Friday, May 1

தண்டகாரண்யம் _ விமர்சனம்

Loading

தண்டகாரண்யம் _ விமர்சனம்

PRODUCED BY

*S. SAI DEVANAND*
*S. SAI VENKATESWARAN*
*PA.RANJITH

*WRITER – DIRECTOR* ATHIYAN AATHIRAI ,

DOP – PRATHEEP KALIRAJA

MUSIC – JUSTIN PRABHAKARAN

EDITOR – SELVA RK

ART – T. RAMALINGAM

*Artiste*
Dinesh
Kalaiyarasan
Dancing rose Shabeer
Balasaravanan
Rythvika
Vinsu Sam
Arul doss
Muthukumar
Yuvan mayilsamy

ACTION – STUNNER SAM, A.S.SUDESHKUMAR, PC STUNTS

LYRICS – UMADEVI, THANIKODI

இயக்குநர் அதியன் ஆதிரையின் உரத்த சிந்தனையில் உருவாகியிருக்கும்  தண்டகாருண்யம் திரைப்படம்,  ள்ளத்தை உருக்கும் வகையிலும் உதிரத்தை கொதிக்கச் செய்யும் வகையிலும் படமாக்கப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி வனப்பகுதியில் மனைவி ரித்விகா, தம்பி கலையரசன் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார் தினேஷ்.
தீவிரவாதிகளுக்கு மறுவாழ்வு தருவதற்காக மத்திய அரசு உருவாக்கிய சிறப்பு பாதுகாப்பு படையில் கலையரசனை பணியில் சேர்க்கிறார் தினேஷ்.

பயிற்சி மையத்தில் பல கொடூர துன்பங்களை எதிர்கொள்கிறார் கலையரசன்.

அப்பாவிகள் மீது தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தி அவர்களுக்கு எண்ணற்ற கொடுமைகளை இழைக்கின்றனர் அரசு அதிகாரிகள்.

வாழ்வாதாரத்துக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் போராடும் எளிய மக்கள், எண்ணற்ற இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.

பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளை அப்பட்டமாக தன் நடிப்பில் வெளிக்கொண்டு வந்திருக்கும் தினேஷ் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப விஸ்வரூபம் எடுத்து வெடிக்கும் காட்சியில் முத்திரை பதித்திருக்கிறார் தினேஷ்.

கலையரசன்  பயிற்சி முகாமில் சித்திரவதை அனுபவிக்கும் காட்சிகளில் நெஞ்சை உருக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.

ஆழமான இந்த பாத்திரப்படைப்புக்கு அவரது அனுபவமிக்க நடிப்பு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது.

இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியை அப்படியே தன் கேமராவில் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா.

ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு உயிரோட்டமாக அமைந்து கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

வில்லனாக வந்தாலும் இறுதிக் காட்சியில் சபீர் கல்லரக்கல் உருக வைத்து விடுகிறார்.

அப்பா வேடத்தில் வரும் சங்ககிரி மாணிக்கம், ரித்விகா, பால சரவணன்,  அருள் தாஸ், முத்துக்குமார், யுவன் மயில்சாமி ஆகியோரும் இயல்பான நடிப்பால் நம் நெஞ்சில் நிறைகிறார்கள். உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் சிறப்பு பெறும் தண்டக்காரண்யம் உண்மைக்கு நெருக்கமாக நிற்கும் படைப்பு.

மதிப்பெண் 4/5