Friday, May 1

Tag: vijay antony

“அக்னி சிறகுகள்” படப்பிடிப்பு நிறைவு!

“அக்னி சிறகுகள்” படப்பிடிப்பு நிறைவு!

News
விஜய் ஆண்டனி, இயக்குநர் நவீன், நடிகை அக்‌ஷரா ஹாசன் மற்றும் “அக்னி சிறகுகள்” படத்தின் மொத்தப்படக்குழுவும் கொல்கத்தாவின் சூழலை கொண்டாடி எடுத்துக்கொண்ட செல்ஃபி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் தற்போது முழுப்படப்பிடிப்பும் முடிந்ததில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு. இயக்குநர் நவீன் இது குறித்து கூறியதாவது.... உலகம் முழுதுமே படப்பிடிப்பு செய்வது என்பதே தற்போது மிகவும் நெருக்கடியான சூழலாக இருந்து வருகிறது. படக்குழுவின் அயராத ஒத்துழைப்பே அனைவரும் இணைந்து இயங்குவதற்கு பெரும் ஊக்கமாக இருந்தது. “அக்னி சிறகுகள்” படத்திற்கு இப்படியானதொரு படக்குழு கிடைத்திருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றை கொல்கத்தாவில் தற்போது படமாக்கினோம். இத்துடன் படத்தின் முழுப்டப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது....
விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம்!

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம்!

News
விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடியிப்பு இன்று துவங்கியது . காந்தக்கோட்டை ,வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பிற்கு பிறகு TD ராஜா தயாரிக்கும்  ராஜவம்சம்  திரைப்படம் விரைவில்  வெளியாக இருக்கிறது .இதைத்தொடர்ந்து  இவர் தயாரிக்கும் பெயரிடாத படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார் . " மெட்ரோ " பட புகழ்  இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார் . இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார் . உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்  .இணை தயாரிப்பு - ராஜா சஞ்சய் . இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்...
இறுதி கட்ட படப்பிடிப்பில் “அக்னி சிறகுகள்”! 

இறுதி கட்ட படப்பிடிப்பில் “அக்னி சிறகுகள்”! 

Uncategorized
அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன் என வியப்பில் ஆழ்த்தும் நட்சத்திர கூட்டம் இணைந்திருக்கும் “அக்னி சிறகுகள்” திரைப்படம், இந்த ஆண்டின் உச்சபட்ச எதிர்பார்ப்பிகுரிய படமாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.  படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் மட்டுமன்றி படம்பிடிக்கப்படும் வித்திசயாசமான லொகேஷன்களாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது “அக்னி சிறகுகள்”. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. படத்தின் முக்கியமான பொறிபறக்கும்  ஆக்‌ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ, பீட்டர்ஸ்ஃபர்க் ஆகிய இடங்களிலும் அதனைத் தொடர்ந்து  கஜகஸ்தானின் அல்மாட்டி நகரிலும்  படமாக்கப்பட்டு வருகிறது. உச்சபட்ச ஆச்சர்யமாக கஜகஸ்தானில் படமாக்கப்படும் இந்தியாவின்...
கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’!

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’!

News
'அக்னி சிறகுகள்' படப்பிடிப்பு முடியும்போது இப்படக்குழுவினரிடமிருந்து  சுற்றுலா தொடர்பாக ஏராளமான சுவையான மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெறலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு கல்கத்தாவில் தொடங்கி கஜகஸ்தான்வரை படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர். 'அக்னி சிறகுகள்' படக்குழு கல்கத்தாவின் நெரிசல் மிகுந்த வீதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு, இப்போது ரஷ்யாவிலுள்ள கஜகஸ்தானில் இரண்டாம் கட்டப் படிப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர். அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் போன்ற நட்சத்திரங்களுடன் படத்தின் பெரும் பகுதியை இங்கே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன். பூலோக சொர்கம் என்று சொல்லத் தக்க வகையில் அமைந்தருக்கும் கஜகஸ்தானில் உள்ள அல்மதி நகரத்தில் படப்பிடப்பு நடந்திருக்கிறது. இது குறித்து விவரித்த அக்னி சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன்.. "அல்மதி நகரி...
விஜய் ஆண்டனியுடன் இணைந்த  ஸ்ரீதிவ்யா

விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஸ்ரீதிவ்யா

News
கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் ஆகியோர் இணைந்து, Infiniti Film Ventures சார்பில் தயாரிக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். முன் தயாரிப்புப் பணிகள் மும்மரமாக நடந்து வரும் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியிருப்பது தயாரிப்பு நிறுவனம் சார்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அல்லு சிரிஷ் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத் தக்கது. விஜய் மில்டன் கதை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார் கதிர். எதிர்வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பை துவக்கி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருக்கிறது....

விஜய் ஆண்டனி நடிக்கும் “காக்கி” படத்தின் உரிமைகளை கைப்பற்றிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்

News
இயக்குனர் விஜய் மில்டன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், அனுபவம் வாயந்த இயக்குனர் ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் "காக்கி" திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியிருக்கிறது. விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா சன் டீவி புகழ்'கதிர்,ஆகியோரை முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் "காக்கி", ஒரு பன்முகத் திறமைகள் கொண்ட பல நட்சத்திரக் கலவை. ஜீன் மாதத்தில் துவங்கி ஏறத்தாழ 50 சதவீத படப்பிடிப்பு வேலைகள் ஷிமோகா , பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில் நிறைவடைந்திருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஏ.செந்தில் குமார் இயக்கத்தில், பிரபலமான ஒளிப்பதிவாளர்...
விழிப்புணர்வு பயணத்தில் விஜய்ஆண்டனி !

விழிப்புணர்வு பயணத்தில் விஜய்ஆண்டனி !

News
தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை சார்பாக இன்று ஜூன் 12 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர் கபில் மற்றும் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய்அண்டனி, முன்னாள் பெப்சி தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பெப்ஸி சிவா ஆகியோர் கலந்துகொண்டு " மெட்ரோ தொடர்வண்டி விழிப்புணர்வு பயணத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் டி.எம்.எஸ்சிலிருந்து ,ஏர்போர்ட் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தனர். விழாவில் விஜய் ஆண்டனி பேசியது.. எந்த குழந்தையும் சிறு வயதில் வேலைக்கு செல்ல கூடாது. நல்லா படிக்கணும் சந்தோஷமா வாழனும். குழந்தைகள் உருவாக்குவதுதான் வருங்கால இந்தியா அதனால் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும். குழந்தை தொழிலாலர் இல்லாத நிலை வரவேண்டும் என்றார்....