Friday, October 23

Tag: Director Ram

சிறந்த படத்திற்கான விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’!

சிறந்த படத்திற்கான விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’!

News
23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்! தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிஸியேஷன் பவுண்டேஷன் சார்பில், 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது. இந்த திரைப்பட விழாவின் முக்கிய அங்கமான தமிழ் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் 12 திரைப்படங்கள் தேர்வாகியிருந்தது. விருது வழங்கும் நிகழ்ச்சி திரைப்பட விழாவின் இறுதி நாளில் நடைப்பெற்றது. ராமின் இயக்கத்தில் வெளிவந்த ‘பறந்து போ’ திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வுக்குழுவினரால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. விழாவில் இயக்குநர் ராம், டிஸ்னி + ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் திரு. ப்ரதீப் மில்ராய் மற்றும் ஜி கே எஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் திரு. கருப்புசாமி அவர்களுடன் விருதை பெற்றுக...
‘பறந்து போ’ பட வெற்றியை கொண்டாடிய படக்குழு!

‘பறந்து போ’ பட வெற்றியை கொண்டாடிய படக்குழு!

News
"பறந்து போ" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்! இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பையும் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியையும் பெற்றுள்ளது, மகிழ்ச்சியான இத்தருணத்தில்  உலகெங்கிலும் "பறந்து போ" திரைப்படத்தை வெளியீடு செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் தனது அலுவலகத்தில் படக்குழுவினருடன் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறார். இக்கொண்டாட்டத்தில் இயக்குநர் ராம், நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோருடன் ஜியோ ஹாட்ஸ்டாரின் பிரதீப் மில்ராய் பீட்டர், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸின் கருப்புச்சாமி மற்றும சங்கர், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பட வெற்றியைக் கொண்டாடும் வகையிலான இந்த நிகழ்வில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்....
இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

News
"இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி! ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது. நடிகை கிரேஸ் ஆண்டனி, "ராம் சார் படத்துக்காக என்னை அழைத்தபோது அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய கதையில் நான் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடைய டெடிகேஷன் வேற லெவல்! சிவா, அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். படம் உங்களுக்கும் பிடிக்கும்" என்றார். *நடிகர்கள்:* சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். *தொழில்நுட்பக் குழு:* எழுத்து, இயக்கம்: ராம், ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம்...
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்!

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்!

News
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளார்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம்! டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான 'பறந்து போ' திரைப்படத்தின் முதல் உலக ப்ரத்யேக காட்சி 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது. 'பறந்து போ' திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பை உறுதிப்படுத்தும் விதமாய் முதல் காட்சி இருந்தது. ரோட்டர்டாமின் உறையும் குளிரிலும் அரங்கம் நிரம்பியது, மேலும் திரைப்படத்தின் இறுதியில் எழுந்த அரங்கம் அதிர்ந்த கைதட்டல்கள் பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததை உறுதிபடுத்தியது. இத்திரையிடலை இயக்குநர் ராமுடன், நடிகர் சிவா, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் ப்ரதீப் மில்ராய், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் கலந்துகொண்ட...
ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’

ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’

News
ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற பிரமிக்கத்தக்க வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றுமொரு அங்கிகாரத்தை பெற்றிருக்கிறது. ரொமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ் நெபோகா நகரத்தில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தேர்வாகியிருப்பது மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களை கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகி இருக்கிறது....
மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’!

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’!

News
46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’! மனதை நெகிழ வைக்கும் உணர்வுப்பூர்வமான படங்களை கொடுக்கக்கூடிய இயக்குநர் ராம் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அதேசமயம் தரமான கலைப்படைப்புகளை ரசிகர்களுக்கு பரிசளித்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் கூட்டணியில் தயாராகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின்பாலி கதாநாயகனாக, அஞ்சலி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் உலக அரங்கில் தனது பயணத்தை உத்வேகமும் உற்சாகமுமாக துவங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரியில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிக் ஸ்கிரீன் போட்டி பிரிவில் கலந்துகொண்டு பெரும் வரவேற்பையும் முத்திரையையும் பதித்தது. தற்போது ஏப்ரல் 19 முதல் 26 வரை நடைபெற உள்...
இயக்குநர் ராம் படத்திற்காக நிவின்பாலியுடன் இணைந்த சூரி!

இயக்குநர் ராம் படத்திற்காக நிவின்பாலியுடன் இணைந்த சூரி!

Uncategorized
"மாநாடு" படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக சுரேஷ் காமாட்சி தயாரித்து , இயக்குநர் ராம் இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் இயக்கிவரும் இந்தப்படத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வருகிறார். "ரிச்சி" படத்தைத் தொடர்ந்து அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். இந்தநிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சூரி இணைந்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜ...
ராம் இயக்கத்தில் நிவின்பாலி-அஞ்சலி!

ராம் இயக்கத்தில் நிவின்பாலி-அஞ்சலி!

News
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தனது திரையுலக பயணத்திலேயே மிகப்பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிலம்பரசன் TR.. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராம் டைரக்சனில் தனது ஐந்தாவது படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முத...
பேரன்பு படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பு

பேரன்பு படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பு

News
பனாஜி. நவம்பா் 27 கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழா இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக இந்தியன் பனோரமா பிரிவில் வங்க மற்றும் மலையாள மொழிப்படங்கள் ஐந்து அல்லது ஆறு இடம் பெற்று விடும். காரணம் இந்த மொழிகளில்தான் தரமான படங்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. தரமற்ற படங்கள் அதிக எண்ணிக்கையில் வரும் தமிழில் ஒரிரு படங்கள் இடம் பெற்றாலே பெரிய விஷயம். ராம் இயக்கிய பேரன்பு, ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட், அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் இந்த ஆண்டு இடம் பெற்றது பெருமைக்குரிய செய்தி மட்டுமின்றி பெருமகிழ்ச்சிக்குரியதுமாகும். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய ராமின் நான்காவது படைப்பு பேரன்பு. தமிழ்ப்படவுலகின் நம்பிக்கைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான ராம் இயக்கிய தங்க மீன்கள் படம் மூன்று தேசிய ...
பெரும் வரவேற்பு பெற்ற பேரன்பு

பெரும் வரவேற்பு பெற்ற பேரன்பு

News
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்படவிழாவில் பி.எல்.தேனப்பன் தயாரி்ப்பில் ராம் இயக்கத்தில் உருவான பேரன்பு படம் இந்தியன் பனோரமா பிிரிவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. படவிழாக் குழுவினர் சார்பில் ராம், தேனப்பன், சாதனா மூவருக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. தங்கமீன்கள் படத்தில் சிறுமியாக வந்து நம் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட சிறுமி சாதனா, பிரதான வேடத்தில் நடித்திருக்கும் பேரன்பின் படத்தின் நாயகன் மம்முட்டி என்ன காரணத்தாலோ இந்தத் திரையிடலில் பங்கு கொள்ளவில்லை....