Friday, October 30

லாந்தர் _ விமர்சனம்

Loading

லாந்தர் _ விமர்சனம்

விதார்த் நடிப்பில், ஷாஜி சலீம் இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம் ‘லாந்தர்’ .

கோவை மாநகரில் உதவி காவல் ஆணையராக பணிபுகிரிறார் அரவிந்த் (விதார்த்). இவர், மிக நேர்மையான அதிகாரி.
ஒரு நாள் இரவு கருப்பு ரெயின் கோட் அணிந்த ஒரு சைக்கோ மனிதன் ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி கண்ணில் படுவோரை எல்லாம் கொடூரமாகத் தாக்கி வருகிறான்.

இவனைப் பிடிக்கும் முயற்சியில் சில காவல் அதிகாரிகளும் படுகாயம் அடைகிறார்கள். ஒருவன் மீது சந்தேகம் அடைந்து விரட்டி செல்கின்றனர் காவலர்கள்.

அவனோ, காவல் துறை வாகனம் மோதி இறந்துவிடுகிறான்.
அதன் பிறகும் கொலைகள் தொடர்கின்றன. ஒரிஜினல் கொலைகாரன் பட்டுக்கோட்டையில் இருப்பதாக ஒரு தகவல் கிடைக்கிறது.
அந்த சைக்கோ கொலைகாரனை விதார்த் பிடித்தாரா? கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள்.

விதார்த் வழக்கம் போலவே சிறப்பாக நடித்து உள்ளார். கண்டிப்பான போலீஸ் அதிகாரி.. பாசமான கணவன் என்று தூள் பரத்தி இருக்கிறார்.

சஹானா, ஸ்வேதா என இரண்டு ஹீரோயின்கள். இவர்களில் மஞ்சுவாக வரும் சஹானா, நடிப்பில் கவர்கிறார். டென்சன், காதல் என பல உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

ஞானசௌந்தரின் ஒளிப்பதிவும், பிரவீனின் இசையும் படத்தில் ஒன்ற வைக்கின்றன. சிறப்பு.

படம் ஆரம்பித்ததில் இருந்து வேகம்.. வேகம்.. வேகம் தான். சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார் லாந்தர் படத்தை எழுதி இயக்கி இருக்கும் ஷாஜி சலீம். இடைவேளை வந்ததே தெரியவில்லை.

இரண்டாவது பாதி ஆரம்பித்த உடனேயே கொலைகாரன் யார் என்று சொல்லிவிடுவதால் படத்தில் சுவாரசியம் குறைந்து விடுகிறது. வேறு ஏதாவது ட்விஸ்ட் இருக்குமா என்று பார்த்தால்.. அப்படி ஏதும் இல்லை. பிளாஷ் பேக் காட்சிகளும் அத்தனை சுவாரஸ்யம் இல்லை.

மொத்தத்தில் த்ரில் பட ரசிகர்களுக்கான திரைப்படம்.