Wednesday, October 21

சூழல் 2 _ விமர்சனம்

Loading

சூழல் 2_  விமர்சனம்

புஷ்கர் காயத்ரி உருவாக்கத்தில் வெளியாகி,  ரசிகர்களிடைய மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ‘சுழல்’ தொடரின் இரண்டாம் பாகம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது.

வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான  லால் தனது கடற்கரை கெஸ்ட் ஹவுசிங் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

அந்த அறையில் கௌரி கிஷன் கையில் துப்பாக்கியுடன் பிடிபடுகிறார். ஆனால் அவர் ஒளிந்திருந்த அலமாரி போன்ற அமைப்பு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கிறது. கௌரி கிஷன்தான் லாலைகொன்றார் என்றால் அவரை உள்ளே வைத்து பூட்டியது யார்? இப்படி ஒரு சஸ்பென்சுடன் துவங்குகிறது இந்தத் தொடர்.

வெவ்வேறு ஊர்களில் இருக்கும் வெவ்வேறு காவல் நிலையங்களில் ஏழு பெண்கள் தாங்கள்தான் லாலை கொலை செய்ததாக கூறி சரணடைகிறார்கள்.

இவர்கள் ஏழு பேருமே ஒரே விதமான வாக்குமூலத்தை வார்த்தை மாறாமல் கூறுகிறார்கள்.

தொடர்ந்து விரியும் காட்சிகள் சிறுகச் சிறுக பார்வையாளர்களை இருக்கை நுனிக்கே இழுத்து வருகிறது.

ஆண்களின் சிறைச்சாலை மற்றும்  சிறை வாழ்க்கை பல படங்களில் விரிவாக காட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் பெண் கைதிகளின் சிறைச்சாலை இந்த அளவுக்கு விரிவாக எந்த திரைப்படத்திலுமோ தொலைக்காட்சி தொடரிலோ காட்டப்படவில்லை.

பிரதான பாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நம் மனதில் பதிகிறார். மற்றும் லால், கதிர்,  சரவணன் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து திறம்பட நடித்திருக்கின்றனர்.

புஷ்கர் காயத்ரி எழுத்தில் உருவான இத்தொடரை குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா மற்றும் சார்ஜன் கே எம் எபிசோட் டைரக்டர்களாக பொறுப்பேற்று இயக்கி இருக்கின்றனர்.

துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் விறுவிறுப்பு குறையாத காட்சி அமைப்புகளே இந்தத் தொடரின் பலம். சிறுமியர்கள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் கடத்தல் போன்ற பற்றி எரியும் தற்கால பிரச்சினைகள் கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. சாம் சியின் பின்னணி இசையும், ஆபிரகாம் ஜோசப்பின் ஒளிப்பதிவும் படத்துக்கு படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றன.

சஸ்பென்ஸ் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கவரும் அருமையான இணைய தொடர் சூழல் 2.

மதிப்பெண் 4/5