Wednesday, May 20

ராகு கேது _ விமர்சனம்

Loading

ராகு கேது _ விமர்சனம்

திரையில்
சமுத்திரக்கனி – சிவன்,
விக்னேஷ் – மகா விஷ்ணு,
கஸ்தூரி – துர்கா,
சத்னா சங்கர் – லட்சுமி,
பாலசுந்தரம் – சுபர்பானு

திரைக்குப் பின்
கதை, வசனம், பாடல்கள்  கலைமாமணி கே.பி.அறிவானந்தம்
இயக்குநர்  துரை.பாலசுந்தரம்

படத்தொகுப்பாளர் : பி. லெனின்

ஒளிப்பதிவு: மோகன் பிரசாந்த்

இசையமைப்பாளர் (பாடல்கள்) : சதா சுதர்சனம்

பின்னணி இசை : பரணி தரன்

கதை, திரைக்கதை, வசனம் மற்றும்

பாடல்கள் : கே.பி.அறிவானந்தம்

இயக்கம் : டி.பாலசுந்தரம்

மக்கள் தொடர்பு : ஆர்.மணி மதன்

அந்த காலத்தில் தான் தயாரித்து இயக்கிய ஆன்மீகப் படங்களுக்கு அருட்செல்வர் ஏபி நாகராஜன் முன்னுரை கொடுப்பது போல், ராகு கேது படத்தின் இயக்குனரும் தனது குரல் மூலம் முன்னுரை வழங்கி இருக்கிறார்.

நவகிரகங்களில் முக்கியமான இரண்டு ராகு மற்றும் கேது. இவை இரண்டும் ஒரு  கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்துக்கு பெயர்ந்து செல்லும்போது ஏற்படும் பலா பலன்கள் குறித்து அறிந்து கொள்ள அனைவருக்குமே ஆர்வம் ஏற்படும்.

இந்த ராகு கேது கிரகங்கள் எப்போது எப்படி உருவாகின?

இந்த கிரகங்களை ஏன் வழிபட வேண்டும்?

அவ்வாறு வழிபடும்போது அடையும் பலன்கள் என்ன என்பதை விளக்கம் படம்தான் ராகு கேது.

சாகா வரம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்து எடுக்கும் அமிர்தத்தை தேவர்கள் அருந்தும்போது, அசுர குலத்தைச் சேர்ந்த சுபர் பானு கபட நாடகமாடி அமிர்தத்தை அருந்து விடுகிறார்.

இதனால் கோபம் கொண்ட மகாவிஷ்ணு, சுவர் பானு தலையை வெட்டி வீச, அமுதம் பருகிய காரணத்தால் மரணம் அடையாத சுபர் பானு, தனது இஷ்ட தெய்வம் துர்கா தேவியை வணங்கி பிரார்த்தனை செய்கிறார்.

தன் பக்தனுக்கு அருள் பாலிக்க வரும் துர்கா தேவி, தன்னிடமுள்ள நாக பாம்பின் தலையை சுபர் பானுவின் உடலுக்கும்,  நாகப்பாம்பின் உடலை சுபர் பானுவின் தலைக்கும் பொருத்தி விடுகிறாள்.

நாகப்பாம்பின் தலையை சுமந்த உடலுக்கு கேது என்றும் நாகப்பாம்பின் உடலை சுமந்த தலைக்கு ராகு என்றும் பெயர் வைக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் செய்யும் தவத்தின் பலனாக சிவபெருமான் தோன்றி, இதுவரை இருந்த ஏழு கிரகங்களுடன்  ராகு கேதுவாகிய நீங்கள் இருவரும் இணைந்து  நவகிரகங்கள் என்று அழைக்கப்படுவீர்கள் என்று அருள் பாலிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் இந்த பக்திப் படத்தில் கனமான கதை இருந்தும்,   காட்சி அமைப்புகளில் நேர்த்தியாக அதைக் கொண்டுவர முடியாததற்கு காரணம் படத்தின் குறைந்த பட்ஜெட்டாக இருக்கலாம்.

சமுத்திரக்கனியும் கஸ்தூரியும் சிறிய வேடங்களில் வருகிறார்கள் என்றாலும் மனதில் நிற்கும் அளவுக்கு அவர்களது பாத்திரப்படைப்பு இருக்கிறது.

சுபர் பானுவின் காதலியாக நடித்த சந்தியாஸ்ரீ கவனம் ஈர்க்கிறார்.

மிகக் குறைந்த பட்ஜெட்டிலேயே கிராபிக் காட்சிகளை பெரிதாக குறை சொல்ல முடியாத அளவுக்கு ஓரளவு சிறப்பாகவே செய்ய முயற்சித்து இருக்கிறார்கள்.

ராகு கேது கிரகங்கள் உருவானது குறித்தும், அதன் பலாபலன்கள் குறித்தும் அறிந்து கொள்ள நினைக்கும் ஆன்மீக அன்பர்கள் பார்க்க வேண்டிய படம் ‘ராகு கேது’.