Friday, May 1

‘டங்கி’ _ திரைப்பட விமர்சனம்

Loading

ஷாருக்கான் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும் மற்றொரு தரமான பொழுதுபோக்கு படமாக வெளியாகியிருக்கிறது டங்கி.

பஞ்சாபில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் வசிக்கும் டாப்ஸி மற்றும் அவரது நண்பர்களுக்கு எப்படியாவது லண்டனில் குடியேறி அங்கு வசிக்க வேண்டும் என்பது ஆசை.

ராணுவ வீரரான ஷாருக் கானும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார்.

டாப்ஸி மற்றும் அவரது குழுவினர் லண்டனுக்குச் செல்வதில் ஒரு சிக்கல்.

காரணம், அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். ஆங்கிலம் பேச முடியாது. எனவே அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது.

சட்டத்தை மீறி குடியேற்றம் செய்யும் டங்கி முறையில் டாப்ஸி மற்றும் அவரது குழுவினர் லண்டன் செல்லும் முயற்சி வெற்றி பெற்றதா என்பதை சுவைபட விளக்கம் படம்தான் டங்கி.

படத்தின் முதல் பாதி நகைச்சுவையாகவும், இரண்டாவது பாதி உணர்ச்சிகரமாகவும் இருக்கிறது. இரண்டுமே ரசிக்க தக்க வித்த்தில் இருப்பதுதான் படத்தின் சிறப்பு.

லண்டன் விசாவுக்காக நேரகாணல்  நடத்தும் காட்சிகளில் நகைச்சுவை நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

பொதுவாக ஷாருக்கான் படங்களில் அவரே டைட்டில் கார்டில் இருந்து எண்ட் கார்டு வரை படத்தை ஆக்கிரமித்து இருப்பார்.

ஆனால் டங்கி படத்தில் அவ்வாறு இல்லை. டாப்ஸிக்குதான் முக்கியத்துவம் அதிகம்.

இதனால்தானோ என்னவோ படத்தின் டைட்டில் கார்டு போடும்போது ஷாருக் கான் பெயருக்கு முன்பாகவே டாப்ஸி பெயரை போடுகிறார்கள்.

குறைந்த காட்சிகளே வந்தாலும் முத்திரை பதிக்கும் வகையில் நடித்த விக்கி கவசம், மற்றும் நண்பர்களாக வரும் விக்ரம் கோச்சர் அணில் கிரோவர் ஆகியோர் நினைவில் நிற்கிறார்கள்.

முரளிதரன், மனுஷ் நந்தன், அமித்ராய்குமார் பங்கஜ் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

அமந் பண்டிட்டின் பின்னணி இசை கவனத்தை ஈர்க்கிறது.

ராஜ்குமார் ஹிரானியின் திரைக்கதை அமைப்பும், இயக்கமும் படத்தை சற்றும் போர் அடிக்காத வகையில் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. தவறவிடாமல் பார்த்து ரசிக்கத்தக்க படம் டங்கி.