போட்டோகிராபர் — விமர்சனம்
போட்டோகிராபர் — விமர்சனம்
கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மதிகெட்டான் சோலை என்ற பகுதியைப் பற்றி பல உண்மை கதைகளும் கட்டுக்கதைகளும் வழங்கப்படுவது இன்று வரை தொடர்கிறது அதே போல் அங்கு விளையும் ஒருவகை காளான் போதையை தரும் என்பதும் அதைத் தேடி பலர் வெளிநாட்டினர் வருவதும் பத்திரிகைகளில் அடிக்கடி வரும் செய்தி.
மதி கெட்டான் சோலையை மையக்கருவாக கொண்டும் போதை காளானை வைத்து சில காட்சிகளை அமைத்தும் உருவாக்கப்பட்ட திரில்லர் வகை படம் தான் போட்டோகிராபர்.
அறிவியலுக்குச் சவால் விடும் மர்மம், நெஞ்சை அதிரவைக்கும் அமானுஷ்யம், எகிற வைக்கும் திகில் திருப்பங்கள் போன்றவை வழக்கமான ஃபார்முலாதான், என்றாலும் சின்னச் சின்ன வித்தியாசங்களால் கவனம் ஈர்க்க முயன்றிருக்கிறது இந்த 'போட்டோகிராபர்'.
கேமரா மீது அளவில்லா காதல் கொண்ட வீரா என்ற இளைஞன்; காலடி எடுத்து வைத்தால் உயிரோடு மீள்வது குதிரைக்கொம்பு என்று...
