Monday, December 2

சார் _ விமர்சனம்

Loading

சார் _ விமர்சனம்

ஆதிக்க சக்தியை சேர்ந்த கிராமத்தலைவர், தன் ஊரில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கு பெரும் தடையாக இருக்கிறார். இவரை மீறி மக்களுக்கு எழுத்தறிவிக்க துணியும் ஆசிரியர்கள் படும் அ வஸ்த்தைதான் சார் திரைப்படம்.

ஊர் தலைவரின் எதிர்ப்பை மீறி விமலின் தாத்தா பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்ட , அவரை பைத்தியமாக்கி அமர வைத்து விடுகிறார்கள் ஆதிக்க சக்தியினர். விமலின் தந்தை பள்ளிக்கூடத்தை தொடர்ந்து நடத்த முயல அவரையும் பைத்தியமாக்கி விடுகிறார்கள்.

வேறு ஊரில் உள்ள பள்ளியிலிருந்து மாற்றலாகி சொந்த ஊரில் உள்ள இந்த பள்ளிக்கு வருகிறரார்  நாயகன் விமல். அவருக்கும் ஊர் தலைவரின் வாரிசுகள் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு பள்ளியை நடத்திவிடாமல் செய்ய முயலுகின்றனர்.

இதை மீறி விமல் எவ்வாறு சாதித்தார் என்பதை விளக்குகிறது சார் திரைப்படம்.

விமலின் உடைகள் அந்தக் காலத்தை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

விமலுக்கும் நடிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ள படமாக சார் அமைந்திருக்கிறது. அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு ஸ்கோர் செய்கிறார் விமல்.

நாயகியாக வரும் சாயாதேவி கொடுத்த வேடத்தை குறைவின்றி செய்திருக்கிறார். விமலின் அப்பாவாக வரும் சரவணனின் நடிப்பு நெஞ்சைத் தொடும் விதத்தில் அமைந்திருக்கிறது.

விமலின் அம்மாவாக வரும் ரமா மற்றும் கஜராஜ் ஆகியோரும் பாத்திரங்களை உணர்ந்து திறம்பட நடித்திருக்கின்றனர்.

இனியன் ஜெய் ஹரிஷ் ஒளிப்பதிவு கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. சித்து குமார் இசையில் உருவான பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் பாஸ் மார்க் கொடுக்கலாம்.

ஓரிரு குறைகள் இருந்தாலும் நல்ல கருத்தைச் சொல்லும் படம் என்பதால் அவற்றை மறந்து தாராளமாக இந்த படத்தை கண்டு ரசிக்கலாம்.

மதிப்பெண் 3/5