொண்ட சட்டதிட்டங்களை மற்றவர்களையும் ஏற்கச் செய்து வெற்றி கொண்ட பெண்ணின் கதைதான் இது” என்றார்” தலைமை நிர்வாக அதிகாரி கிரண் பேடி.

மேலும் இத்தொடரில் அனிகா சுரேந்திரன், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் மற்றும் இந்திரஜித் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடங்கிளில் நடிக்கின்றனர்.

Trailer Link: https://youtu.be/9CjflkRNG3I

‘குவீன்’ தொடரை தமிழ், இந்தி அல்லது பெங்காலியில் டிசம்பர் 14 முதல் எம்.எக்ஸ் பிளேயரில் இலவசமாகக் கண்டு மகிழுங்கள்

Download the App Now

Web: https://www.mxplayer.in/

எம்.எக்ஸ்.பிளேயர் குறித்து:

உலகின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு செயலியான எம்.எக்ஸ்.பிளேயர், பார்வையாளர்களுக்கு தரம் வாய்ந்த படைப்புகளை டிஜிட்டல் வடிவத்தில் முதலில் வெளியிடுகிறது. நாள்தோறும் 75 லட்சத்துக்கும் மேலான தீவிர பார்வையாளர்களைக் கொண்ட இந்த செயலி, கைபேசி பயன்படுத்தும் இரண்டு பேரில் ஒருவரை பார்வையாளராக்க் கொண்ட நாட்டின் மிகப் பெரிய பொழுதுபோக்கு செயலியாகும்.

எவ்ரிடெயின்மெயிண்ட் என்ற பெயரில் பார்வையாளர்களின் மன நிலைக்கு ஏற்ப, வித விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, ஊக்குவிப்பு விளம்பரத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்குகிறது எம்.எக்ஸ்.பிளேயர்.

நேயர்களுகளின் பார்வைக்கு 1,50,000 மணி நேரத்திற்கும் மேலான அங்கீகாரம் பெற்ற படைப்புகள், பத்து இந்திய மொழிகளில் தயாராக இருக்கின்றன. டிராமா, நகைச்சுவை, ரியாலிட்டி ஷோ, காதல் என்று பல பிரிவுகளில் எம்.எக்ஸ.பிளேயர் ஒரிஜினல் சீரியஸ்களும் லைப்பரியில் காணக்கிடைக்கின்றன.

இந்தியாவின் மாபெரும் ஊடகம்  மற்றும் பொழுதுபோக்குக் குழுமமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அங்கமான டைம்ஸ் இன்டர்நெட்டுக்கு சொந்தமான எம்.எக்ஸ்.பிளேயர் 2012ஆம் ஆண்டு முதல்,  டாப் 10 ஆன்ட்ராய்ட் செயலிகளில் தவறாமல் இடம் பெற்று வருகிறது. தற்போது ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ், வெப், அமேசான் ஃபயர் டி.வி.ஸ்டிக், மற்றும் ஆன்ட்ராய்ட் தொலைக்காட்சிகளிலும் கிடைக்கிறது.

 

 

 

 

 

 

Share.

Comments are closed.